Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Friday, January 31, 2014
Recycled bag made out of cereal box
Labels:
Arts and Crafts,
Cereal box,
Recycled Crafts
Monday, January 27, 2014
Recycled Bag made out of Cereal Box
Labels:
Arts and Crafts,
Cereal box,
Recycled Crafts
Owl made out of tissue roll
Labels:
Animal crafts,
Arts and Crafts,
Recycled Crafts,
Tissue Roll
Race Car made out of tissue paper roll
Labels:
Arts and Crafts,
Recycled Crafts,
Tissue Roll
Butterflies made from waste milk can
Labels:
Arts and Crafts,
Milk Can Crafts,
Recycled Crafts
Peacock made from waste milk Can
Labels:
Arts and Crafts,
Milk Can Crafts,
Recycled Crafts
Sunday, January 26, 2014
ஆத்திரம் விளைவித்த இழப்பு.
ஒரு கிராமத்தில் தையற்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவரது கடை இருந்த வீதியின் வழியே அன்றாடம் அந்த கிராமத்தின் கோயில் யானை செல்வது வழக்கம். அப்போது, பலரும் யானைக்கு பலவகையான உணவு பண்டங்கள் கொடுப்பது வழக்கம். பண்டங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு யானை ஆசிர்வாதம் வழங்கும்.
தையற்காரர் அன்றாடம் யானைக்கு வாழைப்பழம் வழங்குவார். இது பலகாலமாக தொடர்ந்து வந்த பழக்கம் ஆதலால், யானை நாள் தவறாமல் வாழைப்பழம் பெறுவதற்காக தையற்காரரின் கடை முன் வந்து நிற்கும்.
ஒருநாள், வழக்கம் போல் யானை கடையின் முன் வந்து நின்றது. அது பண்டிகை காலம் ஆதலால், தையற்காரர் மிகவும் மும்முரமாக தனது வேலையில் ஈடுபட்டிருந்தார். யானைக்கு பழம் எடுத்து வைக்க மறந்து விட்டிருந்தார். யானையோ அங்கேயே நின்று கொண்டிருந்தது. " போ ! போ ! " என்று துரத்தினார் தையற்காரர். யானையோ செல்வதாய் தெரியவில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோ, யானையைக் கண்டு பயந்தனர். கடைக்கு வராது திரும்பிச் சென்றனர்.
தன் வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு ஆத்திரம் கொண்ட தையற்காரர், தன் கையில் வைத்து தைத்துக் கொண்டிருந்த ஊசியால் , யானையின் தும்பிக்கையில் குத்தி விட்டார். வலி பொறுக்க முடியாது யானை பிளிறியது. அதன் கண்களில் நீர் வழிந்தோடியது. அமைதியாக அவ்விடத்தை விட்டு சென்று விட்டது.
நேராக கோயில் குளக்கரைக்கு சென்ற யானை, நீரருந்தி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டது. ஆனாலும், அதற்கு வலியும் ஆத்திரமும் குறையவில்லை. தன் தும்பிக்கையால், நீரை நன்கு கலக்கி, சேறும் சகதியுமாக தனது தும்பிக்கையில் நிரப்பிக் கொண்டது. ஆத்திரத்துடன், வீதியில் ஓடி வந்தது. யானை ஓடி வருவதைக் கண்ட மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஓடி வந்த யானை தையற்காரரின் கடை முன் வந்து, வேகமாய் தனது துதிக்கையில் இருந்த சேற்றுத் தண்ணீரை, கடையிலிருந்த புத்தம் புது துணிமணிகளின் மீது இறைத்தது.
புது துணிகள் அனைத்தும் பாழாகிப் போனதால், தையற்காரர் மீண்டும் வேறு புது துணிகளை வாங்கி, தைக்க கொடுத்தவர்கட்கு மீண்டும் தைத்துக் கொடுக்க வேண்டியிற்று.
ஆத்திரம், ஒரு மனிதனின் நற்பண்புகளையும், நல்லியல்புகளையும் ஒரு நொடியில் கெடுத்து விடும்.
வினை விதைத்தவன், வினை அறுப்பான்.
படத்திற்கு நன்றி,
http://www.internetpk.com
படத்திற்கு நன்றி,
http://www.internetpk.com
Labels:
சிறுவர் கதைகள்
Kolam
Kolam is an ancient folk art form that is still practiced. Kolam is called by different names in different parts of India. Raangolee in Maharashtra, Hase and Raongoli in Karnataka, Mandana in Rajasthan; Chowkpurna in Northern India, Alpana in West Bengal,Aripana in Bihar, Chowk pujan in Uttar Pradesh, Muggu in Andhra Pradesh .
The kolam is drawn in the early morning and in the evening in front of the home. The powder used to draw kolam is rice flour. The small creatures like birds and ants feed on the rice flour. Now a days, chalk powder (kola podi) is also used for drawing kolam. It's believed that the kolam blocks the negativity that enters the home and protects the household from evil.
Dot Reference : 9 x 9 Straight Dots
Dot Reference : 7 x 7 Straight Dots
Dot Reference : 5 x 5 Straight Dots
Dot Reference : 5 x 5 Straight Dots
Dot Reference : 6 x 6 Straight Dots
Labels:
Kolam / Rangoli
Friday, January 24, 2014
Tissue Paper Roll Lantern
Materials Needed:
Toilet Paper Roll
Scissors
String
Acrylic Colors
Method:
1. Cut open the paper roll length-wise.
2. Fold the paper roll into half.
3. Make slits in the toilet paper roll 1 cm apart , leaving about 1.5 cm in the top and bottom of the roll.
4. Paint the inner and outer of the toilet roll.
5. Join both the ends of the toilet roll.
6. Squeeze the toilet roll a bit to form a lantern.
7. Stick a ribbon or a string and hang it.
Labels:
Arts and Crafts,
Tissue Roll
சமயோசிதத்தால் உயிர் தப்பிய குரங்கு
அந்தக் காட்டின் நடுப் பகுதியில் பெரிய ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒர் பெரிய நாவல் மரம். அம்மரத்தில், குரங்கு ஒன்று வசித்து வந்தது. நாவற் பழங்களை உண்டு அக்குரங்கு வாழ்ந்து வந்தது. ஆற்றில் முதலைகள் இருந்தன. ஓர் நாள் ஆற்றின் கரையோரம் வந்த முதலை, மரத்திலிருந்த குரங்கைக் கண்டது.
"என்ன குரங்காரே, நலமா ? "
" நல்ல சுகம் முதலையாரே. இந்தாருங்கள் கொஞ்சம் நாவல் பழங்களை சாப்பிடுங்களேன்."
நாவல் பழங்களை உண்ட முதலை, " மிகவும் ருசியாக உள்ளதே. தினமும் எனக்கு தகுகிறீரா குரங்காரே ? " என்றது.
" அதனால் என்ன ? தினமும் தருகிறேன்." என்றது.
இப்படியே நாட்கள் சென்றன. குரங்கிற்கு, ஆற்றிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள ஆசை. ஆனால் எப்படி செல்வதென்பது அதற்கு தெரியவில்லை.
தினமும் நாவல் பழங்களை வாங்கிச் செல்லும் முதலை, தன் மனைவிக்கும் கொடுத்து வந்தது. ஓர் நாள், அப் பெண் முதலை,
" நாவல் பழங்கள் இவ்வளவு ருசியாக உள்ளதே. இதையே அன்றாடம் உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் ? " என்று நாவில் நீரூற கூறியது.
தன் மனைவியின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசனையில் ஆழ்ந்தது முதலை. மெல்ல நீந்தியபடி கரைக்கு வந்தது.
கரையிலிருந்த குரங்கைக் கண்டதும், " இதை எப்படியாவது தந்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமே ! " என்றெண்ணியது.
அப்போது குரங்கு, " எனக்கு ஓர் ஆசை. அது நிறைவேற உதவுவீர்களா முதலையாரே " என்றது.
"என்ன வேண்டும் கேளுங்கள் குரங்காரே " என்றது முதலை.
"எனக்கு நதிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எனக்கோ தண்ணீரில் நீந்த தெரியாது. தண்ணீரில் மூழ்கி விடுவேனோ என பயமாக இருக்கிறது. நீங்கள் என்னை உங்கள் முதுகிலேற்றிச் செல்வீர்களா ? " என்றது.
"ஆஹா ! நம் எண்ணம் இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறும் என்றெண்ணவே இல்லையே " என்று மனதிற்குள் மகிழ்ந்த முதலை,
"கண்டிப்பாக அழைத்துச் செல்கிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் " என்றது.
மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்த குரங்கு, வரப்போகும் ஆபத்தை உணராது வேடிக்கை பார்த்தபடியே சென்றது.
சற்று தூரம் சென்றதும், முதலை, " குரங்காரே ! என் மனைவி தாங்களளித்த நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு, பழங்களே இவ்வளவு சுவையாக இருந்தால், இதை உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும். குரங்கின் ஈரலை சாப்பிட ஆசையாக உள்ளது என்று ஆவலுடன் கேட்டாள். தங்களிடம் சொன்னால் வரமாட்டீர்களென தெரியும். எப்படி வர வைப்பதென்று எண்ணிக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள்" என்று சொன்னது.
இதைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த குரங்கு, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு,
" அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆனால், இதை தாங்கள் கரையிலிருக்கும் போதே சொல்லியிருக்கலாமே. இப்போது தான் என் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டேன். சொல்லியிருந்தால், வரும்போதே எடுத்து வந்திருப்பேன்.என்னைக் கரையில் கொண்டு போய் இறக்கி விடுங்கள். நான் மரத்திலேறி எடுத்து வந்து விடுகிறேன் " என்று தந்திரமாக கூறியது.
இதை உண்மை என நம்பிய முதலை, குரங்கை கரையில் கொண்டு விட்டது. கரையை அடைந்ததும் சடாரென மரத்தில் தாவியேறிய குரங்கு, " அட முட்டாள் முதலையே ! ஈரலை கழற்றி வைக்க முடியுமா ? கழற்றினால், என்னால் தான் உயிரோடு இருக்க முடியுமா ? உன்னை நம்பிய என்னை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே. போய் வா." என்று சொல்லிவிட்டு மரத்தில் தாவி மறைந்தது.
ஆராயாத நட்பு ஆபத்தில் விட்டு விடும்.
படத்திற்கு நன்றி,
http://bforball.com

Tuesday, January 21, 2014
யாருக்கு நஷ்டம் ?
" கமலா ரொம்ப பாவம்பா. அவளுக்கு பரீட்சைன்னாலே ரொம்ப பயமாம். கிளாஸ்ல வைக்கிற சின்ன டெஸ்ட் எல்லாம் ரொம்ப நல்லா எழுதீடறா, ஆனால், மாதப் பரீட்சை, அரைப் பரீட்சை, கால் பரீட்சைல எல்லாம் பெயில் ஆயிடறா. ஏன்னே புரியல. ஒவ்வோர் பரீட்சை முடிந்து, விடைத்தாள் குடுக்கும் போது, டீச்சர் என்னைய கூப்பிட்டு கேக்கறாங்க. என்னைய, அவளுக்கு படிக்க உதவ சொல்லி இருக்காங்க. அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபுடிக்கணும். அவளும் நல்லா படிக்க உதவணும் " மிகுந்த அக்கறையுடன் தன் தோழி சுனந்தவிடம் கூறிக் கொண்டிருந்தாள் சில்வியா.
சில்வியா, கமலா, சுனந்தா மூவரும் ஒரே வகுப்பில் பயிலும் தோழிகள். கமலா சற்று படிப்பில் பின்தங்கி இருந்தபடியால், அவளுக்கு உதவிட சில்வியாவிடம் சொல்லியிருந்தார் ஆசிரியர். கமலாவிற்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது, சந்தேகங்களை நிவர்த்தி செய்வது, பாடங்களை ஒப்பிக்கச் செய்வது, வகுப்புத் தேர்வுகளை திருத்திக் கொடுப்பது என்று சில வேலைகளை சில்வியாவிற்கு கொடுத்திருந்தார். கமலா மீது தனிக் கவனம் எடுத்துக் கொண்டார் ஆசிரியர். ஆனாலும் ஏனோ, கமலா வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், ஏனோ மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வியுற்றாள்.
அன்று, எப்போதும் வழக்கமாக நடக்கும் வகுப்புத் தேர்வு இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து, முதல் பாட வகுப்பின் போது, தேர்வு நடப்பதாய் இருந்தது. மதிய உணவினை முடித்துக் கொண்டு, வகுப்பிற்கு வந்து, தன் இருக்கையில் அமர்ந்தாள் சில்வியா. நடக்கவிருக்கும் தேர்வுக்கான பாடங்களை ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள். அப்போது, அவள் அமர்ந்திருந்த இருக்கையின், முன்னால் இருந்த இருக்கைக்கு அடியில் ஒரு நோட்டுப் புத்தகத்தினை கவனித்தாள். காற்றில், நோட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் வேகமாய்ப் பறந்தன. காலில் படும்படியாக கீழே கிடக்கிறதே என்று குனிந்து எடுத்தாள்.
அது ஓர் தேர்வு ஏடு. அதனை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஏட்டில், கடைசியாய் எழுதிய தேர்வுக்குப் பின், சில வெற்றுத் தாட்கள் விடப்பட்டு, அடுத்த பக்கத்தில், அன்றைய தேர்வுக்குரிய பாடத்தில் உள்ள முக்கிய கேள்விகளுக்குரிய விடைகள் அனைத்தும் தெளிவாக, அடித்தல், திருத்தல் இல்லாமல், அழகாக எழுதப் பட்டிருந்தது. அது யாருடையது என்று பார்த்த சில்வியாவிற்கு மேலும் அதிர்ச்சி. அது கமலாவினுடையது.
"இந்தப் பெண் இத்தனை நாளாய் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறாளே ! " என்று ஆத்திரம் வந்தது. அடுத்த நொடியே, " இந்த கமலா நம்மை ஏமாற்றுவதாய் எண்ணிக் கொண்டு, தனையறியாது, தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாளே ! இதற்கோர் முடிவு கட்ட வேண்டும்" என்றெண்ணிய சில்வியா ஆசிரியரிடம் விஷயத்தை கூறிவிட்டாள்.
மதிய வகுப்பிற்கு வந்த ஆசிரியருக்கு, கமலாவின் ஏமாற்று வேலைகளைக் கேள்விப்பட்டதும், ஆத்திரம் மேலோங்கியது. அவளது முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், இப்படி ஏமாற்றி வந்துள்ளதே இப்பெண் என்ற எண்ணத்துடன், கமலாவை அழைத்தார். அவளிடம் கேட்ட கேள்விகள் எதற்கும் பேசாமல் அவள் மௌனம் சாதிக்கவே, மேலும் கோபம் கொண்டு, சடாரென்று மேசையின் மீதிருந்த பிரம்பினை எடுத்து கமலாவை விளாசித் தீர்த்து விட்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கமலா பள்ளிக்கு வருவதில்லை. மாற்றுச் சான்ரிதழ் வாங்க பதினைந்து நாட்கள் சென்ற நிலையில், பள்ளிக்கு வந்திருந்தாள். அப்போது, அவள் தன் சக தோழியிடம் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாள்.
" ஆமா. பொம்பளைப் புள்ளைங்க படிச்சு என்ன ஆகப் போகுது ? நாளைக்கி கல்யாணம் பண்ணி, சமைச்சு போட்டு, பிள்ளைங்கள பாத்துக்கறதுக்கு, இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கணுமா என்ன ? " என்றாள். கல்வி வேண்டாமென எண்ணுகிறாளே, இதனால் யாருக்கு நஷ்டம் ?
அறியாமை இருளைத் தேடி, ஓர் பயணத்திற்கு ஆயத்தமானாள் கமலா. உணராத உள்ளங்கட்கு வேதம் ஓதி என்ன ஆகப் போகிறது ? இதனால், பின்னாளில் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை எங்ஙனம் எதிர்கொள்ளப் போகிறாள் ?

நன்றி, வல்லமை இணைய இதழ்
Labels:
கதை,
தமிழ்,
வல்லமை மின்னிதழ்
Friday, January 17, 2014
Zipper Flowers
Labels:
Arts and Crafts,
buttons,
Flower craft,
Sew Crafts,
Zipper
Recycled Magazine Coasters
Labels:
Arts and Crafts,
Magazine Crafts
Thursday, January 16, 2014
Recycled Flower Garland
Labels:
Arts and Crafts,
Magazine Crafts,
Recycled Crafts
Wednesday, January 15, 2014
Sunday, January 12, 2014
Friday, January 10, 2014
Aluminum Foil Painting
Labels:
Arts and Crafts,
Foil Painting,
Foil sheet
Thermocol Plate Painting
Labels:
Arts and Crafts,
Painting
Tuesday, January 7, 2014
தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
"தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !
"
என்று பெருமிதத்துடன் பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
பிள்ளை. தான் ஓர் தமிழனென்று மார்தட்டிக் கொள்வோர் மத்தியில், தான் ஓர் தமிழன் என்பதை
வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படும் மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சரளமாக
தமிழ் மொழி பேசும் உதடுகள் , தமிழ் பேசும் சக மனிதனைக் கண்டதும், சட்டென ஆங்கில மொழிக்கு வளைந்து விடுவதும்
ஏனோ ? தம்மை தமிழனென அடையாளப் படுத்திக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறார்கள்
தமிழர்கள் ? இது வெளிநாடு வாழ் தமிழர்களிடம் கண்ட செய்கை மட்டுமல்ல, நம் தேசத்தில்,
தமிழகத்தில் வாழும் தமிழர்களுள் சிலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.
தமிழகத்தில், பள்ளிகளில் படிக்கும் சிறார்களின் நிலை இன்னும்
மோசம். சிறுவர்கள் பலருக்கு தமிழ் மொழியில் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை. தமிழ் என்றாலே
அலறி அடித்துக் கொண்டு காத தூரம் ஓடும் சிறார்கள் பலரைக் காண்கிறோம். குறில் நெடில்
வேறுபாடு, ழகர – ளகர – லகர வேறுபாடு தெரியாமல் மிகவும் சிரமப் படுகின்றனர். இதனால்
மிகுதியான எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. மதிப்பெண்கள் குறைவதால், பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளாகிறார்கள். இதனால் மொழியையே வெறுத்து ஒதுக்கும் நிலை
ஏற்படுகிறது. இதற்குக் காரணம் வாசிக்கும் பழக்கமே அற்றுப் போனது தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிகளில் தமிழ் வகுப்புகளின்
போது, ஆசிரியர், ஒவ்வோர் மாணவரையும் பாடத்தின் ஒவ்வோர் பத்தியாக படிக்கச் செய்து விளக்கம்
அளிப்பார். இதனால் மாணவர்கள் தமிழ் படிக்க சிரமப்பட்டதில்லை. இன்று அப்படி ஓர் பழக்கம் நடைமுறையில் உள்ளதா என்பது தெரியவில்லை. வாய்மொழித்
தேர்வு ( Oral Exam ) வைத்து, சில வார்த்தைகளை ஆசிரியர் சொல்லச் சொல்ல எழுதுதல் ( Dictation ), பாடங்களை வாசிக்கும் முறை ( Reading ), செய்யுட் பகுதிகளை மனனம் செய்து ஒப்புவித்தல் (
Recitation ) போன்ற மாணாக்கரின் நினைவாற்றல் மற்றும் மொழித்திறன் ( Vocabulary ) வளர்க்கும் பயிற்சிகள்
இன்றும் பள்ளிகளில் நடத்தப்படுகின்றனவா என்பது தெரியவில்லை.
சில பள்ளிகளில், வகுப்பறையில் கட்டாயம் ஆங்கிலத்தில் தான் பேச
வேண்டுமென விதிமுறை இருக்கிறது. மீறினால், அபராதம் விதிக்கப் படுகிறது. இதனால், பல
சிறார்கள் வீட்டிலும் ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுகின்றனர்.
சிறார்களை கதைப் புத்தகங்கள், படக் கதைகள் போன்றவற்றை வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில்,
சிறுவர் இதழ்களில் வரும் படக் கதைகளை வாசித்துப் பழகினால், நாளடைவில் அவர்களின் வாசிக்கும்
திறன் நன்கு வளரும்.
தமிழகத்தில், நான்காம் வகுப்பு முதல், தமிழ் விருப்பப் பாடமாக
ஆக்கப்பட்டு விடுகிறது. மாணவர்கள் தமிழ் அல்லது இந்தி எடுத்துப் படித்துக் கொள்ளலாம்.
அங்ஙனம், இந்தி எடுத்துப் படிக்கும் மாணவர்கள், பிற்காலத்தில் தமிழ் மொழியை கற்றுக்
கொள்ள முயல்வதில்லை. அதற்கான தேவையோ அல்லது வாய்ப்போ அவர்களுக்கு ஏற்படுவதில்லை.
மேலும், மேனிலை வகுப்புகளில் பிரெஞ்சு மொழியை தமிழ் மொழிக்கு
பதிலாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. என்ன தான் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுத்துப்
படித்தால் தான், மாநில தரம் என்று அறிவித்தாலும், பிரெஞ்சு மொழியில் எளிதாக மதிப்பெண்
பெறலாம், மொத்த மதிப்பெண்களும் உயரும். இதனால், பலரும் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக
எடுப்பதை தவிர்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும்.
பள்ளிகளில் ஆரம்ப கல்வி தொடங்கி மேனிலை வகுப்பு
வரை தமிழ் கற்பிக்கப் படுகிறது. சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இளங்கலை
பட்டயப் படிப்புகளில் தமிழ் கட்டாய பாடமாக உள்ளது. ஆனால், அவர்கள் கல்லூரியை /
பள்ளியை விட்டு வெளியேறியதும், அவர்கள் முழுமையாக நாட வேண்டியது ஆங்கிலத்தை
மட்டுமே என்றாகி விடுகிறது. அதன் பின், தமிழின் பயன்பாட்டினை மறந்தே போய்விடுவோர் எத்துனையோ பேர். "எனக்கு தமிழ் வராது" என்று சொல்வதை
பெருமையாக எண்ணும் சிறுமதியினரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்று, இளைஞர்கட்கு வேலைவாய்ப்பு வழங்கும் பன்னாட்டு நிறுவனங்களும், ஆங்கிலத்தையே அடிப்படை தகுதியாக வைத்துள்ளனர். கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலமே ஏற்ற மொழியாகக் கருதுகின்றனர். ஆங்கிலம் தெரியாது, தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்ற காரணத்தினாலேயே, பல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு சிரமப் படுகின்றனர். இதனால், பலரும் சில ஆயிரங்களை செலவு செய்தாயினும், பேச்சு ஆங்கிலம் ( Spoken English ) கற்றுக் கொள்கின்றனர். பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் பிழையேதும் இல்லை. ஆனால், நம் தாய் மொழியை மறந்து விடுதல் நல்லதன்று.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை பொங்கல், தீபாவளி பண்டிகைகள் மற்றும் புத்தாண்டு போன்ற விழாக் காலங்களில் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது நினைவில் இருக்கலாம். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போதும் , இனிய வாழ்த்துகளை அழகிய தமிழில் எழுதுவோம். ஆனால், அவையெல்லாம் இன்று நமக்கு மலரும் நினைவுகள் ஆகிப் போய் விட்டன. இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், மின்னஞ்சல் ( e- mail ), குறுஞ்செய்தி ( SMS ) என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றின் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு தமிழ் மொழியை பயன்படுத்துவோர் வெகு சிலரே .

இன்று கணினியில் தமிழ் மொழியை பயன்படுத்தி, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது போல் தமிழிலும் தட்டச்சு செய்கிறோம்.இத்தனை காலம் ஆங்கிலத்தை மட்டுமே கணினியில் கண்டு வந்த நாம், இன்று நம் தாய் மொழியாம் தமிழ் மொழியையும் கணினியில் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்த முடியும் என்பதை ஆச்சர்யமாக கேட்கும் பலரும் இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.
தமிழ் மொழி கற்றலுக்கான சில வலைத்தளங்கள்
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
http://www.tamiltutor.com/
http://kidsone.in/tamil/
http://learning-tamil.blogspot.com
http://www.tamildigest.com/
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்
http://tamilnation.co/literature/projectmadurai/intro.htm
தமிழில் எழுத
http://www.quillpad.in/index.html
http://www.thamizha.com/project/ekalappai
http://software.nhm.in/products/writer
http://www.google.com/inputtools/try/
தமிழில் மொழிபெயர்க்க
http://translate.google.com/#en/ta/
http://dictionary.tamilcube.com/
இணைய தமிழ் அகராதிகள் மற்றும் கலைச் சொல் அகராதிகள்
http://www.tamildict.com
http://tamilcube.com/
http://www.thozhilnutpam.com/
http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்
கணிப்பொறி கலைச்சொல் அகராதி
http://www.thozhilnutpam.com/TamilTechnicalDictionary.pdf
பிறமொழி சொற்கள் தமிழ் மொழியில் கலந்திருப்பது நாம் அறிந்ததே. ஆனால், அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதும் போக்கு மிகுந்து வருகிறது. ஆங்கிலத்தில் பன்மையை (Plural) குறிக்க ஒருமைச் சொலின் இறுதியில் " s " , " es "அல்லது " ies " சேர்த்து எழுதுவோம்.
எடுத்துகாட்டாக , Pencil என்ற ஒருமையை பன்மையில் Pencils என்றும், Bus என்ற சொல்லை பன்மையில் Buses என்றும், Lily என்ற சொல்லை பன்மையில் lilies என்றும் எழுதுவோம். இது ஆங்கில மொழியில் பன்மையைக் குறிக்கும் முறையாகும். இதையே நம் தமிழ் மொழியில் பயன்படுத்துதல் சரியா ?
எடுத்துகாட்டாக சில சொற்கள், குட்டீஸ் , சுட்டீஸ், மக்காஸ் . இப்படி பல சொற்கள். தமிழ் மொழியில் பன்மையைக் குறிக்க "கள் " என்னும் விகுதி இருக்கையில், எதற்காக நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்துவதையே தமிழிலும் பயன்படுத்த வேண்டும் ? இதே போல், பிற மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள் என்று கேள்விப்படவில்லை. நம் தமிழ் மொழிக்கு இருக்கும் தனித் தன்மையை ஏன் பிறமொழி கலப்பால் கெடுக்க வேண்டும் ?
தமிழை தமிழில் எழுதுவோம். தமிழை ஆங்கிலத்தில் எழுதி அதை தமிங்கலமாக ஆக்க வேண்டாம்.
எதிர்காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் ? காலத்தின் போக்கில் தமிழ் மொழியே அழிந்து போய் விடுமா என்றெல்லாம் எண்ணி அஞ்சத் தேவையில்லை. தமிழ் மொழி என்றும் அழியப் போவதில்லை. அறிவியல் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களால் தமிழுக்கு அழிவு ஏற்படப்போவதில்லை. தமிழ் என்றென்றும் தனக்குரிய தனிச் சிறப்புடளுடன் பெருமையுடன் விளங்கும்.
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழருடன் தமிழில் உரையாடுவோம். ஏனெனில், தமிழருக்கு தமிழ் தான் முகவரி !!!
குறிப்பு :
இந்தக் கட்டுரை ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி க்காக எழுதப்பட்டது.
இன்று
இணையத்தின் வழியாக தமிழ் மொழி கற்றல் - கற்பித்தலுக்கான
வாய்ப்புகள் பல உள்ளன. மழலையர் கல்வி தொடங்கி முனைவர் பட்டப் படிப்பு வரையிலான பாடங்கள்,
பாடத்திட்டங்கள் என
பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. சிறு
குழந்தைகளுக்கான கேட்டல், வாசிப்பு, எழுத்து, ஒப்புவித்தல் போன்ற அடிப்படை திறன்களை
வளர்க்கும் பாடத்திட்டம் முதல், முனைவர்
பட்டத்திற்கான ஆராய்ச்சிப் படிப்பிற்கான பாடங்கள் வரை இணையத்தில் உள்ளன.
தமிழ் மொழி கற்றலுக்கான சில வலைத்தளங்கள்
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
http://www.tamiltutor.com/
http://kidsone.in/tamil/
http://learning-tamil.blogspot.com
http://www.tamildigest.com/
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம்
http://tamilnation.co/literature/projectmadurai/intro.htm
தமிழில் எழுத
http://www.quillpad.in/index.html
http://www.thamizha.com/project/ekalappai
http://software.nhm.in/products/writer
http://www.google.com/inputtools/try/
தமிழில் மொழிபெயர்க்க
http://translate.google.com/#en/ta/
http://dictionary.tamilcube.com/
இணைய தமிழ் அகராதிகள் மற்றும் கலைச் சொல் அகராதிகள்
http://www.tamildict.com
http://tamilcube.com/
http://www.thozhilnutpam.com/
http://ta.wiktionary.org/wiki/முதற்_பக்கம்
கணிப்பொறி கலைச்சொல் அகராதி
http://www.thozhilnutpam.com/TamilTechnicalDictionary.pdf
பிறமொழி சொற்கள் தமிழ் மொழியில் கலந்திருப்பது நாம் அறிந்ததே. ஆனால், அண்மைக் காலங்களில், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து எழுதும் போக்கு மிகுந்து வருகிறது. ஆங்கிலத்தில் பன்மையை (Plural) குறிக்க ஒருமைச் சொலின் இறுதியில் " s " , " es "அல்லது " ies " சேர்த்து எழுதுவோம்.
எடுத்துகாட்டாக , Pencil என்ற ஒருமையை பன்மையில் Pencils என்றும், Bus என்ற சொல்லை பன்மையில் Buses என்றும், Lily என்ற சொல்லை பன்மையில் lilies என்றும் எழுதுவோம். இது ஆங்கில மொழியில் பன்மையைக் குறிக்கும் முறையாகும். இதையே நம் தமிழ் மொழியில் பயன்படுத்துதல் சரியா ?
எடுத்துகாட்டாக சில சொற்கள், குட்டீஸ் , சுட்டீஸ், மக்காஸ் . இப்படி பல சொற்கள். தமிழ் மொழியில் பன்மையைக் குறிக்க "கள் " என்னும் விகுதி இருக்கையில், எதற்காக நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்துவதையே தமிழிலும் பயன்படுத்த வேண்டும் ? இதே போல், பிற மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள் என்று கேள்விப்படவில்லை. நம் தமிழ் மொழிக்கு இருக்கும் தனித் தன்மையை ஏன் பிறமொழி கலப்பால் கெடுக்க வேண்டும் ?
தமிழை தமிழில் எழுதுவோம். தமிழை ஆங்கிலத்தில் எழுதி அதை தமிங்கலமாக ஆக்க வேண்டாம்.
எதிர்காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் ? காலத்தின் போக்கில் தமிழ் மொழியே அழிந்து போய் விடுமா என்றெல்லாம் எண்ணி அஞ்சத் தேவையில்லை. தமிழ் மொழி என்றும் அழியப் போவதில்லை. அறிவியல் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களால் தமிழுக்கு அழிவு ஏற்படப்போவதில்லை. தமிழ் என்றென்றும் தனக்குரிய தனிச் சிறப்புடளுடன் பெருமையுடன் விளங்கும்.
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழருடன் தமிழில் உரையாடுவோம். ஏனெனில், தமிழருக்கு தமிழ் தான் முகவரி !!!
குறிப்பு :
இந்தக் கட்டுரை ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நண்பர் திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி க்காக எழுதப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)