blank'/> muhilneel: December 2011

Monday, December 26, 2011

கதை - 5

இலக்கம்: 6


இராஜா கம்யூட்டரை ஷட்டவுன் செய்த போது மணி சரியாக மாலை ஏழு மணி. இப்பொழுது அலுவலத்திலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து , ராஜாவின் கார் நகரின் மூன்று நட்ச்சதிர ஹோட்டலை நோக்கி பயணித்தது . அந்த ஹோட்டலின் அடர்த்தியான குளிர்யூட்டபட்ட பாரில் நுழைந்தபோது , வாழ்வில் யாரை பார்க்க கூடாது என்று நினைத்துயிருந்தரோ ,அவன் அங்கு அமர்ந்துயிருப்பதை பார்த்து வெறுப்புடன் வெளியேறியபோது ,என்ன ராஜா என்னை இங்கு வர சொல்லிவிட்டு நீ எங்கே கிளம்புர குரல் கேட்டு திரும்பியவர் , பேசாமல் என் கூட வா ,நாம் வேற இடம் போகலாம் . என்னவாயிருக்கு இவருக்கு என்று ராஜாவை பின் தொடர்ந்தார் அவரின் நண்பர் குழப்பமாக ..
       வேகமாகச்  சென்று காரின் கதவைத் திறந்து, அமர்ந்து கொண்டு தன்
நண்பர் ரவியை  அமரச் சொன்ன ராஜா, சில நிமிடங்கள் படபடப்பாகவே காணப்பட்டார்.அவரது இந்த திடீர் படபடப்பிற்கு காரணம் புரியாது, என்ன செய்வதென்று அறியாது ரவி அவரைப் பார்த்தபடி, அருகில் அமர்ந்திருந்தார்.கால் மணி நேரத்திற்குப் பின்,ராஜா காரை கிளப்பிக் கொண்டு அந்த நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைக்குள் புகுந்தார்.  அங்கிருந்து கிளம்பியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.கார் கடற்கரையினை அடைந்தது. காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு,இருவரும் கடற்கரையினை நோக்கி நடந்தனர்.கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்தனர். 
           நீண்ட மௌனத்தை கலைக்கும் வகையில் ரவி, " என்ன ராஜா, என்னாச்சு??" என்று கேட்டார்."நான் யாரை என் வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்றிருந்தேனோ, அவனை அங்கு பார்த்தேன்.அதனால் தான் வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்" என்றான்."என்ன சொல்கிறாய் நீ? எனக்கு ஒன்றும் புரியவில்லையே..." என்றான் ரவி.ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின், ராஜா பேச ஆரம்பித்தான்."நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடன் பயின்றவன் தான் அவன்.வரிசை எண்களில் எனக்கு முன் வருபவன்.தேர்வறையில், எப்போதும் அவனுக்குப் பின் நான் தான் அமர்ந்திருப்பேன். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது அவன்,தான் சரியாகப் படிக்கவில்லை என்றும், அவனுக்கு விடைகளைக் காண்பிக்கும்படியும் கூறினான். நான் அவனிடம் எதுவும் பேசாமல் தேர்வெழுதுவதிலேயே கவனமாக இருந்தேன்.அவனும் என்னை காண்பிக்கும்படி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.அவன் ஏதோ துண்டுக் காகிதத்தை என் அருகில் வீசினான். நான் ஆத்திரப்பட்டு திரும்ப, அப்போது அங்கு வந்த பறக்கும் படையினரால் நான் அவனிடம் பேசியதாக பிடிக்கப்பட்டு,என்னால் 3 வருட காலத்திற்கு தேர்வுகள்  எதுவும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.அதன் பின், நான் 3 வருடங்களுக்குப் பின் தேர்வெழுதி பட்டம் பெற்றேன்.அது எனது படிப்பு காலத்தில் பெரும் கரும்புள்ளியாக ஆகிவிட்டது.அதனால், வேலைக்கும்    சிரமப்பட்டேன்.அந்த சமயத்தில்,என்  குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. என்னால், கஷ்டப்பட்ட என் தந்தைக்கு உதவக் கூட முடியவில்லை.என் இயலாமையை எண்ணி, என்னை நானே நொந்து கொள்ளத்தான் முடிந்தது.அதன் பின்,பல இன்னல்களைக் கடந்து தான், நான் இந்த உயர்நிலையை அடைந்துள்ளேன்."என்றான் ராஜா.
                   "கவலைப் படாதே ராஜா, தன்னம்பிக்கையும்,அயராத உழைப்பும் உனக்கு துணை நிற்கும் போது, வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்.எவரேனும் உனக்கிழைத்த தீங்கு,துன்பத்தினை எண்ணிக் கொண்டிருந்தால்,அதுவே உன் வளர்ச்சியை தடை செய்து விடும். அதை நினையாதே...வெற்றி இலக்கு மட்டும் உன் லட்சியமாக இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினான்.மனதில் ஓர் புத்துணர்வு பிறந்ததாய், கடற்கரையிலிருந்து நண்பனுடன் கிளம்பினான் இராஜா.
  http://www.eegarai.net/t75627p180-6#703305


Friday, December 23, 2011

Rare Pictures

1st train on Kovvur-RJY roadrail bridge

Picture of James Street,Secundrabad  taken by Deen Dayal in the 1880s, from the Curzon Collection: 'Views of HH the Nizam's Dominions, Hyderabad, Deccan, 1892'
The front page of The Hindustan Times on August 15, 1947
IIT,Delhi in 1961
Like a Man She Fought, She was the Queen of Jhansi ★ RANI OF JHANSI'S ORIGINAL PIC TAKEN BY ENGLISH PHOTOGRAPHER HOFFMAN 159 YEARS AGO THIS PIC WAS RECENTLY SHOWN IN WORLD PHOTOGRAPHY EXHIBITION IN BHOPAL ON 19TH AUGUST 2010....SOURCE IBN7
Original Photograph of Rani Lakshmi Bai, taken by Halfmen British Photographer

1st train on Kovvur-RJY roadrail bridge


Wednesday, December 21, 2011

நடுவெழுத்து அலங்காரம்

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


இவ்விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:
1.நுதல்
2.தமிழ்
3.வாழ்க
4.இச்சை
5.மாசெவி 

6.கல்வி
7.கவிதை
பெயர் : தமிழ்ச்செல்வி 
Highlight to see the answers.


http://www.eegarai.net/t76813p30-topic

கதை-4(Modifications in Hint Given)

  ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம்.காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது................
          அவருக்காகவே காத்திருந்தது போல், தொலைபேசி மணி ஒலித்தது.ஒருவித நடுக்கத்துடனே ராம் தொலைபேசியை எடுத்தார்."ஹலோ,ராம்சரண் ஹியர்" என்றார்.எதிர் முனையில் ஓர் கரகரப்பான குரல்."ஹலோ ராம், என்ன பொண்ணைக் காணோம் என்றதும் ரொம்ப ஆடிப் போயிட்டியா??" என்றது.ராமிற்கு முகமெல்லாம் வியர்த்துப் போயிற்று."ஹலோ,நீங்க யாரு? எங்க இருந்து பேசறிங்க? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்."உன் பொண்ணு உனக்கு வேணும்னா 10 லட்சம் ரூபாய் எடுத்துட்டு மகாபலிபுரம் ரோட்ல இருக்குற சவுக்குத் தோப்பு கிட்ட வா.போலீஸ் கிட்ட போன, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டும் தொனியில் கூறியது அக்குரல்.வீட்டிலிருந்த நண்பர்கள் அனைவரும்,"போலீஸ் கிட்ட போக வேண்டாம்.கேட்ட பணத்தைக் குடுத்துட்டு பொண்ண கூட்டிட்டு வந்துரலாம்" என்றனர்.ராம்சரணுக்கும் அதுவே சரியெனப் பட, அவரும் அவசர அவசரமாய்,பீரோவில் இருந்த  பணத்தை எடுத்து பெட்டியில் அடுக்கினார்.பெட்டியை எடுத்துக் கொண்டு காரிலேறி விரைவாகப் புறப்பட்டார்.
            சவுக்குத் தோப்பிற்கு அருகில் சென்றதும்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,பெட்டியை எடுத்துக் கொண்டு, சாலையோரம் நின்று எவரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தார்.கால் மணி நேர காத்திருப்பிற்குப் பின், ஒருவன்    வருவது தெரிந்தது.அவன் ,ராம்சரணை
தோப்பிற்குள் வருமாறு சைகை காட்டினான்.உள்ளே சென்ற ராம்சரண்,அங்கு நின்றிருந்த இளைஞனை  பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவன்,ராம்சரனின்  நண்பர் ஜெயராமின் மகன் விதார்த்.அவன்,ராம்சரணை அருகிருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அந்த வீட்டில், அறையின் ஒரு மூலையில் அவரது மகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் தான்,ராம்சரணுக்கு உயிரே வந்தது.
        விதார்த் பேச ஆரம்பித்தான். "எங்க அப்பா கிட்ட வியாபாரம் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கினீர்கள்.என் அப்பாவும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்,எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்காமல், உங்களது நட்பின் மீது கொண்ட நம்பிக்கையால்,உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.அதை வைத்து நீங்கள் வியாபாரம் செய்து முன்னேறி விட்டர்கள்.வசதியாக வாழ்கிறீர்கள்.எங்களது வியாபாரம் நொடித்ததால், சென்ற மாதம் என் தந்தை உங்களிடம் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் அவரை அவமானப் படுத்தி,அவரை கேவலமாக பேசி அனுப்பி விட்டர்கள்.செய்நன்றி மறந்த உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் உங்கள் குழந்தையைக் கடத்தினேன்.உங்களது தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்." என்றான்.தலை குனிந்த ராம்சரண்,என்னை மன்னித்து விடுப்பா....இந்த பணத்தைப் பெற்றுக் கொள்" என்று கூறி, பணப்பெட்டியை விதார்திடம் கொடுத்தார்.  
     அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர்.

http://www.eegarai.net/t75627p150-5#698899 

Tuesday, December 20, 2011

கதை-4



ராம்சரண் வளரும் தொழிலதிபர்.அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்திருந்தது . காரணம், பள்ளி சென்ற அவர்களது ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிக்  கொண்டிருந்தனர். யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டு மிரட்டினார்களா , தொழில் முறை எதிரிகள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .
            அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.யாருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.காவல் துறையினரும் அந்த நகரில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.இப்படியே ஒரு மணி நேரம் கழிந்தது.அவளைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.மகளைக் காணவில்லை என்ற நினைப்பில், தாய் தேஜஸ்வினிக்கு மயக்கமே வந்து விட்டது.அவளுக்கு ஒருபுறம் மருத்துவ உதவி நடந்து கொண்டிருந்தது.ராம்சரண் கார் டிரைவரை அடிக்காத குறையாக, காரசாரமாய் திட்டிக் கொண்டிருந்தார்."ஸ்கூல் விடுகிற டைமுக்கு எங்க போய் ஊர் சுத்திட்டு இருந்த?" என்று கத்த, டிரைவரோ, "சார், நான் கரெக்டா ஸ்கூல் விடுற டைமுக்கு ஸ்கூல் கேட் கிட்ட தான் சார் இருந்தேன்.பாப்பா வரலை சார், கொஞ்ச நேரம் கழிச்சு டீச்சர் கிட்ட போய் கேட்டதுக்கு, அவங்க, பாப்பா விட்டதும் போய்டுச்சுன்னு சொன்னாங்க சார் .நானும் இவ்வளவு நேரம் அங்க தேடிப் பாத்துட்டு தான் சார் வரேன்" என்றான்.தேஜஸ்வினியின் தோழிகள் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர். ராமின் நண்பர்களும் அலைபேசியில் யார் யாரையோ அழைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
             மணி ஏழு அடித்தது.அப்போது யாரோ வீட்டின் கேட்டினை  திறந்து கொண்டு வரும் சத்தம் கேட்டது.கார் டிரைவர் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான்.அங்கு, கேட்டினைத் திறந்து கொண்டு அவர்களது சிறுமி சிந்தியா வந்துகொண்டிருந்தாள். குழந்தையை தேஜஸ்வினி ஓடி வந்து வாரி அணைத்துக் கொண்டாள்."எங்கடா செல்லம் போய்ட்ட,உன்னை யாரவது பிடிச்சிட்டு போயிட்டாங்களா??,யாரவது ஏதாவது சாப்பிட கொடுத்து,உன்னை தூக்கிட்டு போயிட்டாங்களா??" என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே இருந்தாள்.கூட்டத்தைக் கண்டு மிரண்ட குழந்தை,மெதுவாக வாய் திறந்தது."மம்மி, நான் பக்கத்து தெருவுல இருக்க பிரியா வீட்டுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வரேன்.அவளை அவங்க மம்மி கூப்பிட வந்தப்போ, நானும் அவங்க கூட போயிட்டேன்.வீட்ல நீயோ,டாடியோ எனக்கு ஹோம் வொர்க் சொல்லிக் குடுக்கறது இல்ல.அதனால அவள் கூட போய், அவங்க மம்மி சொல்லிக் குடுத்த ஹோம் வொர்க் பண்ணி முடிச்சிட்டு வரேன்"என்றாள்.அனைவரும் மௌனமாய் வாயடைத்து, பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்.



http://www.eegarai.net/t75627p150-5#698060         

Wednesday, December 14, 2011

கர்மவீரர் காமராஜர் புகைப்படம்.

கர்மவீரர் காமராஜரும் அவரது அமைச்சரவை சகா, களங்கம் இல்லா வீரர் கக்கனும்......



நன்றி, ஆனந்த விகடன் (2 - 11 - 2011 )



Tuesday, December 13, 2011

கதை-3

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான் சிவா.ஆனால் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.என்ன செய்வதென்று அறியாமல், அதில் உள்ள முகவரிக்குச் சென்று பார்க்க எண்ணினான்.உடனே அங்கிருந்து கிளம்பி,அந்த அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியை தேடிச் சென்றான்.ஒருவாரு, அந்த முகவரியைக் கண்டுபிடித்து,வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார்.யார் என்று தெரியாததால் குழப்பமடைந்து, சிவாவின் முகத்தைப் பார்த்தார்.உடனே சிவா,"அம்மா,இந்த அடையாள அட்டை கடற்கரையில் கிடந்தது.அதில் உள்ள தொலைபேசி எண்ணை பலமுறை அழைத்துப் பார்த்தேன் .யாரும் எடுக்கவில்லை.எனவே தான் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்"என்றான்.அப்போது உள்ளிருந்து ஓடி வந்த ஒரு பெண்.."ரொம்ப நன்றிங்க, இதை காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன்.இது இல்லைனா என்னால நாளைக்கி எக்ஸாம் எழுத முடியாது...நல்ல நேரத்துல உதவி செஞ்சீங்க" என்று நா தழுதழுக்க கூறினாள்.ஒருவருக்கு,தன்னால் குறித்த நேரத்தில் உதவ முடிந்ததே என்று எண்ணி சிவா மனமகிழ்ச்சி கொண்டான்.


கதை - 2

இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .
   மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று அறிந்ததும், குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.இராமநாதன் அனைவரையும் வரவேற்று அமரச் செய்தார்.சிறிது நேரம் ஏதோ பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.பின், மாப்பிள்ளை வீட்டாரில் ஒரு பெரியவர், பெண்ணை வரச் சொல்லுங்கள் என்றார்.அகல்யா சபைக்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு, தன் தாய் கொடுத்த காபி தட்டை வாங்கிக் கொண்டு வந்து அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்தாள்.கொடுத்துவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டனர்.பின்,இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேச ஆரம்பித்தனர்.மாபிள்ளையின் தாய் முதலில் ஆரம்பித்தார்."பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க?" என்றார்.எங்கள் சக்திக்கு எங்களால் முடிந்தது பத்து
பவுண் நகை.அதை போட்டு,கல்யாணத்தை முடிக்கிறோம் என்றனர்.உடனே, மாபிள்ளையின் தாய், "பொண்ணு கருப்பா இருக்கு....இன்னும் கொஞ்சம் நகை சேர்த்துப் போட்டால்,வருகிற முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.அதைக் கேட்டு  வருந்திக் கொண்டிருந்ததாள்  அகல்யா.
அப்போது, தன் தாயின் பேச்சினைக் குறுக்கிட்டு மாப்பிள்ளை,"சார்,எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க உங்களால் முடிந்த நகையைப்  போட்டு திருமணத்தை நடத்துங்கள்" என்றார்.அதைக் கேட்டதும், அகல்யாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.இராமநாதன் கண்கள் குளமாயின.தன் மகளுக்கு கிடைத்த நல்வாழ்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.அந்த இடத்தில மகிழ்ச்சி தாண்டவமாடியது........



கதை - 1

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் .. 
அவனிடம் ஏதோ பேச வேண்டும் என்பது போல் வந்த சுப்ரியாவும் அவன் வந்ததும், சுதன் கேண்டீன் போய் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்றாள்.இருவரும் கேண்டீன் சென்று காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தனர்.சுப்ரியா சுதனின் முகத்தைப் பார்ப்பதும், ஏதோ சிந்திப்பதுமாக இருந்தாள்.உடனே சுதன், "என்ன சுப்ரியா, ஏதோ சொல்ல நினைக்கிறீங்க, ஆனா சொல்ல யோசிக்கிறீங்க" என்றான்.அவன் மனதில் அவளும் தன் நிலையில் தான் இருக்கிறாளோ என்று எண்ணினான்.சில நொடி மௌனத்துக்குப் பின் சுப்ரியா வாய் திறந்தாள்.சுதன்,நான் உங்க நண்பர் சுரேஷை காதலிக்கிறேன்.அவரிடம் பேச எனக்கு சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.என்னை அவரிடம் அறிமுகப் படுத்தி வைப்பீர்களா? என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான். 

http://www.eegarai.net/t75627p105-4#693065

Sunday, December 11, 2011

நீங்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்துபவரா ???

நீங்கள் கூகுள் க்ரோம்   பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம். அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம்.

அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setup என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது

http://puthiyaulakam.com

Eggless Marble Cake - Step by Step Recipe | Sharmis Passions

Spicy chettinad egg gravy | Sharmis Passions

Thursday, December 8, 2011

ஹைக்கூ எழுதுவது எப்படி!


ஹைக்கூ எழுதுவது எப்படி!


                    ‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.

இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

ஹைக்கூ மரபுகள்
1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும்.
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும்.
கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1. ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2. மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும்.
3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும். 
 
 
நன்றி, ஈகரை.com

Thursday, December 1, 2011

புதிர்-2

1) ஒரு ஊரில்  ஒரு ராஜா தன் அழகான மகளுக்கு    மணமுடிக்க நினைத்தானாம்.கேள்விப்பட்ட இராஜகுமாரர்கள் ஏராளமான போ் நான் நீ என போட்டி போட்டனர் . யோசித்த இராஜா ஒரு போட்டியை ஏற்பாடு செய்தான். அழகான செயற்கையான ஒரு குகையை செயது உள்ளே இளவரசியை விட்டு வாசல் கதவு இல்லாமல் அடைத்து விட்டானாம். அந்த குகையை சுற்றிலும் பறவைகள், விலங்குகள்,மனிதர்கள் போன்ற சித்திரங்களை வரைந்து அழகாக்கி செம்மை  படுத்தினானாம்.அந்த குகைக்கு ஒரு வாசல் உண்டு. அந்த வாசலில் ஒரு வாசகம் உண்டு.அது ” நான் குகை என்னைத் தொட வேணடும்” என்றிருக்கும் .இப்போது, குகையை எந்த விதமான சேதமும் இல்லாமல் யார் இளவரசியை வெளியே கொணடு வருகிறார்களோ அவர்களுக்கே மணமுடித்து தருவதாக அறிவித்தானாம்.

அதன்படியே ஒரு இராஜ குமாரன் வெற்றி பெற்றான்? எப்படி?

2) ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை. ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.அது என்ன????

3) ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? 


4)வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள்.  பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள்.  ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும் அழைத்து-  "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன். சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.  அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது? மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது?  நன்கு சிந்தித்து, சிறந்த பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார்.  அரசர் கொடுத்த அவகாசம் முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது.  எல்லோரும் பதில் எழுதியிருந்தார்கள்.  முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள்.  இரண்டாவது கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன என்று கூறியிருந்தார்கள்.  அதிக விரைவாகச் செல்வது எது என்ற மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம் எழுதியிருந்தார்கள்.  புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில் எழுதிப் பரிசைப் பெற்றாள்?

5) நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?

6) ஒரு நாட்டில் ஒரு கொடுங்கோல் அரசன் ஆட்சி செய்து வந்தானாம். எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு மக்களை வாட்டி வதைப்பானாம். இப்படி இருக்கையில் ஒரு நாள் மன்னன் மாறு வேடம் போட்டு நகர்வலம் சென்றபோது, ஒரு நாய் அரசனை கடித்து விட்டதாம். கோபமடைந்த அரசன், நாயின் உரிமையாளனை அழைத்து, உன்னை நான் இதற்காக தண்டிக்ப் போகிறேன். எப்படி தெரியுமா? இப்பொழுது நீ இந்த நாயை நீ எப்படி கொல்கிறாயோ அப்படியே நானும் உன்னை கொல்லப் போகிறேன். என்றனாம். முதலில் நாயை கொல் என்று அரசன் கட்டளையிட்டான்.
நாயின் உரிமையாளன் சற்று யோசித்துப் பார்த்து, தான் எப்படியாவது உயிர் பிழைக்க வேணடுமே என நினைத்து புத்திசாலி தனமாக நாயை கொன்றான். அவன் கொன்ற முறையில் அரசன் அவனை தண்டிக்க முடியாமல் உரிமையாளனை  உயிரோடு விட்டு விட்டு சென்றானாம்.

அப்படியானால் நாயின் உரிமையாளன்  என்ன செய்து தண்டனையிலிருந்த தப்பிருக்க முடியும்?

7)எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

8)தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
"முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?"
அதற்கு  இன்னொரு புலவர் கூறிய பதில்:
"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்
பெயரில் கால் நீக்கி அதில் தேய் "

9)வார்த்தை புதிர்
முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்
பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்
பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி
தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று
அது என்ன வார்த்தை?

10)மேரியின் தந்தைக்கு மொத்தம் 5 மகள்கள் முறையே,
1. NANA
2. NENE
3. NINI
4. NONO
5வது மகளின் பெயர் என்ன ?

11)1
11
21
1211
111221
312211
13112221
1113213211
31131211131221
13211311123113112211
?

அடுத்த எண் என்னவாக இருக்கும் ?

12) மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி...இவள் யார்?

13) இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

14)இது ஒரு உணவுப் பொருள்.செடியில் இருந்து பறித்து, ப‌றித்த உடன் உண‌வுப்பொருளின் வெளியே இருப்பதை எல்லாம் உரித்து எறிந்துவிட்டு உள்ளே இருப்பதை சமைப்போம்.சமைத்ததில்,வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு,உள்ளே இருப்பதை தூர எறிவோம்.இது என்ன உணவுப் பொருள்?
விடை :http://muhilneel.blogspot.com/p/blog-page_01.html



Source: eegarai.com,thamilworld.com,http://sagotharan.wordpress.com,http://akshayapaathram.blogspot.com