blank'/> muhilneel: புதிர்-2

Thursday, December 1, 2011

புதிர்-2

1) ஒரு ஊரில்  ஒரு ராஜா தன் அழகான மகளுக்கு    மணமுடிக்க நினைத்தானாம்.கேள்விப்பட்ட இராஜகுமாரர்கள் ஏராளமான போ் நான் நீ என போட்டி போட்டனர் . யோசித்த இராஜா ஒரு போட்டியை ஏற்பாடு செய்தான். அழகான செயற்கையான ஒரு குகையை செயது உள்ளே இளவரசியை விட்டு வாசல் கதவு இல்லாமல் அடைத்து விட்டானாம். அந்த குகையை சுற்றிலும் பறவைகள், விலங்குகள்,மனிதர்கள் போன்ற சித்திரங்களை வரைந்து அழகாக்கி செம்மை  படுத்தினானாம்.அந்த குகைக்கு ஒரு வாசல் உண்டு. அந்த வாசலில் ஒரு வாசகம் உண்டு.அது ” நான் குகை என்னைத் தொட வேணடும்” என்றிருக்கும் .இப்போது, குகையை எந்த விதமான சேதமும் இல்லாமல் யார் இளவரசியை வெளியே கொணடு வருகிறார்களோ அவர்களுக்கே மணமுடித்து தருவதாக அறிவித்தானாம்.

அதன்படியே ஒரு இராஜ குமாரன் வெற்றி பெற்றான்? எப்படி?

2) ஒரு மனிதனால்தான் உருவாக்கப்படுகிறது...ஆனால் எந்த மனிதனுக்கும் அதில் விருப்பமில்லை. ஒரு மனிதனால்தான் அது வாங்கப்படுகிறது. ....ஆனால் அது அவனுக்குத் தேவையில்லை.ஒரு மனிதனுக்கு அது தேவை...ஆனால் அதை வாங்கியது அவனுக்குத் தெரியாது.அது என்ன????

3) ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? 


4)வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள்.  பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள்.  ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும் அழைத்து-  "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன். சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.  அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது? மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது?  நன்கு சிந்தித்து, சிறந்த பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார்.  அரசர் கொடுத்த அவகாசம் முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது.  எல்லோரும் பதில் எழுதியிருந்தார்கள்.  முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள்.  இரண்டாவது கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன என்று கூறியிருந்தார்கள்.  அதிக விரைவாகச் செல்வது எது என்ற மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம் எழுதியிருந்தார்கள்.  புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில் எழுதிப் பரிசைப் பெற்றாள்?

5) நான்கு கண்கள்; ஆறு கால்கள் - தரையில் நிற்கவும் கண்டேன்; அது பறக்கவும் கண்டேன். அது என்ன?

6) ஒரு நாட்டில் ஒரு கொடுங்கோல் அரசன் ஆட்சி செய்து வந்தானாம். எடுத்ததற்கெல்லாம் கோபப்பட்டு மக்களை வாட்டி வதைப்பானாம். இப்படி இருக்கையில் ஒரு நாள் மன்னன் மாறு வேடம் போட்டு நகர்வலம் சென்றபோது, ஒரு நாய் அரசனை கடித்து விட்டதாம். கோபமடைந்த அரசன், நாயின் உரிமையாளனை அழைத்து, உன்னை நான் இதற்காக தண்டிக்ப் போகிறேன். எப்படி தெரியுமா? இப்பொழுது நீ இந்த நாயை நீ எப்படி கொல்கிறாயோ அப்படியே நானும் உன்னை கொல்லப் போகிறேன். என்றனாம். முதலில் நாயை கொல் என்று அரசன் கட்டளையிட்டான்.
நாயின் உரிமையாளன் சற்று யோசித்துப் பார்த்து, தான் எப்படியாவது உயிர் பிழைக்க வேணடுமே என நினைத்து புத்திசாலி தனமாக நாயை கொன்றான். அவன் கொன்ற முறையில் அரசன் அவனை தண்டிக்க முடியாமல் உரிமையாளனை  உயிரோடு விட்டு விட்டு சென்றானாம்.

அப்படியானால் நாயின் உரிமையாளன்  என்ன செய்து தண்டனையிலிருந்த தப்பிருக்க முடியும்?

7)எத்தனை கால்?
பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.

8)தமிழில் புலமைபெற்ற ஒரு முதியவர் தன் நண்பரான இன்னொரு புலவரிடம் கூறினாராம்:
"முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?"
அதற்கு  இன்னொரு புலவர் கூறிய பதில்:
"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்
பெயரில் கால் நீக்கி அதில் தேய் "

9)வார்த்தை புதிர்
முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம்
பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்
பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி
தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று
அது என்ன வார்த்தை?

10)மேரியின் தந்தைக்கு மொத்தம் 5 மகள்கள் முறையே,
1. NANA
2. NENE
3. NINI
4. NONO
5வது மகளின் பெயர் என்ன ?

11)1
11
21
1211
111221
312211
13112221
1113213211
31131211131221
13211311123113112211
?

அடுத்த எண் என்னவாக இருக்கும் ?

12) மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி...இவள் யார்?

13) இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.

முன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்
நன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்
கன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்
உன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே!

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

14)இது ஒரு உணவுப் பொருள்.செடியில் இருந்து பறித்து, ப‌றித்த உடன் உண‌வுப்பொருளின் வெளியே இருப்பதை எல்லாம் உரித்து எறிந்துவிட்டு உள்ளே இருப்பதை சமைப்போம்.சமைத்ததில்,வெளியே இருப்பதை சாப்பிட்டுவிட்டு,உள்ளே இருப்பதை தூர எறிவோம்.இது என்ன உணவுப் பொருள்?
விடை :http://muhilneel.blogspot.com/p/blog-page_01.html



Source: eegarai.com,thamilworld.com,http://sagotharan.wordpress.com,http://akshayapaathram.blogspot.com

No comments:

Post a Comment