blank'/> muhilneel: அதலைக்காய் - முள்ளிக்காய் - மிதி பாகற்காய்

Tuesday, August 27, 2013

அதலைக்காய் - முள்ளிக்காய் - மிதி பாகற்காய்












அதலக்காய் / அதலைக்காய்

Binomial Name: Momordica cymbalaria




அதலைக்காய் பாகற்காயுடன் நெருங்கிய மரபுவழித் தொடர்பு கொண்ட ஓர் தாவரம் ஆகும். இது விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.இது நாட்டு மருத்துவத்தில், நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், குடற் புழுக்களுக்கான மருந்தாகவும் பயன்படுத்தப் படுகிறது. இந்தக் காயினை பயன்படுத்தி வற்றல், வதக்கல், புளிக்குழம்பு செய்யலாம்.



முள்ளிக்காய்  
Binomial Name :Solanum surattense

Common Name: Yellow-Berried Nightshade.




கண்டங்கத்தரி என்றும் முள்ளிக்காய் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது கத்தரி குடும்பத்தைச் சார்ந்தது. சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரி / முள்ளிகாய்க்கு உண்டு.பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. காயினை தட்டி, விதைகளை எடுத்துவிட்டு புளிக்குழம்பு செய்யலாம்.



மிதி பாகற்காய் / குருவித் தலை பாகற்காய்

Momordica balasamina

 

பாகற்காய் குடும்பத்தைச் சார்ந்த இவை, குட்டி பாகற்காய் போல் இருக்கும். இவற்றிற்கு மிதி பாகற்காய் அல்லது குருவித் தலை பாகற்காய் என்று பெயர்.உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

 

படங்களுக்கு நன்றி.

1. http://eegaraionline.blogspot.com

2. மின்தமிழ் கூகிள் குரூப்

3. http://annaimira.blogspot.com






No comments:

Post a Comment