ப்ரதிலிபி நடத்திய ஆளப்போறான் தமிழன் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை
பொங்கல் பண்டிகையும் காப்பு கட்டுதலும்
தை திங்களில் கொண்டாடப்படும் தமிழர் பண்டிகை பொங்கல். பொங்கல் திருநாளுக்கு முதல் நாள், மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது. போகி அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து, வாசலில் பசுவின் சாணம் தெளித்து, மாக்கோலம் வரைந்து, பின்னர் காப்பு கட்டப்படுகிறது.

காப்பு கட்டுதல் என்பது சில மூலிகை தாவரங்களின் இலைகள், பூக்கள் இவற்றை கட்டாக கட்டி, வாசல், வீட்டின் பிற பகுதிகளில் வைப்பதே காப்பு கட்டுதல் ஆகும். வேம்பு இலைகள் (வேப்பிலை), பூளைப்பூ, ஆவாரம் பூ, மாவிலை , தும்பை என்று காப்பு கட்ட பயன்படுத்தப்படும் மூலிகைகளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி இருக்கின்றன. காரணம் இல்லாமல், மரபும், பழக்க வழக்கங்களும் தோன்றி விடவில்லை.
மூலிகைக் கட்டான இந்த பொங்கல் காப்பின் பலன்கள் பல. இவை காற்றில் உள்ள பிராண வாயுவான ஆக்சிஜனை அதிகப்படுத்தி, காற்றினை சுத்தம் செய்யும் தன்மையன. அது மட்டுமல்லாது, வீட்டிற்குள் விசப் பூச்சிகளின் வரவையும் தடுக்கும்.
வேம்பு:
அறிவியல் பெயர் Azadirachta indica
பொதுப் பெயர் Neem
காப்பு கட்ட பயன்படுத்தப்படும் வேம்பு ஓர் மிகச் சிறந்த கிருமி நாசினி. அது மட்டுமல்லாது, நீரிழிவு, தோல் நோய்கள், அம்மை, வயிற்றுப் புழுக்களை அழித்தல், பற்கள் ஈறுகளை பாதுகாக்க என்று பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. "ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி " என்ற பழமொழியை அறியாதவரும் உண்டோ ?
பூளைப்பூ :
பொதுப் பெயர் Mountain knotgrass
வெண்மை நிறத்தில் பூத்திருக்கும் மலர்களை கொண்ட இத்தாவரம், சிறுபீளை என்றும், தேங்காய்ப் பூ கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலர்கள் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறுநீர் கட்டிகளை கரைக்கும் தன்மையை பெற்றவை.
கோவை மாநகரின் ஒரு பகுதியான பீளமேடு, இம்மலர்களின் பெயர் கொண்டே வழங்கப் படுகிறது. பூளைப்பூக்கள் நிறைந்திருந்தமையால், பூளைமேடு என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் அது மருவி பீளமேடு என்று தற்பொழுது வழங்கப்படுகிறது.
ஆவாரம்பூ :
பொதுப் பெயர் Matura tea tree
மார்கழி, தை மாதங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் இம்மலர்கள், பொங்கல் பூ என்றும் வழங்கப் படுகின்றன. "ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்பது பழமொழி. இத்தாவரத்தின் பூ, காய், இலை, பட்டை, வேர் என அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது.
உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி அளிக்கக் கூடியது. நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
கோவை நகரில், ஆவாரம் மலர்களின் பெயராலும் ஒரு பகுதி வழங்கப் படுகிறது. அது, ஆவாரம்பாளையம். பீளமேட்டிற்கு (பூளைமேடு) அருகில் உள்ளது.
மாவிலை :
பொதுப் பெயர் Mango
அனைத்து பண்டிகை மற்றும் விசேடங்களிலும், முக்கிய இடம் பிடிப்பது, மாவிலைகளும், மாவிலை தோரணமும். மாவிலை ஓர் சிறந்த கிருமி நாசினி. இதற்கு பல்வகையானச் மருத்துவ குணாதிசயங்களும் உண்டு. மாம்பூ, மாம்பழம் , மாங்காய், மாம்பிஞ்சு என்று அனைத்தும் நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் இடம் பிடித்துள்ளன. "மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என்பது பழமொழி.
தும்பை :
பொதுப் பெயர் Common Leucas,Thumba
வெண் நிறத்தில் மலர்ந்திருக்கும் தும்பை மலர்களும் பொங்கல் காப்பில் இடம் பிடித்திருக்கும். இம்மலர்களும் மருத்துவ குணம் நிறைந்தவையே. இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை , சளி, இருமல், குறட்டை போன்ற வியாதிகளை குணமாக்கும் தன்மை பெற்றவை இம்மலர்கள்.
இயற்கையோடு இயைந்த வாழ்வாகவே விளங்கியது தமிழர் வாழ்வு. இயற்கையை இறையாக போற்றி பாதுகாத்து நலமுடன் வாழும் தன்மை தற்போது குறைந்து வந்தாலும், நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சம்பிரதாயங்கள் ஓரளவேனும் இன்றளவும் கடைபிடிக்கப் படுகிறது. காரணம் அறியாமல் செய்வதை விட, ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னிருக்கும் காரணம் அறிந்து செய்தால், நமக்கும் நம் சந்ததிகளுக்கும் அவை பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
இயற்கையை போற்றுவோம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.
படங்களுக்கு நன்றி, Wikimedia Commons, Boldsky.com
படங்களுக்கு நன்றி, Wikimedia Commons, Boldsky.com
https://commons.wikimedia.org/wiki/File:Leucas_aspera_flowers.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Neem_(Azadirachta_indica)_in_Hyderabad_W_IMG_6976.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Aerva_lanata_in_Bhongir_AP_W_I2_IMG_3064.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Mango_tree_leaves.jpg
https://tamil.boldsky.com/health/herbs/2017/medicinal-properties-flowers-methods-using-them/articlecontent-pf86115-014746.html