blank'/> muhilneel: January 2013

Monday, January 21, 2013

Carnivorous Plants – Sundew


           Droseras, Commonly called as Sundews.They have gummy tentacles which attracts the insects by their bright colour and smell. Sundew is named because of the dew drops at the end of their tentacles which glitter when exposed to sunlight. They primarily grow on acidic bogs and moist sandy areas.

How does it captures its prey?
Once an insect lands on the leaf, the tentacles begin to wrap around the prey and the Sundew produces more digestive fluid. More tentacles wrap around the bug, and the digestive process begins. Within hours the Sundew has ingested its catch, leaving only the skeletal remains. Sundews have one of the more powerful digestive systems in the carnivorous plant world.

This video shows a Drosera plant trapping a midge with its mobile tenticles and rolling its leaf.

The researchers have found that the secret of the quick tentacles involves the releasing of pent-up hydraulic pressure in a sudden burst, and it happens fast.The sundew takes about 75 milliseconds to capture its prey with snap tentacles. These snap tentacles are  one-shot weapons.Once they capture a prey, these tentacles  break off.The sundew grows fast, developing new leaves every three to four days, so losing a snap tentacle does not affect the plant.

Medicinal uses of the sundew:
These sundews provide an effective remedy for respiratory ailments and chest problems including coughs, asthma,woophing cough, arteriosclerosis and bronchitis.The plant contains an antibiotic substance that, in pure form, is effective against Streptococcus, Staphylococcus, and Pneumococcus. In European folk medicine, the fresh juice is used for warts and corns, and is taken internally as an aphrodisiac.

References:
http://medicinalherbinfo.org/herbs/Sundew.html
http://www.livescience.com/23488-carnivorous-plants-sundew-tentacles-prey.html
http://www.gublers.com/Pages/Carnivorous%20Tabs/sundew.html

To be Continued…

பொன்வண்டு



பாரதி ராஜாவின் கேமராக் கண்களுக்குத் தப்பிய அழகிய பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்று அப்படி ஒரு பசுமை, நிறை மாத கர்ப்பிணியாக துவண்டு நிற்கும் நெற்கதிர்கள்!வரப்பு மேட்டு மேலேயே போய் நெல் வயலைத் தாண்டியவுடன் ஒரு புறம் தாயும், கன்றுமாக வாழைத்தோப்பும், மறு புறம் நெடிதுயர்ந்து கொத்துக் கொத்தாக குலையுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு.இந்தக் காட்சியெல்லாம் சாமான்யரையே கிறங்கச் செய்யும் போது கவிஞரொருவரின் கண்ணில் பட்டால் என்ன ஆவது?

அந்தி மயங்கும் மாலை வேளையில் வரப்பு மீது அமர்ந்து கொண்டு ஓடை நீரில், கணுக்கால் தெரியும் வரை சின்னாளப் பட்டுப் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு காலை விட்டு ஆட்டிக் கொண்டே சலசலக்கும் அந்த ஓடை நீரின் தண்ணளியுடன் கூட்டில் அடையும் ஆவேசத்துடன் அன்றில் பறவைகள் அணிவகுத்துச் செல்லும் அழகையும், குச்சு வீட்டில் காதல் மொழி பேசி கொஞ்சிக் குலவும் இணைகளின் சங்கேத மொழியின் கீதமும் கண்ணையும், செவியையும் ஒரு சேர கொள்ளை கொள்ள, வானத்தில் ஆங்காங்கே கரிய மேகங்களின் ஓவியச் சாலங்களும் அதில் இணைந்து கொள்ள தன்னை மறந்ததொரு மோன நிலைக்குச் செல்ல வேறு முகாந்திரமும் வேண்டுமோ ஒயிலரசிக்கு? இவளுடைய அன்றாட வழமைகளில் இதுவும் ஒன்று………..

“எலே, ஒயிலா, நெதமும் இது ஒனக்கு தொழுவாடா போச்சுதா? காலேசு உட்டு ஊடு வந்தோமா, எதுனாச்சும் சாப்புட்டோமான்னு கூட இல்லாம, நேரா இங்கன வந்து குந்திக்கிட்டு ஆகாசத்தையும், பூமியிம் விரைக்க விரைக்க பாத்துக்கிட்டு அப்படி என்னலே பண்ணுதே…..?”

“போங்க அப்பத்தா, இன்னும் கொஞ்சம் நேரம் போனா நானே வந்துடப் போறேன். நீங்க என்னத்துக்கு இவ்வளவு தொலவு வந்தீங்க?”

“சரி சரி வா போகலாம். உங்கம்மா கடந்து ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சிக்கிட்டு கிடக்கா”

“அப்பத்தா இந்த பச்சப் பசேல் வயலும் தென்னங் காத்தும், சலசலக்கும் நீரோடையும், புள்ளினங்களின் கீதமும் என்னை அப்படியே மயக்கி கட்டிப் போடுது அப்பத்தா. அப்படியே இந்த இயற்கையோடேயே கரைஞ்சு போயிட மாட்டோமான்னு மனசு ஏங்குது அப்பத்தா”

“என்னலே என்னமோ சினிமா வசனமாட்டம் பேசற. உங்கப்பன் என்னமோ உன்னை பெரிய படிப்பெல்லாம் படிச்சு பட்டணத்துல உத்தியோகம் பாக்குற மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுக்கப் போறதா சொல்லிக்கிட்டுத் திறியறான். நீ என்னடான்னா இந்த தோட்டத்தையே கட்டிக்கிட்டு கிடக்கற”

”போங்க அப்பத்தா நான் செத்தாலும் இந்த தோட்டத்தை விட்டுப் போக மாட்டேன் ஆமா!”

அவள் பேச்சில் இருந்த உறுதியும் முகத்தில் தெரிந்த கடுமையும் அப்பத்தாவையும் ஒரு கணம் மிரளச் செய்தது.

“அப்பத்தா நம்ம கருப்பராயன் கோவில்கிட்ட பெரிய வேப்பமரம் இருக்கிதுல்ல. அதுக்குங் கீழே சின்ன சின்ன சாமியா இருக்குதே அது என்ன சாமி அப்பத்தா?”

”அதுவா அது ஏழும் ஏழு கன்னிமாருங்க.நம்ம பரம்பரையில கன்னியா செத்துப் போன பொண்ணுங்க நம்ம குலதெய்வமா அங்கனயே இருந்து நம்ம வம்சத்தையே காத்திக்கிட்டு இருக்குதுன்னு எம்பட மாமனாரு, அதேன் உங்க பெரிய தாத்தன் சொல்லுவாரு”

பாட்டியும்,பேத்தியும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல அம்மாவின் சத்தத்தைச் சமாளிக்க ஓடிச் சென்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘ சாரிம்மா….என் செல்லந்தானே..கோவிச்சுக்காதம்மா’ என்று கொஞ்சிக் கொண்டே காபியை வாங்கி உறிஞ்சிக் கொண்டே, ‘மஞ்சுக் குட்டி’ என்று செல்லமாகக் கூப்பிட்டாள்.

அக்காவின் குரலைக் கேட்டவுடன் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப் போல துள்ளிக் கொண்டு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

”என்னக்கா,இன்னைக்கு என்னக்கூட பார்க்காம தோட்டத்துக்குப் போயிட்ட. உனக்காக எவ்வளவு நேரமா என் மார்க் சீட்டை காட்டறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”

“என் செல்லக்குட்டி எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தானே. அதில என்ன சந்தேகம். சரி உனக்கு உன்னோட ஃபேவரிட் மயிலிறகு நாளைக்கு கொண்டு வந்து தறேன். சரியா.”

“அம்மா நான் போயி கண்ணன் அண்ணனை பார்த்துட்டு வாரேன்”

“எதுக்குடி இந்நேரத்துல போற……. காலைல போகலாமில்ல”

“இல்லம்மா,எனக்கு அண்ணனைப் பார்க்கலாம்னு இருக்கு. நாளைக்கு அண்ணன் தான் என்னை பாக்க வாரோனும்” என்றாள் சிரித்துக் கொண்டே.

கண்ணன் ஒயிலாவின் பெரியப்பா மகன். அவளிடம் மிக அன்பாக இருப்பவன்.பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அவன் எடுக்கும் துணியைத்தான் அவள் அணிந்து கொள்வாள். அண்ணனும் தன் தங்கைக்கு அவள் விரும்பும் துணியைப் பார்த்து பார்த்து டவுனுக்குச் சென்று வாங்கி வருவான்.ஒயிலாவும் ஒரு சின்ன விசயமானாலும் அண்ணனைக் கேட்காமல் செய்ய மாட்டாள். பக்கத்துத் தோட்டத்திலேயே அவள் பெரியப்பா வீடு என்பதால் தினமும் ஒரு முறையாவது சென்று வருவாள்.

பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் எல்லோரையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்கு இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்பாவுடன் உட்கார்ந்து அன்று நடந்ததெல்லாம், கல்லூரித் தோழிகள் பற்றி என்று ஒரே அரட்டைதான்.

பாட்டியின் அருகில்தான் அவளுக்கும் படுக்கை. தூக்கம் வரும் வரை ஏதேனும் பழங்கதைகள்பேசிக் கொண்டிருப்பது இருவருக்கும் வழமையான ஒரு பொழுது போக்கு. பாட்டியும் ஊர் கதை அத்தனையும் அறிந்து வைப்பவர். தன் பேத்தியும் எல்லாவற்றையும் பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது என்று எண்ணுபவர்.

“அப்பத்தா, போன வருசம் நம்ம செண்பகம் அத்தையோட பொண்ணு சந்திரா, அதான் எங்கூட படிச்சாளே அப்பத்தா, அவ எப்படி அப்பத்தா செத்திருப்பா. அவ, மண்ணெண்ணை அடுப்பு வெடிச்சி செத்துட்டதாத்தானே நாம நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, அப்படி இல்லையாம்.அவ வேணுமின்னே தானே நெருப்பு பத்த வைச்சுக்கிட்டாளாம். ”

“சரி அதப்பத்தி இப்ப என்னாத்துக்குப் பேசறே? தூங்கறப்ப கண்டதையும் பேசக் கூடாது.

” இல்ல அப்பத்தா,செத்துப் போனப்பறம் என்ன ஆவாங்கன்னு சொல்லு ….”

“நல்லபடியா செத்தா சாமிகிட்ட போவாங்க. உடம்பு போனாலும் ஆன்மா அழியாது.ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துட்டு அடுத்த பிறவியோ அல்லது சாமி பாதத்துக்கோ போயிடும். அது அவரவர் விதிப்படி நடக்கும். ஆனா, உங்க அத்தை மகள் போல நிறை மாத புள்ளதாச்சியா, புருசன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கிணத்துல விழுந்து செத்துப் போனாப் பாரு அப்படிப் போனாத்தான் ஆவேசம் அடங்காம ஆவியா அலைவாய்ங்க…….அவளும் அப்படித்தேன் கொஞ்ச நாள் அலைஞ்சிக்கிட்டு கிடந்ததா சொல்லுவாய்ங்க….அப்பறம் பூசையெல்லாம் பண்ணி அவளுக்கு சாந்தி பண்ணாங்க.. சரி சரி தூங்கு. காலைல பேசிக்கலாம்.தூங்கும் போது சாமியப் பத்தி மட்டும் தான் நினைக்கோனும் சரியா ஆத்தா….”

வழமைக்கு மாறாக அன்று வெகு சீக்கிரமே விழித்துக் கொண்டாள் ஒயிலரசி.
நேரே சமயலரையில் சென்று தாயிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள். தாய்க்கு மிக ஆச்சரியம் மகள் என்றும் இல்லாத திருநாளாக இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாளே.

“அம்மா எனக்கு இன்னைக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறாயா…”என்றாள்

“ என்னடி இது அதிசயம். தலைக்கு குளிக்கறதுனாலே உன் கிட்ட சண்டை போட்டு மாளாது, இன்னைக்கு அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு.என்னை வேற  தலைக்கு குளிச்சி விடச் சொல்லற…மழைதான் கொட்டப் போகுது போ…”

மகளுக்கு தலைக்கு நல்லெண்ணெய் இளம் சூடாகக் காய்ச்சி அதில் சிறிது வெந்தயமும் போட்டு, அந்த  எண்ணையை தலையில் நன்கு தேய்த்து ஊறவிட்டு பிறகு தண்ணீர் காய வைத்து மகளுக்கு தலை தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணிப் புகை போட்டு , அதன் மீது பெரிய கூடை கவிழ்த்து , அவளுடைய சுருள் சுருளான, நீண்ட கூந்தலை அதன் மீது விரித்து சாம்பிராணிப் புகை எல்லாப்பக்கமும் பரவும் படிச் செய்து அவள் கூந்தல் காய்ந்ததோடு நறுமணமாகவும் இருந்தது.

அம்மாவை இட்லி ஊட்டி விடச் சொல்லி அடம் பிடித்து ஒரு இட்லி சேர்த்தே சாப்பிட்டாள் என்றும் இல்லாதத் திருநாளாக.தனக்கு மிகவும் பிடித்தமான, பளபளவென கருப்பு வண்ண ஜெர்சி பாவாடையும் அதே வண்ண இரவிக்கையும், வெள்ளை சிப்பான் ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு அழகு தேவதையாய் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

தன் மகளின் அழகைப் பார்த்து தாய்க்கு மாளாத பெருமை. இருக்காதா பின்னே. அந்த ஊரிலேயே கொடியிடை அம்மன் போல மிக அழகான பெண் இவள்தான். கடைக்குட்டி மஞ்சுவும் அக்காவின் அழகிற்கு சளைத்தவள் அல்ல. தன் மகள்களுக்கு சுத்திப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். வீட்டில் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாடிக்கையாக நடக்கின்ற ஒன்று.

ஊரு கண்ணு உறவு கண்ணு
கோழி கண்ணு கொள்ளி கண்ணு
அண்டை கண்ணு அயலு கண்ணு
பல்லி கண்ணு பாம்பு கண்ணு
தாய் கண்ணு தந்தை கண்ணு
உற்றார் கண்ணு மற்றார் கண்ணு
மூளி கண்ணு முட்டை கண்ணு
எல்லா கண்ணும் மண்ணோடு மணணாப் போக

என்று சிகப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட்டு அது காரத்துடன், சடசடவென பொரிய, தாய் கண்ணிலோ மகள்களின் கண் திருட்டியெல்லாம் போய் விட்டது என்று பெருமை பொங்கும் !

பேருந்து நிறுத்தத்தில் தோழி மாலாவுடன் நின்று கொண்டிருக்கும் போது ஏதோ லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது ஒயிலாவிற்கு. என்னமோ நடக்கப் போகிறது என்பதை உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டிருந்தது. எங்கோ மற்றொரு உலகத்தின் வாசல் தனக்காக திறந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது.ஆனாலும் மன உறுதி அதனோடு போராடச் செய்து தலையை சிலிர்த்துக் கொண்டு கண்ணை விரித்து பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க முயன்று….தோற்று , மூக்கில் ஏதோ ஊறுவது போன்று தோன்ற துடைக்க எண்ணி கைக்குட்டையை எடுத்து துடைத்து விடடு தன்னிச்சையாக கையைப் பிரித்துப் பார்த்தவள் அந்தக் கைக்குட்டையெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், சில்லி மூக்கு உடைந்திருக்கும் சற்று நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டே, பேருந்து வருவதைப் பார்த்து விட்டு அதை நோக்கிச் செல்ல முடிவெடுத்த வேளையில் அருகிலிருந்த தோழி மாலாவிற்கு, ஒயிலாவின் முகத்தில் இருந்த ஒரு இயலாமை தன்னையும் பின் வாங்கச் செய்தாலும், ஒயிலா அவள் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள்.

உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள்……..அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது!ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது……..இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.


மருத்துவமனையை அடைந்ததும் அவசர அவசரமாய் ஓடிச் சென்று அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் நடந்ததைக் கூறினார் நடத்துனர். உடனே, ஒயிலாவை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு வருமாறு அங்கிருந்த செவிலியரிடம் சொல்லிவிட்டு வேகமாக அவசரப் பிரிவு நோக்கிச் சென்றார்.இதற்குள் விஷயம் கேள்விப்பட ஒயிலரசியின்  தாய் தந்தையர் மற்றும் அவளது பாட்டி அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

யாரிடம் என்ன கேட்பது என்று புரியாமல் நின்று விழித்துக் கொண்டிருந்த அவர்களை, ஓர் செவிலி எதிர்கொண்டாள். "நீங்க தான் அந்த காலேஜ் பொண்ணப் பெத்தவங்களா? அதோ, அந்த ரூம்ல தான் டாக்டர் உங்க பொண்ணப்  பாத்துட்டு இருக்காரு.சத்தம் போடாம அங்க இருக்க பெஞ்ச்ல போய் உக்காந்திருங்க.டாக்டர் வந்துடுவாரு" என்று சொல்லிவிட்டு அவளும் அவசர அவசரமாய் சென்று விட்டாள். மிரண்ட பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு மனது ஒரு நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

"ஐயோ....எம்புள்ளைக்கு என்னாச்சோ .....அம்மா !!! பண்ணாரி மாரியாத்தா !!! எம்புள்ளைய காப்பாத்தி எங்கிட்ட கொடுத்துப்போடு தாயே !!! உனக்குப் பட்டுச்சேலை சாத்திப் பொங்கப் படையல் வைக்கிறேன்" என்று அழுது  அரற்றிக் கொண்டிருந்தாள் ஒயிலரசியின்  தாய்.சற்று நேரத்தில், ஒயிலரசியின் தங்கையும் பள்ளியிலிருந்து வந்து விட்டாள்.  அவளைக் கண்டதும் அந்தத் தாயின் அழுகை மேலும் அதிகமாயிற்று."மஞ்சு கண்ணு !!! அக்காவுக்கு என்னாச்சுன்னே தெரியலடி.டாக்டரும் உள்ள போயி ரொம்ப நேரம் ஆச்சுது.எனக்கு என்னமோ பயமா இருக்குடி கண்ணு " என்றாள்."அக்காவுக்கு ஒன்னும் ஆகாதும்மா. கவலைப் படாதீங்க" என்று மஞ்சு அம்மாவுக்கு ஆறுதல் கூறினாலும், அவளது நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே பயப் பந்து உருண்டோடி அவளது இதயத் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.   
 

சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் " உங்க பொண்ணுக்கு Posterior epistaxis.அதாவது, மூக்கோட பின் பகுதியில இருந்து ரத்தம் வந்திருக்கு.இந்த மாதிரி ஏற்கனவே வந்திருக்கும் போல.ஏன் நீங்க முன்னாடியே வரல? " என்று கேட்ட மருத்துவரின் முகத்தை மிரட்சியுடன் பார்த்தனர் தாய்தந்தையர்.இருவரும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இருவருக்கும் அப்படி ஒன்று நடந்ததை அறிந்திருக்கவில்லை.ஆம்.ஒயிலா அதற்கு முன் சில முறை அங்ஙனம் இரத்தம் வந்ததை சாதாரணமாய் எடுத்துக் கொண்டு விட்டிருந்தாள். பெற்றவர்களிடம் சொன்னால் பயந்து விடுவார்கள்."சாதாரணமாய் மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது தானே.சில்லு மூக்கு உடைந்திருக்கும் என்றெண்ணி உங்க பொண்ணு  அதை பெரிதாக எடுத்துக்  கொள்ளாததால், அது இன்னைக்கு  அவரது உயிருக்கே ஆபத்தாய் ஆகியிருக்கு .ரொம்ப கவலைக்கிடமான நிலைல தான் இருக்காங்க.நாங்க எங்களால முடிஞ்ச அளவு உயிரை காப்பாத்த முயற்சிக்கிறோம்.அதற்கு மேல ஆண்டவனைத் தான் நம்பணும்." என்று மருத்துவர் சொல்வதைக் கேட்டதும் ஒயிலாவின் தாய் மயக்கமுற்று கீழே சரிந்தாள்.  



ஒரு மணி நேரம் சென்றிருக்கும். வெளியே வந்த மருத்துவரின் முகத்தைப் பீதியுடன் பார்த்தனர் அனைவரும். " Posterior epistaxis னால மரணம் ஏற்படுவது என்பது ரொம்ப அபூர்வம் தான்.ஆனாலும் நடக்க வாய்ப்பிருக்கு. அது தான் உங்க மகள் விஷயத்துலயும் ஏற்பட்டிருக்கு.என்னை மன்னிச்சிடுங்க.என்னால உங்க மகளைக் காப்பாத்த முடியல" என்ற மருத்துவரின் காலடியில் மீதும் மயக்கமுற்று சரிந்தாள் ஒயிலாவின் தாய்.அவ்விடமே சோகமும் அழுகையுமாய் நிறைந்திருந்தது.



சில நிமிடங்கள் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்த ஒயிலாவின் தந்தை, மெல்ல எழுந்து மருத்துவரிடம் சென்றார். "அய்யா, எம் மகள் இந்த உலகத்துல மீண்டும் வாழ வழி செய்வீங்களா? " என்றவரின் முகத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் மருத்துவர். " எம் மகளோட உடல் உறுப்புகள் எதெல்லாம் தானம் பண்ண முடியுமோ, அதெல்லாம் தேவையானவங்களுக்கு எடுத்துப்  பொருத்துங்க அய்யா. அவங்க மூலியமா எம்மக இந்த உலகத்துல உசுரோட உலவிட்டு இருப்பா." என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றார் அத்தந்தை. " நீங்க கையெழுத்து போட சொல்ற எடத்துல கையெழுத்து போடறேன்.சீக்கிரம் உறுப்பு தானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க" என்று கூறிவிட்டு சுவற்றில் சாய்ந்தார்.



இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து அழுகையுடன் தரையில் சாய்ந்தாள் ஒயிலாவின் தாய். ஒயிலாவின் அலமாரியை திறந்த மஞ்சு, அங்கு ஒயிலாவிற்குப் பிடித்த பொன்வண்டு அவள் போட்டு வைத்திருந்த தீப்பெட்டியை விட்டு வெளியே வர எத்தனித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். மஞ்சு பெட்டியை எடுத்துத் திறந்தது தான் தாமதம், அது விர்ரென்று பறந்து வந்து வீட்டிலிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றி வந்தது. அது ஒயிலா " நான் சாகவில்லை. உங்களோடு தான் இருக்கிறேன்" என்று சொல்வது போலிருந்தது. ஆம். ஒயிலா மீண்டும் இவ்வுலகில் உயிரோடு தான் உலவுகிறாள். தன் உறுப்புகளால் பலரை வாழ வைத்ததன் மூலம்.

******************************
******************************




Thursday, January 17, 2013

Carnivorous Plants


 
We all know that plants prepare their food by the process called Photosynthesis. But there are certain plants which depend on living organisms for their livelihood.Such plants are called Carnivorous Plants.


Carnivorous Plants are the plants which capture, kill and digest the insects and other small organisms.These carnivorous plants live in a soil that is deficient in Nutrients.So,they supplement their diet with nutrients obtained by digesting the  insects. These plants have some specialized leaves or flowers or tentacles to capture the prey and digest them.



A plant is said to be carnivore, if they possess the following characteristics:

  • The plant must have certain adaption to capture the prey. For example, a trap.
  • The plant should be able to digest the prey. It may produce certain digestive enzymes or it may rely on certain bacteria or other organisms for digestion.
  • The plant must be able to absorb the nutrients and it should be benefited by them. 
The Plants must possess certain adaptations to capture the prey.The adaptations include trap type and certain modifications in the trap that improve the efficiency of the plant in prey capture.The trapping mechanism always involves certain leaf modifications, in which the leaves acts as a trap.

The different trap types include

  • Pitfall traps
  • Sticky traps
  • Lobster pot traps
  • Suction traps
  • Snap traps
Certain examples for the modifications that improve the efficiency may include

  • The plant may produce an attractive smell
  • The trap will be more attractive and colorful
  • The surface of the trap may be waxy or slippery
  • The insects may get stuck to the hairs present 
  • The trap fluids may be sticky
  • The plant may produce nectar which tempts the prey

Tuesday, January 8, 2013

ஆசான்

               அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது.

              நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள்.

              சற்று நேரத்தில், மாணவி ஜனனி வந்து விடைத்தாளில் ஏதோ சந்தேகம் கேட்டாள். அவளது சந்தேகத்தை தெளிவடையச் செய்துவிட்டு, அவள் முதல் மதிப்பெண் பெற்றிருந்தபடியால், அவளுக்கு வாழ்த்துகளைக் கூறிவிட்டு,       “மாணவிகளே ! உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் வந்து கேளுங்கள்” என்றாள். அப்போது, ஆர்த்தி என்ற மாணவி விடைத்தாளுடன் வந்தாள்.

“என்ன ஆர்த்தி? ” என்று கேட்டு சசிகலா முடிக்கும் முன், ஆர்த்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

“மேடம், தயவு செய்து என்னை பாசாக்கி விட்டுருங்கள். அரியர்ஸ் வந்தால், எனக்கு ஒரு  வருஷம்  வேஸ்ட் ஆயிடும். ப்ளீஸ், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

பேப்பரை வாங்கிப் பார்த்தாள்  சசிகலா. மதிப்பெண் போடுவதற்கு வழியே இல்லாமல் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சிந்தியா அங்கு வந்தாள். அவளும் அவ்வகுப்பில் ஆர்த்தியுடன் பயிலும் மாணவி.

“மேடம், நீங்கள் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குன ஜனனிக்கு யுனிவர்சிட்டி ப்ரொஃஃபிஷியன்சி கிடைக்கறதுக்கு மார்க் குறையுதுன்னு போட்டுக்  குடுத்த போது,  ஃபெயில் ஆன ஆர்த்தி பாஸ் ஆக ஏன் மார்க் போடக் கூடாது” என்றாள்.
சசிகலாவிற்கு அவள் சொன்னதைக் கேட்டதும் ஆத்திரத்தில் கண்கள் சிவந்தன. ஏனெனில், அவள் அங்ஙனம் பாரபட்சம் பார்ப்பவளில்லை. ஜனனிக்கு அவள் போடாமல் விட்டிருந்த மதிப்பெண்களையே போட்டிருந்தாள்.

ஆத்திரம் மேலோங்க, “சிந்தியா !  உன்  பேப்பரைக் கொண்டு வா…” என்றாள். வந்தவளிடம் பேப்பரை வாங்கி ஆத்திரத்துடன் சிந்தியாவின் விடைத்தாளில் பத்து மதிப்பெண்கள் குறைத்துக் கொடுத்து அனுப்பி விட்டாள். அவளுக்கு அன்று முழுவதும் ஏனோ மனம் சரியாகவே இல்லை.

மாலை, கல்லூரி முடிந்ததும், சற்று நேரம் பூங்காவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் எண்றெண்ணியவள், சற்று நேரத்தில் பூங்காவினை வந்தடைந்தாள். மரநிழலில் வந்தமர்ந்தவள், சுற்றியோடும் அணில்களையும், கீச்சிட்டுச் சுற்றும் பறவைகளையும் இரசித்துக் கொண்டிருந்தாள். அவளது மனதில் அன்றைய சம்பவம்   நிழலாடியது.

“சே…நன்றாக படிக்கக் கூடிய மாணவி தான்.தன் அதிகப்ப்ரசங்கித் தனத்தால்,  ஆத்திரத்துக்கு ஆளாகி, தன் மதிப்பெண்களை இழந்ததோடில்லாமல், என் மனநிம்மதியையும் குலைத்து விட்டாளே இந்த சிந்தியா ! ” என்றவளது சராசரி மானுட மனம் எண்ணியது.

“நாளை சிந்தியாவை,  அவளது ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரத்திற்கு அனுப்ப  தயார் செய்யச் சொல்ல வேண்டும். இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும்  தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிற்கு அவள் தயார் செய்து, என்னிடம் தந்த கட்டுரை மற்றும் நழுவல் படங்களை பார்வையிட்டு, குறைகள் இருப்பின் திருத்தச் சொல்லி, அவளை மாநாட்டில் பேச தயார் செய்ய வேண்டும் ” என்றவளது ஆசான் மனம் எண்ணியது.

     ” ஓர் நல்லாசானுக்கு மாணாக்கரிடையே என்றுமே உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை !!! “

http://www.vallamai.com/literature/short-stories/30576/