blank'/> muhilneel: June 2014

Monday, June 30, 2014

Recycled Plastic Bag Flowers


Inspired by the tutorial on Plastic Bag Flowers by Arpita Brijesh.

Tuesday, June 24, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? (தொடர் பதிவு)

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு என் நன்றிகள். இதோ, என் பதில்கள்.

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

               என்னுடைய நூறாவது பிறந்த நாளை என் நண்பர்கள்  உறவினர்கள் நினைவு கூர்வதை விண்ணுலகில் இருந்து கண்டு கழித்து, மகிழ்ச்சியில் திளைக்க விரும்புகிறேன்.
 
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

                நாளும் புதிது புதிதாக, என்னால் எவற்றையெல்லாம் என் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவையும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். கற்பதற்கு வயது ஓர் தடையா என்ன ?
 
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

              பேசப் பழகிக் கொண்டிருக்கும் என் மழலைச் செல்வம் இப்போது புதிதாய் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் வார்த்தை, "தக்காளி". அதை என் பிள்ளை சொல்லும் முறை கண்டு இரசித்து சிரித்தேன். 
     
4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

        நம்மையே அறியாமல் நம்மை கட்டிப் போடும் கணினி, கைபேசிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். சுற்றி இருக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் மனம் விட்டு பேச அதிக நேரம் கிடைக்கும்.

மண் பானையில் நீரை சேமித்து குளிர்ச்சியான நீராய் பருகலாம்.

மறந்து போன தென்னை ஓலை, பனை ஓலை, பிளாஸ்டிக் கை விசிறிகள் கைகொடுக்கும். மாலைப் பொழுதில், மொட்டை மாடியில் நின்றால், சிலு சிலுவென்று வீசும் காற்று உடலுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும்.
    
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

     கணவன் - மனைவி இருவரில் எவரும் உயர்ந்தவருமில்லை, தாழ்ந்தவருமில்லை. ஒருவரது கருத்திற்கும் உணர்வுகளுக்கும் மற்றவர் நிச்சயம் மதிப்பு கொடுக்க வேண்டும். புரிதலுடன் கூடிய பரஸ்பர அன்பே திருமண பந்தத்தில் அவசியம்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மதப் பிரச்சனை.

 மதம் மனிதனை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர, மதம் மனிதத்தினை, அன்பினை குலைத்திடக் கூடாது.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களிடம். பெற்றோர், உடன் பிறந்தோர், நெருங்கிய நண்பர்கள்.
 
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

இதைப் பற்றி அறிந்ததும் முதலில் ஆத்திரம் ஏற்படும். என்னைப் பற்றி தவறான தகவல் பரப்புகிறவர் எதற்காக இதைச் செய்கிறார் என்று யோசிப்பேன். நெருங்கியவர்களிடம் விவாதிப்பேன். இதனால், அவருக்கு ஏதோ அற்ப சந்தோசம் கிடைக்கிறது, மகிழ்ந்திருந்து விட்டுப் போகட்டும், எத்தனை காலம் நாம் அவருக்கு அவலாகப் போகிறோம், மெல்ல புதிய விஷயம் கிடைத்ததும், நம்மைப் பற்றிய பேச்சு பழையதாகிப் போய் விடும் என்று விட்டு விடுவேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

அந்த சமயத்தில் எதுவும் சொல்லாது ஆதராவாய் அவரது அருகில் இருந்தாலே, அவருக்கு அது பெரிய ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்குமென்றே நான் எண்ணுகிறேன்.
 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?  

கவிதைகள் கதைகள் உருவாக ஏற்ற நேரம் தனிமை. மனதில் தோன்றும் புதிய எண்ணங்களை குறிப்பெடுத்துக் கொண்டிருப்பேன். அல்லது, புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பேன். 

இந்தப் பதிவைத் தொடர நான் அழைக்கும் நட்புறவுகள் :

1. சகோதரி உஷா அன்பரசு அவர்கள்  
2.  சகோதரி ஞா. கலையரசி அவர்கள்  
3.  சகோதரி ஆதி வெங்கட் அவர்கள்  
4.  சகோதரி எழில் அவர்கள்  

5.  சகோதரி ஜெயஸ்ரீ சங்கர்  அவர்கள் 

Monday, June 23, 2014

Egg Shell Penguin
Materials Needed :


Cleaned and Dried egg shell 
Play Doh (Black, White and Red Colors)
Black Paint

Method:


Make a small opening at one end of the egg and empty the contents.
Clean the shell with water and allow it to dry.
Draw the  body and the wings of the Penguin.
Now Paint the shell black.
Allow it to dry.
Use the Play doh to make head, eyes, beak and feet of the bird and stick them.
Now the Penguin is done !!!


Linking this to  lessology-challenge-37-animal-kingdom

 

Wednesday, June 18, 2014

Cereal Box Animals

These animals were made using cereal box cardboards.Materials Needed

Elephant and Giraffe templates ( The templates can be downloaded from Pink Stripey Socks )
Scissors
Paint / color pencils / crayons
Pen / Pencil
Cereal box


Elephant Template 

The template and detailed instructions can be found here

Giraffe Template 

The template and the detailed instructions can be found here.Leslie, Thank you for the providing the detailed instructions.

 Linking this to  lessology-challenge-37-animal-kingdom

 

Sunday, June 15, 2014

என் பார்வையில் கண்ணதாசன்

Kannadasan 

பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல்கள், நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால், நிச்சயமாக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லலாம். இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை. அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு. கருத்தாழம் மிக்க பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத அற்புதப் படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை.
 
காதல் ஆயினும் சரி, தத்துவமாயினும் சரி, கவிஞரது கவிதை வரிகள் எல்லாமே சராசரி மனிதன் தனது வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால், கேட்பவர்களின் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்கிறது.  காலம் பல கடந்தும், இன்றளவும் நம் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன அவரது பாடல்கள்.

நிறப் பேதம் பார்த்து,  மனங்களை வருத்தும் மானுடர்கள் மத்தியில் வாழும் பெண்ணொருத்தி, தன் மனக்குமுறலைக் கண்ணனிடம் கொட்டுவதாகக் கவிஞர் எழுதியுள்ள  இந்தப் பாடலினுள் மாநிறம் அல்லது கருப்பு நிறத் தோல் கொண்ட  பெண்கள், தம்மையும் அச்சூழலில் பொருத்திப் பார்த்துக் கொள்ளுமளவுக்கு, மனத்துயரை அச்சூழலில் எவ்வளவு அழகாகத் தன் கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர்!

மனம் பார்க்க மறுப்போர் முன்
படைத்தாய் கண்ணா!
நிறம் பார்த்து வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா!
இனம் பார்த்து எனைச் சேர்க்க
மறந்தாய் கண்ணா!

மனித மனம் பச்சோந்தியைப் போன்றது. சந்தர்ப்பத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன் நிலையை மாற்றிக் கொள்வது.எடுத்த முடிவில் நிலையாக நில்லாதது. உயர்ந்த இடத்தில் இருக்கும் அனைத்துமே உயர்வானவை என்றும், எளிமையானவை அனைத்தும் தாழ்வானவை என்னும் மாயையை உண்மை என்று நம்புவது மனித மனம்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது நிம்மதியான உறக்கம். மனதினுள் எத்துணை பெரிய பாரம் ஏறிக்கொண்டு, உறக்கம்தனைக் கண்களை அண்ட விடாது செய்தாலும், கவிஞரின் மெல்லிய பாடல்கள் மயிலிறகாய் வருடி, நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடிவரும்படி செய்துவிடும். அத்தகைய பேராற்றல் கொண்டவை கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள்…

•பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
 பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
•மலர்ந்தும் மலராத பாதி மலர்
 போல வளரும் விழி வண்ணமே
•தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
 அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
•கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
 வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
•கண்ணே கலைமானே கன்னி மயில் என
 கண்டேன் உன்னை நானே

போன்ற பாடல்கள் பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகப் பெரியவர்கள் வரை  தன்வயப்படுத்தி, நித்திரையை அவர்கள் கண்வயப்படுத்தும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

மனித வாழ்க்கையை நான்கே வரிகளில் கவிஞர் எவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறார் பாருங்கள்.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம்
என்பதே தாய்மொழியாம்
மறந்தோம்
என்பதே நித்திரையாம்
மரணம்
என்பதே முடிவுரையாம். 

உன்னதமான காதலைச் சொல்ல இதைவிடவும் வேறு வார்த்தைகள் இருக்கின்றனவோ?

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
சொல்லாத
சொல்லுக்கு விலையேதும் இல்லை
ஒன்றோடு
ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள்
நமையன்றி வேறேதும் இல்லை
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும்
பொழுதோடும் உறவாட வேண்டும் 

கேட்கும் போதெல்லாம், நம்மையும் உணர்ச்சிவசப்படச்செய்து, கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள், தன்  கண்பட்டு விட்டதாலேயே தன் காதலனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டதோ என்றெண்ணி, காதலி படும் பாட்டை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் வரிகள். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்!

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ
அதை நானறியேன்
என்
கண்  பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ
அதை நானறியேன்.
புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்?

சிரிப்பு ! – இது மனித இனத்திற்கு இறைவன் அளித்த சிறப்பு. குழந்தைகளின் சிரிப்பைக் காணக் காண இன்பம் கரைபுரளும். அதே சிரிப்பைக் குழந்தை குமரியானதும் சிரித்தால் சொல்வார்கள் ” பொண்ணு சிரிச்சா போச்சு, புகையிலை விரிஞ்சாப் போச்சு “என்று. விதியையும் விரட்டி அடிக்கும் மதியும் சக்தியும் சிரிப்பிற்கு உண்டு என்று சிரிப்பைப் பற்றிக் கவிஞர் சொல்கிறார்.

குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக்
குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப்
பரிசு இந்த சிரிப்பு அல்லவா!
இது
பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா!
வேண்டும்
மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த
விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்

குடும்பம் என்ற அழகான கூட்டில் பறவைகளின் இனிமையான இசை வெள்ளம். கணவன், பிள்ளை இருவரையும் குழந்தைகளாகப் பாவித்து மனைவி பாடும் அழகானதோர் கீதம் கவிஞரின் கவிதை வெள்ளத்தில்.

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான்
படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக
இரு நெஞ்சம் துடிக்கின்றது – இதில்
யார்
கேட்டு என் பாட்டை முடிக்கின்றது.

பள்ளி, கல்லூரிகளில் நிகழும் பிரிவு உபசார விழாக்களில் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்குமோ?

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்
திரிந்த பறவைகளே”
எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று
காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டு
செல்வோமோ?”

இன்னும் எத்தனை எத்தனையோ….சொல்லிக் கொண்டே போகலாம்.
நமது வாழ்வில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் கவிஞரது பாடல்கள்  நிச்சயம் நம் நினைவுகளில் நிழலாடிச் சென்றிருக்கும். காதல், நட்பு, சகோதர பாசம், குடும்பம், குழந்தைகள், துயரம், சோகம் என்று ஏதேனும் ஓர் சூழலில் நம்மைக் காந்தமாய் கவர்ந்திழுக்கும்.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை” 

என்று  தீர்க்கதரிசியைப் போல் கவிஞர் அன்று சொன்னது எவ்வளவு உண்மை.காலத்தால், மக்களின் இரசனையில், கற்பனை, எண்ணங்கள், என்று அனைத்திலும் எத்துணை பெரிய மாற்றம் ஏற்பட்ட போதும், அவர் மறைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றளவும் நம்மிடையே தன்  பாடல்களினால் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இன்னும், காலம் பல கடந்தாலும், நிலையாக நம் மனங்களில், இனிய கவிதைகளாய் வாழப் போகிறவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.வல்லமை மின்னிதழ் நடத்தும் " என் பார்வையில் கண்ணதாசன்" என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

http://www.vallamai.com/?p=46904 


கட்டுரைக்கு கவிஞர் காவிரி மைந்தன் ஐயா அவர்களின் பின்னூட்டம்

மயிலிறகாய் வருடி, நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடிவரும்படி செய்துவிடும்!

என் பார்வையில் கண்ணதாசன்

அன்புநிறை தமிழ்முகில் நீலமேகம் அவர்களுக்கு..  
வல்லமை வாயிலாக கேட்டிருந்தபடி தாங்கள் அனுப்பிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை பற்றிய பின்னூட்டமிது.  பல்வேறு பணிகளுக்கிடையே இப்பணி காலதாமதமானது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
எண்ணத்தில் உறைந்திருக்கும் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என்பது எத்தனை சுகமான அனுபவம் என்பதை உங்கள் கட்டுரை உணர்த்தியது! 
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஏதும் பயிற்சி எடுத்தீர்களா? இயல்பாய் அவ்வகையில் உங்கள் கட்டுரை மிளிர்கிறது!
இயல்பான எண்ணமாய்.. எல்லோர் மனதிலும் இருப்பதையே உங்கள் கட்டுரையின் முதல்வரிகள் ஒப்புவித்தன..
“பொதுவாகதிரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்லஇன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப்பாடல்கள்
நாளை நம் நினைவில் நிற்குமா என்று கேட்டால்நிச்சயமாக இருக்க 
முடியாது என்று அடித்துச் சொல்லலாம்இன்றைய பாடல்கள் காளான்கள் போன்றவை.அவற்றிற்கான ஆயுட்காலம் மிகக் குறைவு.கருத்தாழம் மிக்க 
பாடல்களே காலமெலாம் நிலைத்து நிற்கும்காலத்தால் அழியாத அற்புதப்  
படைப்புகள் பலவற்றை நமக்குப் பெரும் பொக்கிஷங்களாகக் கொடுத்தவர் 
கவிஞர் கண்ணதாசன் என்பது நிதர்சனமான உண்மை.”
“காதல் ஆயினும் சரிதத்துவமாயினும் சரி,கவிஞரது கவிதை வரிகள் 
எல்லாமே சராசரி மனிதன் தனது வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் 
கொள்ளும் வகையில் இருக்கின்றபடியால்கேட்பவர்களின் மனதில் 
சட்டென்று ஒட்டிக் கொள்கிறது.  காலம் பல கடந்தும்இன்றளவும் நம் மனதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கின்றன அவரது பாடல்கள்.”
மனதினுள் எத்துணை பெரிய பாரம் ஏறிக்கொண்டுஉறக்கம் தனைக் கண்களை அண்ட விடாது செய்தாலும்கவிஞரின் மெல்லிய 
பாடல்கள் மயிலிறகாய் வருடி,நித்திராதேவி நம் கண்களைத் தேடி ஓடி வரும்படி செய்துவிடும்அத்தகைய பேராற்றல் கொண்டவை 
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.
உதாரணத்திற்குச் சில பாடல்கள்..
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

 பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே


மலர்ந்தும் மலராத பாதி மலர்

போல வளரும் விழி வண்ணமே


தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே

 அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


கண்ணே கலைமானே கன்னி மயில் என

 கண்டேன் உன்னை நானே


மனித வாழ்க்கையை நான்கே வரிகளில் கவிஞர் எவ்வளவு அழகாகவும்
 தெளிவாகவும் சொல்கிறார் பாருங்கள்.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்

பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.


உன்னதமான காதலைச் சொல்ல இதைவிடவும்வேறு வார்த்தைகள் 
இருக்கின்றனவோ?

சொல்லென்றும் மொழியென்றும்பொருளென்றும் இல்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லைசிரிப்பு ! - இது மனித இனத்திற்கு இறைவன்அளித்த சிறப்புகுழந்தைகளின் சிரிப்பைக்காணக் காண இன்பம் கரைபுரளும்அதேசிரிப்பைக் குழந்தை குமரியானதும் சிரித்தால்சொல்வார்கள் ” பொண்ணு சிரிச்சா போச்சு,புகையிலை விரிஞ்சாப் போச்சு “என்று.விதியையும் விரட்டி அடிக்கும் மதியும் சக்தியும் சிரிப்பிற்கு   உண்டு என்று சிரிப்பைப் பற்றிக்  கவிஞர் சொல்கிறார்.

குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு

அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா!
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா!

வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டிஅடிப்பேன்


பட்டுத்தெறிக்கும் முத்துச்சரம்போல் பாடல்களை மேற்கோள்காட்டி..நல்ல கருத்துக்களை நயமாக நடவுசெய்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!

மீண்டும் நன்றிகளுடன்..
என்றென்றும் கண்ணதாசன்புகழ்பாடும்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல் -  சென்னை 600 075.
தற்போது அபுதாபி  (அமீரகம்)
00971 50 2519693
Website: thamizhnadhi.com

பின் குறிப்பு:
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

 வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்


பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது

எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது.இவ்விரண்டு பாடல்களுமே கவிஞர் வாலி அவர்களுடையது.. நினைவில்கொள்ளவும்..


பின்னூட்டம் வழங்கி சிறப்பித்த கவிஞர். காவிரி மைந்தன் ஐயா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

Wednesday, June 11, 2014

Egg Carton PigCut out two individual cups from an egg carton. Trim off the rough edges, and glue both the cups together. Now, the body of the pig is ready. Paint them.

Now, add the details like eyes, ears, snout, tail.

I have used small pieces of cotton as eyes and maked the eyeballs using black marker. We can use googly eyes too.

I have used the chenile stems for the ears and tail of the pig.

Put two dots on the snout, so that they resemble the nostrils of the pig.

Now an easy pig craft is done with an egg carton.

Linking this to  Artsy Craftsy Mom   Kid Friendly Recycled Crafts – AC June Challenge.
 Linking this to  lessology-challenge-37-animal-kingdom

 Recycled crafts | Kid Friendly Recycled Crafts    AC June Challenge | Recycled Crafts

Bottle cap CatI Made this Cat with Bottle Cap. 

I have used the cardboard from cereal box for the nose, ears and the whiskers. White paper can also be used.

I have used Googly eyes for the eyes.

This is an easy way to recycle unused bottle caps. An easy, quick and  beautiful craft too. We can also make many other animals using the bottle caps.Linking this to Artsy Craftsy Mom   Kid Friendly Recycled Crafts – AC June Challenge.Recycled crafts | Kid Friendly Recycled Crafts    AC June Challenge | Recycled Crafts

Tuesday, June 10, 2014

Fish - Recycled CD Craft
Materials Required :

A CD
Cardboard sheet
Marker pens of different colors / Acrylic colors


Method :

Cut out the mouth, fins and tail of the fish from a card board. A cardboard from a cereal box would do.

Paint them with the colors of your choice.

Draw the scales of the fish with a marker in the CD. Decorate them with Acrylic colors.

Stick the mouth, tail and fin  pieces of cardboard to the CD.

Draw the Eye or you can cut it out of a paper and paste it.

Now the fish is done !

Linking this to    Kid Friendly Recycled Crafts – AC June Challenge
Linking this to  lessology-challenge-37-animal-kingdomRecycled crafts | Kid Friendly Recycled Crafts    AC June Challenge | Recycled Crafts

This was chosen as the winning entry in the Lessology challenge 37: Animal Kingdom.


Prize Recieved


Boat made out of Cereal box


Made this Sail  boat out of a recycled Cereal Box.

Materials Required:

Cereal box 
A  stick
Some paper
Modeling Clay (Play doh)  /  Styrofoam
Acrylic Colors for coloring the boat / Aluminum Foil

Tutorial:

The tutorial for this craft can be found at  Box Sailboat - FirstPalette.com

Instead of painting the box with acrylic colors, I've just wrapped it with Aluminum Foil. Recycled crafts | Kid Friendly Recycled Crafts    AC June Challenge | Recycled Crafts