Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Tuesday, September 10, 2013
Play Dough Ganesha
Labels:
Arts and Crafts,
Lord Ganesha,
Play-Doh
Ganesha Color Pencil Sketch
Labels:
Arts and Crafts,
Drawing,
Lord Ganesha
Monday, September 9, 2013
விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் என்ன?
பாலவிநாயகருக்கு திடீரென விஷ்ணுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை
வந்து விட்டது. விநாயகர் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டார். ஒரு சமயம்
விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டார். விஷ்ணுவிற்கு என்ன செய்வதென்று
தெரியவில்லை. எப்படி விநாயகரிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது என்று பகவான் விஷ்ணு சிறிது நேரம் யோசித்தார்.
விநாயகரை அதிகமாக
சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம்
வெளியில் வந்து விழும் என்று எண்ணிய விஷ்ணு, தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால்
பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட
ஆரம்பித்தார்.இதை பார்த்தவுடன் விநாயகர் பலமாக சிரிக்க ஆரம்பித்தார். உடனே சக்கரம் வெளியில்
வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஷ்ணு அதை எடுத்து கொண்டார்.
ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வழிபடுகிறோம்.
நன்றி,
velanaimahakanapathi.com
Sunday, September 8, 2013
விநாயகரை வணங்கும் போது நாம் தலையில் குட்டிக் கொள்வது ஏன்?
முனிவர்களுள்
முதல்வராகிய அகத்திய முனிவர் சிவபெருமானிடம் இருந்த காவிரி
நதியைக்கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென்திசை நோக்கி குடகு
மலையில் சிவபூசை செய்து கொண்டு இருந்தர். அப்போது இந்திரன் சீர்காழியில
பூசை செய்து கொண்டிருந்தார். மழையின்றி நந்தவனம் வாடியது.
நாரதமுனிவர் இந்திரனிடம் அகத்தியருடைய கமண்டலத்திலுள்ள காவிரி
பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார். இந்திரன் விநாயகரை
வழிபட்டு வேண்டிக் கொண்டார். விநாயகர் காக்கை வடிவுடன் சென்று
காவிரியடங்கிய கமண்டலத்தின் மீது அமர்ந்தார். அகத்தியர் காகத்தை
துரத்தினார். காகம் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து. காவிரி
பெருக்கெடுத்து ஓடியது.
அகத்தியர் காகத்தின் மீது சிறிப்பாய்ந்தார். அது
அந்தணச் சிறுவனாகி நின்றது. அச்சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டு
குறுமுனி ஒடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்கும்
ஒடினார். அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும்
ஓங்கினார்.
ஐங்கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார். அகத்தியர் திகைத்து
நடு நடுங்கினார். ஓங்காரப் பொருளே வேத வித்தகனே சிறியேன் அறியேனாகிக்
குட்டுவதற்குக் கையை ஓங்கினேனே. என்னே என் சிறுமதி என்று தன் நெற்றியில்
குட்டிக் கொண்டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றிக் கருணை புரிந்தார். அன்று முதல் தம் திருமுன் பயபக்தியுடன் நெற்றியில் குட்டிக் கொண்டோர் கூரிய
மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று வரமளித்தருளினார். இதனால்
விநாயகரின் திருமுன் அடியார்கள் சிரத்தில் குட்டிக் கொள்ளும் மரபு
உண்டாயிற்று.
நன்றி,
Saturday, September 7, 2013
விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபடுவது ஏன் ?
ஒருமுறை அனலாசுரன் எனும் அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அவன் அருகில் எவராலும் செல்ல முடியவில்லை. அருகில் செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான். உடனே தேவர்கள் விநாயகப் பெருமானின் உதவியை நாடினர். அவரும் பெரும் படையுடன் அவனுடன் போரிட சென்றார். ஆனால், படைகளையெல்லாம் சாம்பலாக்கி விட்டான் அனலாசுரன். விநாயகப் பெருமானின் கோபம் தலைக்கேறியது.
இருவருக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்தது.ஆயுதங்கள் கொண்டு அவனை வெல்ல முடியாத காரணத்தினால், அவன் எதிர்பாரா நேரத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் விநாயகர். அவன் உயிருடன் விழுங்கப் பட்டதால், விநாயகரின் வயிற்றினுள் அங்குமிங்கும் புரண்டு கொண்டிருந்தான்.ஆதனால் விநாயகரின் வயிறு எரிந்து கொண்டிருந்தது.
கங்கை நீரை எடுத்து வந்து விநாயகரின் தலையில்
ஊற்றினார்கள். தீ தணிந்ததாகத் தெரியவில்லை. தேவர்கள் பனிப்பாறையைப்
பெயர்த்தெடுத்துக் கொணர்ந்து விநாயகரின் தலையில் வைத்தனர்.இதனாலும் தீ
தணியவில்லை. ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொணர்ந்து விநாயகரின் தலையில்
வைத்தார். தீ அணைந்தது. அனலாசூரன் இறந்து விட்டான்;. ‘என்னை பூஜிக்க
விரும்புபவர்களும் என்னுடைய வரத்தைப் பெற விரும்புபவர்களும் என்னை
அருகம்புல் கொண்டு வணங்க வேண்டும்’. என்று அருளினார் விநாயகர். அன்று முதல்
அருகம்புல் கொண்டு வழிபாடும் வழக்கம் உண்டாயிற்று.
நன்றி,
Friday, September 6, 2013
மூஞ்சுறு விநாயகப் பெருமானின் வாகனம் ஆனது எங்ஙனம்?
க்ரெளஞ்சன் என்ற இசைக் கடவுள் ஒருமுறை இந்திரனின் சபையில்,
வாமதேவ முனிவரின் பாதங்களை தெரியாமல் மிதித்து விட்டார். ஆத்திரமடைந்த வாமதேவ முனிவர்,
க்ரெளஞ்சனை மூஷிகம் (எலி) ஆகும்படி சபித்து விட்டார். க்ரெளஞ்சன் சாபத்தினால் மலையளவு
பெரிய எலியாக மாறிவிட்டார். இதனால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய பாதிப்புகளும்,
அழிவுகளும் ஏற்பட்டன.
ஒருமுறை க்ரெளஞ்சன் பரசுராம முனிவரின் ஆசிரமத்துள் நுழைந்து அழிவினை ஏற்படுத்த, அங்கு பரசுராம முனிவருடன் இருந்த விநாயகப் பெருமான், க்ரெளஞ்சனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். தனது கயிற்றினை க்ரெளஞ்சனை நோக்கி வீச, க்ரெளஞ்சன் விநாயகப் பெருமானின் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு விநாயகப் பெருமான், " நீ செய்த தீவினைகட்கு நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனினும், நீ மன்னிப்பு கேட்ட காரணத்தால், நான் உன்னை மன்னித்து என் வாகனமாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார். விநாயகப் பெருமான் க்ரெளஞ்சன் மீதேறி அமர, அவரது பாரம் தாங்காமல் தடுமாறி, பெருமானை இறைஞ்ச, அவரது வேண்டுகோளின்படி, பாரம் குறைந்து, அன்று முதல் க்ரெளஞ்சனை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
மூஞ்சுறு வாகனத்தின் தத்துவம் என்னவெனில், நமது அறியாமை, ஆசைகள், சோம்பல் இவற்றின் உருவமாகவே, மூஞ்சுறு கொள்ளப்படுகிறது. நமது அறியாமை, ஆசைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
பெரிய சாரீரம் கொண்ட யானைமுகனை தாங்கும் வாகனம் சிறிய எலி ஆகும். எலி நசுங்கி விடாதோ என்றெண்ணி நாம் அஞ்சலாம். ஆனால், அதன் தத்துவம் என்னவெனில், சிறிய எலி தாங்கக்கூடிய அளவிற்கு விநாயகப் பெருமான் இலேசானவர். அவரைத் தாங்கும் சக்தியை தந்தருள்வார். எவரும் எளிதில் வணங்கக் கூடிய தெய்வம் அவர். அவரை சாணத்திலும் பிடித்து வைத்து வணங்கலாம். மஞ்சள், அரிசி மாவு, கல், களிமண் என்று எதைக் கொண்டும் நினைத்த நேரத்தில் அவரை பிடித்து வழிபடலாம்.
இதுவே விநாயகப் பெருமானின் மூஞ்சுறு வாகனத்தின் தத்துவம் ஆகும்.
நன்றி,
Labels:
தமிழ்
Thursday, September 5, 2013
விநாயகருக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பது ஏன் ?
விநாயகப் பெருமானின் இரண்டு தந்தங்களில் ஒரு தந்தம் உடைந்திருப்பதை அறிவோம். அது ஏனென்று தெரியுமா ?
ஒரு தந்தம் உடைந்திருப்பதனால், அவர் ஏகதந்தா விநாயகர் என்றழைக்கப் படுகிறார். ஏகதந்தா என்றால் ஒற்றைப் பல் என்று அர்த்தம்.அவரது ஏகதந்தா அவதாரத்தைப் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.
கதை 1:
பத்ம புராணத்தின்படி, சிவபெருமானைக் காண, அவரது சிஷ்யரான பரசுராமர் கைலாயம் சென்றாராம். அப்போது சிவபெருமான் தவத்தில் இருந்ததால், பரசுராமரை விநாயகப் பெருமான் தடுக்க, அவர் தனது கோடாரியால் விநாயகரைத் தாக்கி விட்டார்.
அந்தக் கோடரி சிவபெருமானால் பரசுராமருக்கு வழங்கப்பட்டது. அதை அறிந்த விநாயகர், பரசுராமரைத் தடுக்காததால், கோடாரி வீச்சில் ஒரு தந்தம் உடைந்து விட்டது. அன்றிலிருந்து விநாயகர் ஏகதந்தா என்று அழைக்கப்படுகிறார். பின்னர் பரசுராமர் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
கதை 2:
ஒரு விருந்தில், விநாயகப் பெருமான் லட்டுகளையும், கொழுக்கட்டைகளையும் அதிகமாக உண்டு விட்டு, க்ரௌஞ்சா என்ற அவரது சுண்டெலியின் மீது ஏறி வர, வழியில் ஒரு பாம்பினைக் கண்ட சுண்டெலி, பயத்தினால் விநாயகரை அப்படியே கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது. இதனால் அவரது வயிறு வெடித்து, உண்ட லட்டுகளும், கொழுக்கட்டைகளும் வெளியே சிதறின.
பாம்பினைப் பிடித்து தன வயிற்றை இறுகக் கட்டினாராம் விநாயகர். இதைக் கண்ட சந்திரக் கடவுள் சிரிக்க, கோபம் வந்த விநாயகப் பெருமான், தனது தந்தத்தினை உடைத்து சந்திரன் மீது எறிந்து " இனி நீ முழு ஒளியுடன் எப்போதும் ஜொலிக்க முடியாது" என்று சாபமளித்தார். எனவே தான் அவருக்கு ஒரு தந்தம் உடைந்திருக்கிறது . இதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது மக்கள் நிலவைப் பார்ப்பதை தவிர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.
கதை 3:
வியாசருக்காக தனது தந்தத்தினை உடைத்து, மகாபாரதத்தின் ஓர் அத்தியாயத்தை விநாயகர் எழுதியதாக சொல்லப்படுகிறது.
தன் பக்தர்களுக்காக கணபதி எதையும் தியாகம் செய்வார் என்பதையே ஒற்றை தந்தம் குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.அவரை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறுவோம்.
நன்றி, tamil.boldsky.com
Teacher...
A teacher affects eternity:
he can never tell where his influence stops.
Henry Adams
**********
What
nobler employment, or more valuable to the state, than that
of the man who instructs the rising generation.
Marcus Tullius Cicero
Marcus Tullius Cicero
**********
The
important thing is not so much that every child should be taught, as that every child should be given the wish to learn.
John Lubbock
John Lubbock
**********
Those
who educate children well are more to be honored than parents,
for these only gave life, those the art of living well.
Aristotle
Aristotle
**********
What
office is there which involves more responsibility, which
requires more qualifications, and which ought, therefore,
to be more honorable than teaching?
Harriet Martineau
**********
By
learning you will teach;
by teaching you will understand.
by teaching you will understand.
Latin Proverb
**********
Education
is the mother of leadership.
Wendell L. Willkie
Wendell L. Willkie
**********
Seldom
was any knowledge given to keep, but to impart; the grace
of this rich jewel is lost in concealment.
Bishop Hall
Bishop Hall
**********
If
you would thoroughly know anything, teach it to others.
Tryon Edwards
Tryon Edwards
**********
We
cannot hold a torch to light another's path without brightening
our own.
Ben Sweetland
Ben Sweetland
**********
Grammar
speaks; dialectics teach us truth; rhetoric gives colouring
to our speech; music sings; arithmetic numbers; geometry weighs
and measures; astronomy teaches us to know the stars.
Latin Maxim
**********
We
learn by teaching.
James Howell
**********
Natural
ability is by far the best, but many men have succeeded in
winning high renown by skill that is the fruit of teaching.
Pindar
**********
It
is the supreme art of the teacher to awaken
joy in creative expression and knowledge. Albert Einstein
joy in creative expression and knowledge. Albert Einstein
**********
The
most effective teacher will always be biased, for the chief
force in teaching is confidence and enthusiasm.
Joyce Cary
**********
It
is a luxury to learn; but the luxury of learning is not to
be compared with the luxury of teaching.
Roswell D. Hitchcock
**********
Education
is the guardian genius of democracy.
It is the only dictator that free men recognize,
and the only ruler that free men require. Mirabeau Buonaparte Lamar
It is the only dictator that free men recognize,
and the only ruler that free men require. Mirabeau Buonaparte Lamar
**********
Whatever
you want to teach, be brief.
Horace
Horace
**********
To
me, education is a leading out of what is already there in
the pupil's soul.
Muriel Spark
**********
Nine-tenths
of education is encouragement.
Anatole France
Anatole France
**********
The
true aim of every one who aspires to be a teacher should be,
not to impart his own opinions, but to kindle minds.
F. W. Robertson
**********
He
that teaches us anything which we knew not
before is undoubtedly to be reverenced as a master. Samuel Johnson
before is undoubtedly to be reverenced as a master. Samuel Johnson
**********
To
teach is the center of to learn.
Japanses Saying
Japanses Saying
**********
I
hear and I forget. I see and I remember.
I do and I understand. Chinese Proverb
I do and I understand. Chinese Proverb
**********
Be
careful to leave your sons well
instructed rather than rich,
for the hopes of the instructed are better
than the wealth of the ignorant. Epictetus
instructed rather than rich,
for the hopes of the instructed are better
than the wealth of the ignorant. Epictetus
**********
I
am indebted to my father for living, but to my teacher for
living well.
Alexander of Macedon
**********
To
know how to suggest is the great art of teaching. To attain
it we must be able to guess what will interest: we must learn
to read the childish soul as we might a piece of music. Then,
by simply changing the key, we keep up the attraction anil
vary the song.
Henri Frederic Amiel
**********
Teaching
is not a lost art, but the regard for it is a lost tradition.
Jacques Barzun
**********
Education
is the transmission of civilization.
Will Durant
**********
To
teach is to learn twice over.
Joseph Joubert
**********
A
schoolmaster should have an atmosphere of awe, and walk wonderingly,
as if he was amazed at being himself.
Newton D. Baker
**********
A
child miseducated is a child lost.
John F. Kennedy
John F. Kennedy
**********
A
master can tell you what he expects of you.
A teacher, though, awakens your own expectations.
Patricia Neal
A teacher, though, awakens your own expectations.
Patricia Neal
Wednesday, September 4, 2013
பிள்ளையார் என்று பெயர் வரக் காரணம்
ஒரு முறை பார்வதி தேவி குளிக்கச் சென்றார். அப்போது காவல் காப்பதற்கு பணிப்பெண்கள் இல்லை. எனவே பார்வதி தேவி தனது உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிர் கொடுத்து காவலுக்கு வைத்தார்.
அந்தச் சிறுவனும் காவல் காத்துக் கொண்டிருக்கையில், கைலாயத்தில் நீண்ட நாள் தவம் புரிந்துவிட்டு சிவபெருமான் வந்தார். வாசலில் ஒரு சிறுவன் இருப்பதைப் பார்த்தவாறு உள்ளே செல்ல முயன்றார். அப்போது, அச்சிறுவன் தடுக்கவே, ஆத்திரமடைந்த சிவபெருமான், சூலத்தால் அவனது தலையை துண்டித்தார்.அதன் பின் தான், அச்சிறுவன் பார்வதி தேவியின் மைந்தன் என்பதை அறிந்தார்.
அப்படி பார்வதி தேவி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதி தேவியின் மைந்தனுக்கு " பிள்ளையார்" என்று பெயர் சூட்டி தனது குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்.
அப்படி பிள்ளையார் உருவான நாளையே பிள்ளையார் சதுர்த்தி என நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
Monday, September 2, 2013
யார் குற்றம் ?
மாடியிலிருந்த வராந்தாவை முக்கால் பாகம் அடைத்துக் கொண்டிருந்தது அந்த பெரிய பெட்டி. சில மாதங்களுக்கு முன் புதிதாய் வாங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி இருந்த பெட்டி அது.வீட்டில் ஏற்கனவே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி சிறியதாக இருந்தபடியால், அதை வேறோர் அறைக்கு மாற்றிவிட்டு, வரவேற்பறையில் பிரம்மாண்டமாய் பொருத்தப் பட்டிருந்தது அந்த தொலைக்காட்சிப் பெட்டி.அது இருந்த அட்டைப் பெட்டியோ, பிரம்மாண்டமாய் மாடி வராந்தாவை பிடித்துக் கொண்டது.
கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் அந்தப் பெட்டி வராந்தாவில் கிடந்தது. அப்போது தான் மழைக் காலம் ஆரம்பித்திருந்தபடியால், மழைச் சாரல் பட்டு பட்டு அந்தப் பெட்டி நைந்து போக ஆரம்பித்திருந்தது. சில நாட்களாக, ஒரு சாம்பல் நிறப் பூனை வேறு, வராந்தாவை சுற்றிச் சுற்றி வர, அது அந்தப் பெட்டியினுள் ஏதேனும் அசிங்கம் செய்து விடுமோ என்றெண்ணி, அந்தப் பெட்டியை மாடியிலிருந்த ஓர் அறையில் போட்டு அறையை அடைத்து விட்டிருந்தார் அம்மா. அதன் பின், அந்தப் பெட்டியைப் பற்றி வீட்டில் அனைவரும் மறந்தே போயிருந்தனர்.
ஒரு வாரம் சென்ற நிலையில், மாடியின் வராந்தாவை அந்த சாம்பல் நிறப் பூனை வளைய வந்து கொண்டிருந்தது.அவ்வப்போது "மியாவ் ! மியாவ் !" என்று கத்திக் கொண்டே இருக்கும். அதன் குரலைக் கேட்டாலே, வீட்டில் அனைவரும் உஷாராகி அதனைத் துரத்தக் கிளம்பி விடுவர். ஏனெனில், வீட்டில் மீன் தொட்டி வைத்திருந்தனர். கண்கவர் வண்ணங்களில் துள்ளியோடும் மீன்களைக் காண்பதுவே ஓர் இனிய பொழுது போக்கு, மனதிற்கு இதமளிப்பதும் கூட. ஒருமுறை, மீன் தொட்டியின் மீதேறி பூனை நின்று கொண்டிருந்தது. தொட்டி கண்ணாடி வைத்து முக்கால் பாகம் மூடப் பட்டிருந்ததால் மீன்களனைத்தும் தப்பித்தன.
சில சமயங்களில், அடுப்பங்கரையில் இருக்கும் பாலைக் குடித்துவிட்டு ஓடிவிடும், அல்லது வெளியிலிருந்து பிடித்து வரும் எலிகளை வீட்டின் வாசலில் போட்டுச் சென்று விடும். அதிகாலை வேளைகளில் வீட்டின் வாசலில் இரத்தமும் சதையுமாய்க் கிடக்கும் எலியைக் கண்டால், அன்று முழுவதும் மனம் என்னவோ போல் இருக்கும். இதனாலேயே, அந்த வீட்டில் பூனையைக் கண்டால், ஏதோ துஷ்டனைக் கண்டது போல் துரத்தியடித்தனர்.
சில நாட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த பூனை, ஏனோ இரண்டு நாட்களாக கண்களில் தென்படவே இல்லை. நல்ல வேளை. இனி பூனைக்கு பயப்படத் தேவையில்லை என்று அந்த வீட்டினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை. இரண்டே நாட்களில் மீண்டும் பூனையின் சப்தம் கேட்கத் துவங்கியது. ஆனால், அந்தச் சாம்பல் நிறப் பூனை கண்களில் தென்படவில்லை. வேறு ஏதேனும் புதிய பூனை வீட்டினுள் தஞ்சமடைந்திருக்கிறதா என்று பார்த்தனர். அப்படி எதுவும் தென்படவுமில்லை. வேறு எங்கிருந்து சப்தம் வருகிறதென்பதை அறிந்து கொள்ளவும் இயலவில்லை.
அந்தக் குடும்பத்திலிருந்த அனைவரும் பணிக்குச் செல்பவர்கள். ஆதலால், விடுமுறை நாட்கள் கிடைக்கும் போது, வீடு முழுவதும் அலசி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்யும் வேலைகள் நடைபெறும். அப்படி ஒரு நாள், வேலை செய்து கொண்டிருக்கும் போது தான், பூனையின் சப்தம் எங்கிருந்து வருகிறதென்பதையே கண்டறிந்தனர். அந்தச் சப்தம் வேறெங்கிருந்தும் வரவில்லை, புதிதாக வாங்கியிருந்த தொலைக்காட்சி இருந்த அட்டைப் பெட்டியினுள் இருந்தே வந்திருக்கிறது. வராண்டாவில் கிடந்த பெட்டியினுள் பூனை வந்து குட்டி போட்டுவிட்டுச் சென்றிருக்கிறது. அதை அறியாது பெட்டியை அறையினுள் வைத்துப் பூட்டிவிட, தாய்ப் பூனை வந்து குட்டிகளைத் தேடியும் கிடைக்காததால், அது சென்று விட்டது.
மொத்தம் ஐந்து குட்டிகள் இருந்தன. வெள்ளை நிறத்தில் இரண்டு குட்டிகள், சாம்பல் கலந்த வெள்ளை நிறக் குட்டிகள் இரண்டு, பாலின் நிறத்தில் ஒரு குட்டி இருந்தன. அனைத்தும் புசுபுசுவென்று அழகாய் இருந்தன. ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குட்டி பெட்டியை விட்டு வெளியில் வருவதெப்படி என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.அன்றாடம் அந்தக் குட்டிகளுக்கு பால் வைத்து பார்த்துக் கொண்டனர்.
ஒரு மாதம் சென்றிருக்கும். தேர்வு விடுமுறை வந்தது. அந்தக் குடும்பத்தினர் விடுமுறைக்கு வெளியூர் செல்ல எண்ணினர். உடனே அவர்களது எண்ணத்தில் உதித்தது இந்தப் பூனைக் குட்டிகள் தாம். வெளியூர் சென்றிருக்கும் சமயத்தில் குட்டிகளை யார் பார்த்துக் கொள்வது ? தெரிந்தவர்கள் எவரிடமேனும் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்லலாமா? என்று எண்ணியவர்கள், வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு அருகில் மாடியின் கீழ் விட்டுச் சென்றால், இவற்றின் குரல் கேட்டு தாய்ப் பூனை வந்து தூக்கிச் சென்றுவிடும் என்றெண்ணி குட்டிகளை அப்படியே பெட்டியுடன் வைத்தனர். பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விட்டால், ஏதேனும் நாயோ, அல்லது வேறு மிருகங்களோ குட்டிகளை காயப்படுத்தியோ, கொன்றோ விடுமென்று பெட்டியுடனே வைத்துச் சென்றனர். அவை குடிக்க அவற்றிற்கு பால் வைத்திருந்தனர்.

விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு, மூன்று வாரங்கள் கழித்து வந்தவர்கள், பூனைக் குட்டிகள் எவ்வாறு இருக்கின்றன என்று பார்த்தனர். ஆனால், அங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்களை மிகுந்த துயரத்திற்குள் ஆழ்த்தியது. பூனைக் குட்டிகள் அனைத்தும் பெட்டியினுள் இறந்து கிடந்தன. அனைவரது மனமும் அப்படியே துயரத்தில் உறைந்து போயின. பாவம் செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு அனைவரது மனதையும் ஆட்கொண்டது. யாரைக் குற்றம் சொல்ல ? அந்தக் குடும்பத்தினரையா ? அன்றி தாய்ப் பூனையையா ? அறியாது செய்த பிழை, தற்செயலாய் நடந்த ஓர் நிகழ்வு, அந்தக் குடும்பத்தினரை மிகவும் பாதித்தது.
Subscribe to:
Posts (Atom)