blank'/> muhilneel: புதிர் 1- விடை

புதிர் 1- விடை

1)என்னோட வீடு ஒண்ணை சேர்த்து 18 வீடாக்குவேன்.முதல் பையனுக்கு 9 வீடுகள், இரண்டாமவனுக்கு 6 வீடுகள், மூன்றாமவனுக்கு 2 வீடுகள் கொடுத்துட்டு என்னோட வீட்டை திரும்ப எடுத்துக்குவேன்.

2)பயணிகள் = x ; அறைகள் = y என்க
அறைக்கு ஒருவராக தங்கும் போது  6 பயணிகள் மீதம் இருந்தனர்.
எனவே x - 6 = y ----------->சமன்பாடு 1
அறைக்கு இருவராக தங்கும் போது  4 அறைகள் மீதம் இருந்தன.
எனவே x / 2 = y - 4 ----------->சமன்பாடு 2
முதல் சமன்பாட்டின்  y இன் மதிப்பை இரண்டாவது சமன்பாட்டில் பயன்படுத்தவும்.
இப்போது இரண்டாவது சமன்பாடு,
x / 2 = x - 6 -4 என்றாகும். x /2 = x - 10
x = 2x - 20
x - 2x = - 20
-x = -20 ; x = 20 .
x = 20 என்பதை சமன்பாடு 1 அல்லது 2 இல் பயன்படுத்தவும்.
20 - 6 = 14 . ஆகவே பயணிகள் 20 ; அறைகள் 14 .

3) கூடை ஒன்றில் உள்ள பழங்கள் = x என்க.
கூடை இரண்டில் உள்ள பழங்கள் = x + 6
கூடை மூன்றில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 = x + 12
கூடை நான்கில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 + 6 = x + 18
கூடை ஐந்தில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 + 6 + 6 = x + 24
மொத்தப் பழங்களின் எண்ணிக்கை = 100
x+x+6+x+12+x+18+x+24=100
5x+60=100; 5x = 40; x=8.
கூடை ஒன்றில் உள்ள பழங்கள் = 8
கூடை இரண்டில் உள்ள பழங்கள் = x + 6 = 8 + 6 = 14
கூடை மூன்றில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 = x + 12 = 8+12 = 20
கூடை நான்கில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 + 6 = x + 18 = 8 + 18 = 26
கூடை ஐந்தில் உள்ள பழங்கள் = (x + 6 ) + 6 + 6 + 6 = x + 24 = 8 + 24 = 32
மொத்தப் பழங்கள் = 100.
4) சவப்பெட்டி
5) விரல்கள்
6)இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் பிப்ரவரி 28ஆம் தேதி பின்னிரவிலும்,இன்னொருவர் மார்ச் முதல் தேதி விடியற் காலையிலும் பிறந்திருப்பார்கள்.அவர்கள் பிறந்தது சர்வதேச நாள் எல்லையைக் (International Date Line) கடந்த போது.. (கப்பல்/ விமானத்தில்)[ஜப்பான் --> அமெரிக்கா, உதாரணமாக]மூத்தவன் கிழக்குப் பக்கத்தில் பிறந்தான் (மார்ச் 1).. இளையவனோ மேற்கில்.. அங்கு முந்தைய நாள் ஆகையால்.. பிப்ரவரி 28!!

7) Dictionary

8) 66 seconds

--
P.Tamizh Muhil