சிரிப்பதனால் நமது வாழும் காலம் நீடிக்கிறது. இது மருத்துவ ரீதியாக ஒ.கே செய்யப்பட்டுள்ளது. நன்கு சிரித்தால் உடலும், உள்ளமும் உற்சாகம் பெறுகின்றன என்று மருத்துவம் சொல்கிறது. உடலும், உள்ளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தால் அப்புறம் உலகமே உங்கள் வசம் அல்லவா!
உடல் உற்சாகமின்மை உடல் நோயிலும், உள்ளத்தின் உற்சாகமின்மை சோர்வு முயற்சியின்மை, வெறுப்பு என்று பற்பல நோயிலும் அல்லவா கொண்டு தள்ளி விடும். வயிறு குலுங்க குலுங்க சிரிப்பதும், ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாக மாறுகிறது. இதன்மூலம் வயிறு, நுரையீரல், இதயம் ஆகியவை நல்ல பயிற்சி பெறுகின்றன. இன்று உலகில் 150 கோடி பேருக்கு மேல் மகிழ்ச்சியின்றி மனச்சோர்வுடன் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் சிரிப்பதை மறந்துவிட்டனர். மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்தால் நம் மூளையில் டோபாமைன், செரோடானின், என்டார்பின் ஆகிய ரசாயன பொருள்கள் உற்பத்தியாகின்றன. இவை மனச்சோர்வை நீக்கி மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்வு தரும். சோகங்களை தாங்கும்; தைரியத்தை தரும் என்கிறது அறிவியல். இதை நமது முன்னோர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை கருத்துகளாக கூறினார்.
Dinamalar Siruvarmalar May 20,2011
No comments:
Post a Comment