இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .
மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று அறிந்ததும், குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.இராமநாதன் அனைவரையும் வரவேற்று அமரச் செய்தார்.சிறிது நேரம் ஏதோ பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.பின், மாப்பிள்ளை வீட்டாரில் ஒரு பெரியவர், பெண்ணை வரச் சொல்லுங்கள் என்றார்.அகல்யா சபைக்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு, தன் தாய் கொடுத்த காபி தட்டை வாங்கிக் கொண்டு வந்து அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்தாள்.கொடுத்துவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டனர்.பின்,இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேச ஆரம்பித்தனர்.மாபிள்ளையின் தாய் முதலில் ஆரம்பித்தார்."பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க?" என்றார்.எங்கள் சக்திக்கு எங்களால் முடிந்தது பத்து
பவுண் நகை.அதை போட்டு,கல்யாணத்தை முடிக்கிறோம் என்றனர்.உடனே, மாபிள்ளையின் தாய், "பொண்ணு கருப்பா இருக்கு....இன்னும் கொஞ்சம் நகை சேர்த்துப் போட்டால்,வருகிற முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.அதைக் கேட்டு வருந்திக் கொண்டிருந்ததாள் அகல்யா.
அப்போது, தன் தாயின் பேச்சினைக் குறுக்கிட்டு மாப்பிள்ளை,"சார்,எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க உங்களால் முடிந்த நகையைப் போட்டு திருமணத்தை நடத்துங்கள்" என்றார்.அதைக் கேட்டதும், அகல்யாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.இராமநாதன் கண்கள் குளமாயின.தன் மகளுக்கு கிடைத்த நல்வாழ்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.அந்த இடத்தில மகிழ்ச்சி தாண்டவமாடியது........
No comments:
Post a Comment