1.கொதிக்கும் கிணற்றில் குதிப்பானாம்;கூச்சல் இல்லாமல் குளிப்பானாம். - அவன் யார்?
2 .கத்திபோல் இலை இருக்கும்;கவரிமான் பூப்பூக்கும்;தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும். - அது என்ன?
3 .செக்கச் சிவந்திருப்பாள்;செவ்வாழை போல் இருப்பாள்;வாலும் முளைத்திருப்பாள்;வந்திருப்பாள் சந்தையிலே. - அவள் யார்?
4 . பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது - அது என்ன?
5 .அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி.
பாதிநாள் குறைவாள் பாதிநாள் வளர்வாள். - அது என்ன?
பாதிநாள் குறைவாள் பாதிநாள் வளர்வாள். - அது என்ன?
6 . ஆலமரம் தூங்க;அவனியெல்லாம் தூங்க;சீரங்கம் தூங்க;
திருப்பாற்கடல் தூங்க;ஒருவன் மட்டும் தூங்கவில்லை. - அவன் யார்?
திருப்பாற்கடல் தூங்க;ஒருவன் மட்டும் தூங்கவில்லை. - அவன் யார்?
7 . ஒல்லியான மனிதன்;ஒரே காது மனிதன்;அவன் காது போனால்;
ஏது பயன்? - அவன் யார்?
ஏது பயன்? - அவன் யார்?
8 . காட்டுக்குப் போனேன்;இரண்டு விறகு கொண்டு வந்தேன்;பகலிலே ஒன்று ,
இரவிலே ஒன்று எரித்தேன். - அது என்ன?
இரவிலே ஒன்று எரித்தேன். - அது என்ன?
9 . மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். - அது என்ன?
10 .சுருக்கென்று குத்தும் முள்;பொறுக்க முடியாது - அது என்ன?
11 .மாவிலே பழுத்த பழம்;மக்கள் விரும்பும் பழம். அது என்ன?
12 . கண் சிமிட்டும் ஒன்று;மணி அடிக்கும் மற்றொன்று;கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. - அது என்ன?
13 . குண்டோதரன் வயிற்றிலே,குள்ளன் நுழைகிறான். - அவன் யார்?
14 . பார்த்ததோ இரண்டு பேர்,எடுத்ததோ பத்துப் பேர்,ருசி பார்த்ததோ ஒருத்தன். - அவர்கள் யார்?
15 . காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவாள்;முக்காடு போட்டால்
சொக்காயில் தொங்குவாள். - அவள் யார்?
சொக்காயில் தொங்குவாள். - அவள் யார்?
16 .கொத்தாரோ தச்சரோ கட்டாத கோபுரம்;சின்னதாயிருக்கும் சித்திரக் கோபுரம். - அது என்ன?
17 .மூட்டை தூக்கி முத்தையன் நத்தையல்ல;தண்ணீரில் இருக்கும்
தத்தையன் தவளையல்ல. - அவன் யார்?
தத்தையன் தவளையல்ல. - அவன் யார்?
18 .சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்;விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்?
19 .தாளைக் கொடுத்தால் தின்னும்;தண்ணீர் குடித்தால் மடியும் - அது என்ன?
20 .கால் உண்டு;நடக்க மாட்டான்.முதுகு உண்டு;வளைக்க மாட்டான்.கை உண்டு;மடக்க மாட்டான். - அவன் யார்?
21 .இதயம் போல் துடிப்பிருக்கும்;இரவு பகல் விழித்திருக்கும். - அது என்ன?
22 .கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும். - அது என்ன?
23 .எத்தனை தடவை திறந்து முடினாலும் சின்னச் சத்தம் கூட தராத கதவுகள். - அது என்ன?
24 .கையில்லாமல் நீந்துவான்;கால் இல்லாமல் ஓடுவான். - அவன் யார்?
25 .ஓகோ மரத்திலே,உச்சாணிக் கிளையிலே,ஓட்டுச் சட்டியிலே
களிமண் இருக்கிறது. - அது என்ன?
களிமண் இருக்கிறது. - அது என்ன?
26 .ஒரு ஊருக்கு ஐந்து வழி - அது என்ன?
27 .வாசலில் வந்து நின்றவரை வரவேற்க ஆளில்லை - அவர் யார்?
28 .காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்;காக்காய்ம் தின்னவில்லை;
குருவியும் தின்னவில்லை - அது என்ன?
குருவியும் தின்னவில்லை - அது என்ன?
29 .இத்தனூண்டு சித்தாளுக்கு,ஏழு சுற்றுக் கண்டாங்கி - அது யார்?
30 .உப்பை உண்டவன் உறங்காமல் அலைகிறான் - அவன் யார்?
31 .நூல் இல்லை; ஊசி உண்டு;வாயில்லை; பாட்டுப்பாடும் - அது என்ன?
32 .மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல.பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்லன். - அவன் யார்?
33 .பார்ப்பதற்கு ஐந்து கால்;எண்ணுவதற்கு நான்கு கால் - அது யார்?
34 .முத்து முத்துத் தோரணம் தரையில் விழுந்து ஓடுது - அது என்ன?
35 .கண்ணுண்டு; செவியில்லை.கண்டிடும்; கேட்டிடும் - அது என்ன?
36 .கழுத்துண்டு; கையில்லை.நாக்குண்டு; பேச்சில்லை.வாயுண்டு; அசைவில்லை.தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை. - அது என்ன?
37 .நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன்.நெருப்பைத் திண்பான்; நீரும் குடிப்பான் - அவன் யார்?
38 .ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் குடிக்காத நீர் - அது என்ன?
39 .ஆயிரம் குழந்தைகட்டு அரைஞாண் ஒன்று - அது என்ன?
40 .பாத்தி சிறு பாத்தி;பாய்வது கரு நீர்;வேரோ வெள்ளை வேர்;பூவோ செம்பூ - அது என்ன?
41 .வளைக்க முடியும்;ஒடிக்க முடியாது - அது என்ன?
42 .கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை - அது என்ன?
43 .வெள்ளை மாடு;வாலால் நீர் குடிக்குது - அது என்ன?
44 .உதைத்தாலும் அடித்தாலும்,ஒன்றாக இருக்கும் - அது என்ன ?
45 .பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்;எடுத்துப் பார்க்கலாம் - ஆனால்
தொடுத்துப் போட முடியாது - அது என்ன?
தொடுத்துப் போட முடியாது - அது என்ன?
46 .நாலு மூலைச் சதுரப் பெட்டி - அதன் மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி! அது என்ன?
47 . நாலு உலக்கை குத்திவர,இரண்டு முறம் புடைத்து வர,துடுப்புத் துளாவி
வர,துரை மக்கள் ஏறிவர. - அது என்ன?
வர,துரை மக்கள் ஏறிவர. - அது என்ன?
48 .இந்தப் பிள்ளை பெரியவனானால்,படிக்காமலே பலன் தருவான்! - அவன் யார்?
49 .உயிர் இல்லாப் பறவை;உலகைச் சுற்றி வருது! - அது என்ன?
50 .இருந்தாலும், பறந்தாலும், இறந்தாலும் இறக்கை மடக்காத பறவை - அது என்ன பறவை?
51 .நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது. - அது என்ன?
52 .எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது! - அது என்ன?
53 .கண்ணில் காண உருவம் உண்டு;கட்டிப் பிடிக்க உடல் இல்லை! - அது என்ன?
54 .சாம்பலாண்டியும் சந்தைக்கு வந்தான்;உச்சிக் குடுமியும் சந்தைக்கு
வந்தான்; ஒரு முதுகெலும்பனும் சந்தைக்கு வந்தான். அவர்கள் யார்?
வந்தான்; ஒரு முதுகெலும்பனும் சந்தைக்கு வந்தான். அவர்கள் யார்?
55 .கடையிலே விற்கிற சாமான்களில் அத்தை ஒன்று;ஆணி ஒன்று - அவைகள் என்ன?
56 .தன்னைத் தானே பலிகொடுப்பான்;பிறருக்கு ஒளி கொடுப்பான். - அவன் யார்?
57 .இத்தனூண்டு சிட்டுக் குருவி,இழுத்து இழுத்து முள் அடைக்குது - அது என்ன?
58 .கட கடா குடு குடு , நடுவிலே பள்ளம்-அது என்ன?
58 .கட கடா குடு குடு , நடுவிலே பள்ளம்-அது என்ன?
59 . இட்டேன்; எடுக்க முடியவில்லை.பூசினேன்; புடமுடியவில்லை. - அது என்ன?
60 .காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால்,காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான். - அவன் யார்?
61 .நாலு மூலை நாடகசாலை;நடுவிலிருக்கும் பாடகசாலை;ஆடும் பெண்கள் பதினாறு;ஆட்டி வைப்பவர் இரண்டுபேர். - அது என்ன?
62 .பிறக்கும் போது சுருண்டிருப்பாள்;பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். - அவள் யார்?
63 .குட்டி போடும்;ஆனால் எட்டப் பறக்கும் - அது என்ன?
64 .தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் தொட்டால் போது; ஒட்டிக் கொள்வான். - அவன் யார்?
65 .ஓடிப் படர்வேன்; கொடியல்ல.ஒளிமிக உண்டு; நிலவல்ல.மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல. - நான் யார் ?
66 .செடியில் விளையாத பஞ்சு;தறியில் நூற்காத நூல்;கையில் தொடாத துணி! - அது என்ன?
67 .உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்லன்.உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்லன்.உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்லன் - அவன் யார்?
68 .காலும் இல்லை;கையும் இல்லை;காடும் மலையும் நெடுகச் செல்வான். அவன் யார்?
69 .இரவல் கிடைக்காது;இரவில் கிடைக்கும். - அது என்ன?
70 .வெளியே வெள்ளிக் கட்டி;உள்ளே தங்கக் கட்டி - அது என்ன?
71 .பாட்டுப்பாடி வருவான்;பட்டென்று அடித்தால் சாவான்! - அவன் யார்?
72 .வெள்ளை வயலிலே கறுப்புவிதை.கண்ணால் பார்த்தேன்;கையால் எடுக்க முடியவில்லை! - அது என்ன?
73 .நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு. - அது யாரு?
74 .பச்சை பாம்பு கல்லைத் தூக்குது! - இது என்ன?
75 .மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! - அது யாரு?
76 .எங்கள் ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பத்து வாழை மரங்கள் -
அவைகளை ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது. - அவை என்ன?
அவைகளை ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது. - அவை என்ன?
77 .இந்த ஊரிலே அடிபட்டவன்;அடுத்த ஊரிலே போய்ச் சொல்கிறான். - அவன் யார்?
78 .இரவும் பகலும் ஓய்வில்லை;அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. - அவன் யார்?
79 .அம்மான் வீட்டுத் தோட்டத்திலே,பட்டாக்கத்தி தொங்குது. - அது என்ன?
80 .கிண்ணம் போல் - பூ பூக்கும்.கிள்ளி முடிக்க முடியாது... - அது என்ன பூ?
81 .ஒற்றைக்கால் கறுப்பனுக்கு எட்டுக் கை! - அது என்ன?
82 .அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.... - அது என்ன?
83 . பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது. - அது என்ன?
84 .ஊசி போல் இலையிருக்கும்;ருத்ராட்சம் போல் காய் காய்க்கும். - அது என்ன மரம்?
85 .ஆற்று மணலை அள்ளித் தின்போம்;நாங்கள் ஒரு சாதி
வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி
ஓணானை போல் உரித்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி - இவுங்க யாரு?
வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி
ஓணானை போல் உரித்துத் தின்போம்;நாங்கள் ஒரு சாதி - இவுங்க யாரு?
86 .எட்டுக்கால் ஊன்றி;இருகால் படமெடுத்து;வட்டக் குடை பிடித்து வருகிறார் துரை மகனார்........ - இவர் யார்?
87 .விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது! - அது என்ன?
88 .மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்கு பூசை ஆகுது! - அது என்ன?
89 .பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக் கையிலே ஒரு டை;தலையிலே ஒரு டை. - அது என்ன?
90 .பரட்டைத்தலை மாமியாருக்குப் பவளம் போல் மருமகள்! - அவள் யார்?
91 .பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்;விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... - அது என்ன?
92 .அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?
93 .இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?
94 .அதிவேகக் குதிரை, ஆடியபடி செல்லும் குதிரை போட்ட கோட்டைத் தாண்டாமல் ஓடும் அது என்ன?
95 .எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது அது என்ன?
96 . உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன?
97. ஒரே வயிற்றில் வாழ்ந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது என்ன?
98.இவன் வலை பின்னுவான் ஆனால் மீன் பிடிக்க மாட்டான் அவன் யார்?
97. ஒரே வயிற்றில் வாழ்ந்தாலும் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது என்ன?
98.இவன் வலை பின்னுவான் ஆனால் மீன் பிடிக்க மாட்டான் அவன் யார்?
99. அள்ள முடியும்;ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?
100.அள்ளவும் முடியாது;கிள்ளவும் முடியாது - அது என்ன?
.
No comments:
Post a Comment