நாம் பலவகையான தாவரங்களை அறிவோம். வித்து (Seeds) தாவரங்கள், கிழங்கிலிருந்து (tubers,bulbs ) உற்பத்தியாகும் தாவரங்கள்,வெட்டி வைக்கும் தண்டுகளில் இருந்து புதிய கிளைகளும் இலையும் தளைக்கும் தாவரங்கள் (Striking / Cloning) என்று பலவகைத் தாவரங்களும் உண்டு. ஓர் இலை மட்டும் கூட ஓர் பெரிய செடியை உருவாக்கும் ஆற்றல் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஓர் தாவரம் தான் நிஷாகந்தி என்றழைக்கப்படும் பிரம்ம கமலம்.
இத்தாவரத்தின் அறிவியல் இருசொற் பெயர் ( Binomial Nomenclature) Epiphyllum oxypetalum என்பதாகும்.
இம்மலர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், பிரம்ம கமலம் என்றும், மலையாளத்தில் நிஷாகந்தி என்றும், ஆங்கிலத்தில் Queen of the Night, Night-blooming Cereus, Large-flowering Cactus, Sweet-scented Cactus, Vanilla Cactus, Lunar Flower, Large Blooming Cereus, Large flowered torch thistle, Large-flowered Night Cactus என்று பல மொழிகளில் அழைக்கப்படுகிறது.
அறிவியல் வகைப்பாடு
Kingdom : Plantae
(unranked) : Angiosperms
(unranked) : Eudicots
(unranked) : Core Eudicots
Order : Caryophyllales
Family : Cactaceae
Genus : Epiphyllum
Species : E.oxypetalum
நீண்டு சற்று அகலமானதாக இருக்கும் இலைகளைக் கொண்டது இத்தாவரம். இலையினைப் பாதியளவு மண்ணுள் புதையுண்டு இருக்குமாறு நட்டு வைத்துவிட்டால், இலையே புதிதாக வேர்விட்டு மண்ணில் பதிந்து கொள்ளும். அதன் பின், இலையே அத்தாவரத்தின் தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதே கணுக்களில் தான் மொட்டுக்கள் உருவாகி கண்கவர் மலர்களாய் மலர்ந்து மணம் வீசும்.
இம்மலர்களுக்கு உரிய தனிச் சிறப்பு என்னவெனில், இவை இரவில் தான் மலரும்.இம்மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும். இத்தகைய அபார வாசனைக்கு காரணியான வேதிப் பொருள் Benzyl Salicylate என்பதாகும்.
மலர்ந்து சிலமணி நேரங்களே இம்மலர்கள் மணம் பரப்புகின்றன. அதன்பின் வாடிப் போய்விடுகின்றன.இம்மலர்கள் வாடாமல்லி, மஞ்சள், சிகப்பு வெள்ளை,ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களிலும் இருக்கின்றன.அனைத்து மலர்களும் இரவிலேயே மலர்கின்றன.
ஒரு செடியில் அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து மலர்கள் வரை இருக்கும். சில சமயங்களில் அதிசயத்தக்க வகையில் , பத்து முதல் பதினைந்து மலர்கள் வரையிலும் இருக்கலாம்.அனைத்தும் ஒரே நேரத்தில் மலர்ந்து , நம்மை வாசனையால் கிறங்கடிக்கலாம்.
படங்களுக்கு நன்றி.
1. jaghamani.blogspot.com
2. indiastudychannel.com
3. flikr.com
4.digplanet.com
5.parayilat.blogspot.com
படங்களுக்கு நன்றி.
1. jaghamani.blogspot.com
2. indiastudychannel.com
3. flikr.com
4.digplanet.com
5.parayilat.blogspot.com
4 comments:
அறியாத தகவல்கள்... நன்றி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!
புதிய தகவல்கள். மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!
Post a Comment