நமது அஜாக்கிரதையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்து.
எனது நெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் என்ற கட்டுரையில் நெகிழி பைகளினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை குறித்து எழுதி இருந்தேன். சமீபத்தில், அது சம்மந்தமாக முகநூலில் ஒரு காணொளி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக்
கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது
கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப்
பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில்,
சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும்
மாடுகளும் உண்பதை நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட
சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன.
அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து
விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின்
நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு
விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின்
தீமைகள் நம்மையும் வந்தடையும்.
1 comment:
வணக்கம்
நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment