blank'/> muhilneel: புதிர் 2- விடை

புதிர் 2- விடை

1) அந்த ராஜா குகையில் உள்ள வெளிப்புற சுவற்றில் விலங்குகள் பறவைகள் மனிதர்கள் ஆகியோரின் உறுப்புகளை பலவாறாக வரைந்து வைத்திருந்தான்.அதை வாசித்துப் பார்த்த தமிழ் புலமை பெற்ற இளவரசன, குகையின் வாசலில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கவனித்தானாம். அதில் ”நான் குகை என்னை தொடு” எனறிருந்தை”நான்கு கை என்னை தொடு”என்று பொருள்பட வாசித்துப் பார்த்து குகையில் அப்படிப்பட்ட படம் இருக்கிறதா என கண்டு, நான்கு கைகள் வரையப்பட்ட படத்தை கண்டு அதை ஒவ்வொன்றாக அழுத்தவே கதவு திறக்க இளவரசியை சொந்தமாகிக் கொண்டானாம்.

 இதுதான் விடை.

2) சவப் பெட்டி 

3) விரல்கள் 

4) 1.மகிழ்ச்சி -சோகம்,நற்பணி 2.ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)               3.வதந்தீ,மனம்,கற்பனை

5)பழங்காலத்தில் ஒரு இராஜா காட்டுக்கு வெட்டையாட சென்றானாம். அங்கே ஒரு முயல் ஒன்று இரை தேடிக் கொண்டு இருந்ததாம். அந்த சமயத்தில் ஒரு கழுகு கீழே பறந்து வந்து, தரையில் அதை பிடித்ததாம். இப்போது முயலுக்கு 2 கண்கள், கழுகுக்கு 2 கண்கள், முயலுக்கு 4கால்கள், கழுகுக்கு 2 கால்கள் என மொத்தம் 4 கண்கள் 6 கால்கள் தரையில் இருக்கவும், அது மேலே எழுந்து அதை தூக்கிக் கொண்டு பறக்கின்ற போது, 4 கண்கள், 6 கால்கள். எனவே, இராஜா இக்காட்சியைக் கண்டு இப்படிப்பட்ட புதிர்  கதையை தன் நாட்டு மக்களுக்கு சொல்லி இதை விடுவிப்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் என அறிவித்தானாம்.
இதுதான் தாத்தா சொன்ன புதிர் கதை.

6) நாயின் உரிமையாளர் நாயின் வாலைப் பிடித்துக்கொண்டு ஒரு சுழற்று சுழற்றி தரையில் அடித்து கொன்று இருப்பார். இந்த முறையில் அரசன் நாயின் உரிமையாளரை கொல்ல முடியாது.

7) பூனைக்கு பதினேழு கால் , 17x1/4 = 4 1/4, எனவே , பூனைக்கு 4 கால் .பூனையைப் போல் யானைக்கும் 4 கால் .
புள்ளினத்துக்கு ஒன்பது கால், 9x1/4 = 2 1/4, எனவே, பறவைகளுக்கு 2 கால்.
ஆடுக்கு கால் இல்லை...ஆடு என்ற சொல்லில் துணைக்கால் இல்லை, எனவே ஆடுக்கு கால் இல்லை.
மாடு என்ற சொல்லில் ஒற்றைக் கொம்போ, இரட்டைக் கொம்போ இல்லை, எனவே மாட்டுக்கு கொம்பில்லை.

8) முக்கால் என்பது கைத்தடி.மூவிரண்டு ஆறு.ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள்.கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் போகயிலே,நெருஞ்சி முள் ஒன்று காலில் குத்தியது என்பது இதன் பொருள்.

பத்துரதன் = தசரதன்
பத்துரதன் புத்திரன் =இராமன்
ராமனின் மித்திரன் (நண்பன்)=சுக்கிரீவன்
மித்திரனின்   சத்துரு = வாலி
புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினி(வாலியின் மனைவி )= தாரை
தாரை என்பதில் காலை எடுத்துவிட்டால் தரை நெருஞ்சி முள் குத்தியதற்க்கு வைத்தியம் தரையில் தேய்

9)விடை : புதையல்

  • முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும் - புதை + அல் => அல் -> இரவு ( அல்லும், பகலும்)
  • முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம் -பு + தையல் -> தையல் - பெண்
  • பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம் - புதை + அல் -> புதை
  • பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம் - > யல் +பு -> பு+யல் -> புயல்
  • சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி - பு + ல் - > புல்
  • தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்று -> தை
10) NUNU
11) 11131221133112132113212221.
12) மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள்.கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.
13) மதுரை
14) மக்காச்சோளம்

http://www.nilacharal.com/tamil/specials/tamil_pulavar_206.html