blank'/> muhilneel: விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபடுவது ஏன் ?

Saturday, September 7, 2013

விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபடுவது ஏன் ?



ஒருமுறை அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அவன் அருகில் எவராலும் செல்ல முடியவில்லை. அருகில் செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான். உடனே தேவர்கள் விநாயகப் பெருமானின் உதவியை நாடினர். அவரும் பெரும் படையுடன் அவனுடன் போரிட சென்றார். ஆனால், படைகளையெல்லாம் சாம்பலாக்கி விட்டான் அனலாசுரன். விநாயகப் பெருமானின் கோபம் தலைக்கேறியது.

இருவருக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது.ஆயுதங்கள் கொண்டு அவனை வெல்ல முடியாத காரணத்தினால், அவன் எதிர்பாரா நேரத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் விநாயகர். அவன் உயிருடன் விழுங்கப் பட்டதால், விநாயகரின் வயிற்றினுள் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான்.ஆதனால் விநாயகரின் வயிறு எரிந்து கொண்டிருந்தது. 

கங்கை நீரை எடுத்து வந்து விநாயகரின் தலையில் ஊற்றினார்கள். தீ தணிந்ததாகத் தெரியவில்லை. தேவர்கள் பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்துக் கொணர்ந்து விநாயகரின் தலையில் வைத்தனர்.இதனாலும் தீ தணியவில்லை. ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொணர்ந்து விநாயகரின் தலையில் வைத்தார். தீ அணைந்தது. அனலாசூரன் இறந்து விட்டான்;. ‘என்னை பூஜிக்க விரும்புபவர்களும் என்னுடைய வரத்தைப் பெற விரும்புபவர்களும் என்னை அருகம்புல் கொண்டு வணங்க வேண்டும்’. என்று அருளினார் விநாயகர். அன்று முதல் அருகம்புல் கொண்டு வழிபாடும் வழக்கம் உண்டாயிற்று.




நன்றி,

No comments:

Post a Comment