blank'/> muhilneel: புதிர்-1

Monday, November 21, 2011

புதிர்-1

1) அண்ணாச்சிக்கு மூன்று மகன்கள். அவருக்கு நெல்லையில் சொத்தாக சொந்தமாக 17 வீடுகள். அவருடைய உயிலில் சொத்தில் மூத்த மகனுக்கு 1 /2 பங்கும், இரண்டாவது மகனுக்கு 1 /3 பங்கும் மற்றும் மூன்றாவது மகனுக்கு
1 /9 பங்கும் கொடுப்பதாக எழுதி வைத்தார். முழு வீடுகளாக வேறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நிபந்தனை. மகன்களுக்கு ஒரே குழப்பம். அப்பாவிற்கு இருந்த கணித அறிவு நமக்கு இல்லையே என்று.உங்களைக் கூப்பிட்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னால் எப்படி தீர்த்து வைப்பீர்கள்?

2) ஒரு விடுதியில் சில அறைகள் இருந்தன.பயணிகள் சிலர் அறைக்கு ஒருவர் வீதம் தங்க 6 பயணிகள் மீதம் இருந்தனர்.அறைக்கு இருவர் வீதம் தங்க 4 அறைகள் மீதம் இருந்தன.என்றால் அறைகள் எத்தனை, பயணிகள் எத்தனை?

3) வரிசையாக இருந்த ஐந்து கூடைகளில் முதல் கூடையில் சில பழங்கள் இருந்தன.இரண்டாம் கூடையில் முதலாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.மூன்றாம் கூடையில் இரண்டாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.நான்காம் கூடையில் மூன்றாம் கூடையை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.ஐந்தாவது கூடையிலும் நான்காவது கூடையைவிட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன.மொத்த பழங்களின் எண்ணிக்கை நூறு என்றால் ஒவ்வொரு கூடைகளிலும் எவ்வளவு பழங்கள் இருந்தன?

4) ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை.
ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.
ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.
அது என்ன???? 

5) ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


6) ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் ...அவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள் ..அவர்களில் இளையவன் மூத்தவனை விட இரண்டு நாட்கள் முன்னரே பிறந்த நாள் கொண்டாடுகிறான் ..அது எப்படி ?


7) இந்த பூமியில் Today என்பது எப்போதும் Yesterday க்கு பின்னர்தான் வரும். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் Today க்கு பின்னர் Yesterday வரும். அது எங்கே?


8) ஒரு கடிகாரத்தில் ஆறு மணிக்கு ஆறு முறை மணி அடிக்கும்போது முதல் மணிக்கும் கடைசி மணிக்கும் உள்ள இடைவெளி 30 வினாடிகள் எனில், 12 மணிக்கு எத்தனை நேரம் மணி அடிக்கும் அந்த கடிகாரத்தில் ?



விடை 

No comments:

Post a Comment