blank'/> muhilneel: February 2013

Saturday, February 9, 2013

கவி விசை - உலக சாதனைக்காக 402 கவிஞர்கள் ஆசிரியர்களாக இருந்து உருவாக்கிய நூல்

தினமணி வார இதழ் தமிழ்மணி " இந்த வார கலாரசிகன்" பகுதியில் எனது கவிதை

தினமணி வார இதழ் தமிழ்மணி       " இந்த வார கலாரசிகன் "
 பகுதியில் எனது கவிதை

கம்பன் கழகத்திலிருந்தும் ஏனைய இலக்கிய அமைப்புகளிலிருந்தும், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவது இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வள்ளுவரையும், இளங்கோவையும், கம்பனையும், பாரதியையும் அவர்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம்தான் தமிழையும், இலக்கிய ஆர்வத்தையும் பாதுகாக்க முடியும் என்பதிலும் சந்தேகமில்லை.
÷பல்வேறு இலக்கிய அமைப்புகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. அதே சமயம், அவர்கள் பேச்சு, கட்டுரைப் போட்டிக்கு வழங்கும் பரிசுத் தொகை எவ்வளவு என்று பார்த்தால் ஒருபுறம் சிரிப்பும், இன்னொரு புறம் வருத்தமும் மேலிடுகிறது.
÷இப்போதெல்லாம் பள்ளிகளில் கூடக் காலாண்டு கல்விக் கட்டணம் நான்கு அல்லது ஐந்து ஆயிரங்கள் என்றாகிவிட்ட நிலைமை. அப்படி இருக்கும்போது, முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.500, மூன்றாம் பரிசு ரூ.250 என்றெல்லாம் சொன்னால், அது இளைஞர்களுக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. இலக்கிய விழாக்களை நடத்துபவர்கள், நிகழ்ச்சியில் பங்குபெறும் பேச்சாளர்களுக்கு 10,000, 25,000, 50,000 என்று செலவிடும்போது, போட்டியில் பங்கு பெற்றுப் பரிசு பெறும் மாணவ - மாணவியருக்கு முதல் பரிசு வெறும் 1000 ரூபாய் என்றால் என்ன நியாயம்?
÷இலக்கியப் போட்டி நடத்துபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நட்சத்திரப் பேச்சாளர் ஒருவரைக் குறைத்துக்கொண்டு, போட்டியில் பரிசு பெறுபவருக்கு முதல் பரிசு குறைந்தது 10,000 ரூபாயாவது இருக்கும்படி செய்தால்தான், நாம் எதிர்பார்ப்பது போல, இளைஞர்களுக்கு ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுத்த முடியும் என்பது எனது கருத்து. இந்தப் பரிசுத் தொகையை வழங்க ஊருக்கு ஒரு புரவலர் கூட இல்லை என்கிற அவல நிலைக்குத் தமிழகம் இன்னும் தள்ளப்படவில்லை!
****
பாரதி பற்றிய புத்தகங்களுக்கா குறைவு? வாரம் தவறினாலும் தவறும், தமிழகத்தின் ஏதாவது ஒரு மூலையில் பாரதியார் பற்றிக் குறைந்தது ஏதாவது ஒரு புத்தகம் வெளியிடுவது தவறாது என்கிற நிலைமை இன்றளவும் தொடர்ந்த வண்ணம் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று.
÷சமீபத்தில் வெளிவந்திருக்கும் மகாகவி பாரதியார் பற்றிய புத்தகங்களில் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்துக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொள்ளத் தூண்டிய புத்தகம் "பாரதியின் பன்முகப் பார்வை'. "சைவத் தமிழ் சீராளன்' முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி எழுதிய புத்தகம் இது. புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் தமிழ்ப் பேராசிரியர் அறிவுடைநம்பி.
÷பாரதி பற்றிய அறிவுடைநம்பியின் பன்முகப் பார்வையும், அவரது படைப்புகள், படைப்புச் செயல்திறன், உரைத்திறன், ஆளுமைத்திறன் பற்றியெல்லாம் பலரும் எழுதியிருக்கிறார்கள். அவரவர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இவரும் தனது பார்வையில் பதிவு செய்திருக்கிறார்.
÷ஆனால், பாரதியின் மொழிபெயர்ப்புத்திறன் பற்றியும், பாரதியார் பார்வையில் இசுலாம் பற்றியும் முதுமுனைவர் அறிவுடைநம்பி செய்திருக்கும் பதிவு வித்தியாசமானது, சிந்திக்கத்தக்கது. பாரதியார் கவிதைகளில் மொழிபெயர்த்ததை விட உரைநடையில் மொழிபெயர்த்ததுதான் அதிகம். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சீனம் முதலிய பல மொழிகள் பாரதிக்குத் தெரிந்திருந்ததாகக் கூறுவார்கள்.
÷""பாரதியார் பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போது, அந்தந்த மொழியில் உள்ள கருத்துகளை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்கிறார். பின்னர் அவற்றை வரிக்கு வரி என்று மொழிபெயர்க்காமல், அதன் சாரத்தை மட்டும் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதாக அவரே கூறியிருக்கிறார். தமிழில் அவ்வாறு மொழிபெயர்த்துத் தரும்பொழுது, தமிழ் மொழிக்கும், பண்பாட்டுக்கும் ஏற்பத் தமிழ் இலக்கியங்களில் இருந்தே தகுந்த சான்றுகளை எடுத்துத் தருகின்றார்.
÷சில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது பலருக்கும் புரியாமல், மூலத்தையே படித்துவிடலாம் போலத் தோன்றும். ஆனால் பாரதியாரின் நடையில் பார்க்கும்பொழுது மொழிபெயர்ப்புப் போலத் தெரியாது. மொழிபெயர்ப்பு என்று கூறாமல் இருந்திருந்தால், பாரதியாரின் உரைநடையைத்தான் அவர்கள் அவர்களது மொழியில் மொழிபெயர்த்திருக்கின்றனர் என்று சொல்லத் தோன்றும். அந்த அளவுக்குப் பாரதியாரின் மொழிபெயர்ப்பு எளிய தமிழில், எளிய நடையில் பாமரரும் படிக்கும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்'' என்று  அறிவுடைநம்பி கூறுவது மெத்தச் சரி.
÷"பேசுவது போலவே உரைநடை அமைய வேண்டும்' என்ற கொள்கையில் விருப்பமுடையவர் பாரதியார். பாரதியாரின் கவிதைகளைப் போலல்லாமல், உரைநடையில் சம்ஸ்கிருதக் கலப்பு அதிகம் என்று குற்றம் சாட்டுபவர்கள் உண்டு. பாரதி வாழ்ந்த காலத்தில் பேச்சு வழக்கு மணிப்பிரவாள நடையில்தான் அமைந்திருந்தது. அதனால்தான் அவரது பத்திரிகைக் கட்டுரைகள் மணிப்பிரவாள நடையில் சம்ஸ்கிருதக் கலப்புடன் அமைந்திருந்தன. கவிதை என்று வரும்போது, அது இலக்கியத் தரத்தில் அமைய வேண்டும் என்று பாரதி கருதியிருக்கிறார்.
÷ஒரு முறையாவது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று ம.சா.அறிவுடைநம்பியின் "பாரதியின் பன்முகப் பார்வை'.
****
அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாநிலம் ஆல்பரேட்டா என்கிற ஊரிலிருந்து பி.தமிழ் முகில் என்பவர் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு கவிதையைப் படிக்க நேர்ந்தது. "ஊர்வலத்தில் ஓர் அத்துமீறல்!!! என்பது தலைப்பு. எந்த இணையதளம் என்று குறிப்பெடுத்து வைக்க மறந்துவிட்டேன்.
ஒழுக்கத்துடன் சீராய்
நடக்கிறது ஓர்
அழகு ஊர்வலம்!!!
திடீரென்று அதிரடியாய்
ஆங்கோர் அத்துமீறல்!!!
அமைதியாய்ச் செல்லும்
எறும்புக் கூட்டத்தின்
நடுவே ராட்சதப் பாதமென
ஓர் மனிதனின்
காலடி!!!

Tuesday, February 5, 2013

Carnivorous Plants - Brocchinia


http://www.araflora.com/image/data/Brocchinia-tatei_Flower_-1.jpg














                       

P.Tamizh Muhil Neelamegam

                   Brocchinia is a genus of bromeliads with about 20 known species. Among them, Brocchinia hechtioides and Brocchinia reducta are carnivores, since they entrap the insects. They live in swampy savannas on the top of the Venezulan tepuys.Their erect, yellow leaves have a cylindrical shape with a waxy slippery powder in the inner surface. The liquid emits a nectarious smell, and the leaves  contain trichomes which helps in absorbing the digested amino acids.The liquid is highly acidic. A sweet odor emanating from the tank may be the means of attracting insects.  

               Brocchinia reducta forms a water-storing cup with its tightly-overlapping leaves. The leaves surrounding the cup of Brocchinia reducta are coated with loose, waxy scales. These scales are highly reflective of ultraviolet light. Since many insects are attracted to ultraviolet (since it is reflected also by many flowers), this is an efficient lure. Mostly, ants and small insects are captured by this plant.

                  The scales, being loose, provide a poor foothold for insects landing on them. The unfortunate creatures slip into the water-filled cup, and eventually drown. It has been argued that Brocchinia reducta is not actually carnivorous in the sense of other such plants, because it does not produce pepsin or any other digestive proteases. However, bacteria and fungi digest the trapped insects, and the leaves are capable of absorbing the resulting nutrients.

                       The genus name Brocchinia honors the Italian botanist Giovanni Battista Brocchi (1772-1826). As far as I know, there are no "common names" for Brocchinia.


Note:
tepuy , is a table-top mountain or mesa found in the Guiana Highlands of South America, especially in Venezuela.


 References:

Interrelationship Between Insects and Plants By Pierre Jolivet, CRC Press, 1998

 http://florawww.eeb.uconn.edu/199600030.html

http://www.carnivorousplants.org/cp/Genera/images/Brocchinia.jpg

 http://www.araflora.com/image/data/Brocchinia-tatei_Flower_-1.jpg

http://davesgarden.com/guides/pf/go/73030/


To be continued....

Monday, February 4, 2013

வல்லமையாளர் விருது - vallamai.com

இந்த வார வல்லமையாளர்

திவாகர்
ஆதி காலத்தில் எல்லாம் அதிவேக வாகனங்கங்கள் இல்லை.. குதிரை, யானை எல்லாம் கூட சாதாரண மக்களுக்கு, பொது மக்களுக்கு வசதிப்படாது. சற்று வசதிப்பட்ட மக்களுக்கென ஏற்பட்ட காளைமாட்டு வண்டி கூட உள்ளூர் வரைக்கும்தான் உதவும், அதுவும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான், ஆகவே எங்கும் எல்லோருக்கும் நடையோ நடைதான்.. அதுவும் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தால் திரும்பி வர மாதக் கணக்கில் ஆகும்.. வாணிகம் செய்ய செல்லவேண்டி வந்தால் ஊர் மண்ணைத் திரும்பவும் காண வருடக் கணக்கில் கூட ஆகும், ஒருவேளை யுத்தத்துக்கு செல்ல வேண்டி வந்தால் கேட்கவே வேண்டாம், திரும்பி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகுறைவு (அப்படியும் திரும்பி வந்தால் எங்கே விழுப்புண் பெற்றாய், மார்பிலா, முதுகிலா, என்று உணர்ச்சிகட்ட வசனங்கள் பேசுவார்களாம்).
இப்படித்தான் தலைவன் ஒருவன் தலைவியிடம் தான் வெகுதூரம் செல்லப்போவதாக பிரியா விடை கேட்பதாக ஒரு சங்கத் தமிழ்ப் பாடல் வரும். இந்தப் பாடல் பற்றி சற்று நகைச்சுவையாக எழுத்தாளர் தேவன் (புத்தகத்தின் பெயர் ‘கல்யாணி’) இப்படி எழுதினார் – தன்னை விட்டு தலைவன் பிரிய விடை கேட்கிறான் என நினைத்ததுமே தலைவி அந்த வார்த்தை தாளாமல் உடல் மெலிவாள், உடல் மெலிந்தால் கையும் மெலியும்தானே, கையில் போட்டிருந்த அழகு வளையல்கள் ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டே வர, அந்தக் காதலன் பயந்துபோய், அடடே, நான் உன் அன்பைப் பரீட்சித்துப் பார்த்தேன், மெய்யாகச் சொல்லவேண்டுமெனில் நான் அப்படியெல்லாம் வெகுதூரம் பயணப்படுவதாக இல்லவே இல்லை. நீ மெய் மெலிவதைக் கண்டு என் மனம் துன்புறுகிறது என்பானாம். இந்த சந்தோஷ வார்த்தையைக் கேட்டதும் காதலி உடனே உடல் பூரித்துப்போவாளாம். இதனால் அவள் கையும் சற்று அதிகமாக பூரித்துப் போய் மீதி அங்கே இருந்த ஒரே ஒரு வளையும் அளவு கொள்ளாமல் படா’ரென்று தெறித்து வெளியே  விழுகிறது.
காதலர் பிரிவு என்பதே ஒரு இன்பம்தான், பிரிவுக் காலத்தில் அன்பு மேலும் கெட்டிப்படுகின்றது. அது அந்த ஆதி காலமாக இருந்தாலும் சரி, இந்த அதி வேக இயந்திரமய காலமாக இருந்தாலும் சரி. மனிதனுக்கே இயல்பானஉணர்ச்சியுள்ள வரைக்கும் காதல் இருக்கவே செய்யும். காதல் இருக்கும் வரை நற்பண்புகளை வளர்க்கவே செய்யும். அப்படிப்பட்ட காதலில் பிரிவு என்பது தேவைதான். பிரிவு முதலில் கசக்கும், ஆனால் பிரிந்தவர் கூடும்போது அதற்கான இனிமைக்கு உவமையே இல்லை.. ஆகையினால்தான் உவமைக்கு பெயர் போன கம்பன் கூட ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று ஒரே வரியில் பிரிவின் சக்தியையும் பிரிவின் பின் கூடும் இன்பத்தையும் விவரித்து விடுகிறான்.
காதலில் பிரிவு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் தேனி ஊறிய பலாச்சுளை போல தித்திக்குமோ என்னவோ. திருக்குறளை வடித்த வள்ளுவன் முதல் இந்தக் காலக் கவிஞர் வரை இந்தக் காதல் பிரிவை ஒரு பிடி பிடித்துவிடுகின்றனர். இந்த வாரம் வல்லமைக்குள் இருந்த இந்தக் கவிதை ஒன்று இப்படித்தான் வர்ணிக்கின்றது.
அனுதினமும் வளர்ந்திடுமே
அளவிலா   காதலும் ….
பிரிவதுவும் ஏற்படுத்துமே
ஆழமான வலுவான
அன்பின்  அஸ்திவாரம் !!!
உந்தன் அன்பின் அருமையை
எனக்கும் ……எந்தன் -
காதலின் வலிமையை
உனக்கும் ……உணர்த்திடாதோ ???
இந்த தொலைதூரக் காதல் !!!
இந்தக் கவிதையை எழுதிய திருமதி தமிழ்முகில் நீலமேகம் மிக எளிமையான தமிழில் காதலர் பிரிவின் மகிமையைத் தெரியப்படுத்தி இருப்பது மிக அழகாக இருக்கிறது. திருமதி தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக. சீக்கிரமே பிரிந்தவரை சேர்த்து வைக்கும் நற்பணியையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடைசி பாரா: கவிஞர் தனுசுவின் ஒரு அழகான கவிதை வரிகள்
“நிலவோடு
நேசக்கலவையின்
இச்சை முடியாத போது
இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
பச்சைப் புற்கள்
கண்ணீர் சிந்துகிறது”