- ஆனை அலறலோடு அலற அலறியோட
- சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
- ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை
- புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா. - வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை. - துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும். - கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்! - லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு
Source:http://nattrangaal.blogspot.com
- வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.
- வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.
- கூவுற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி கொழுகொழு கோழி கொழுகொழு கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர கோழி கொக்கர கோழி சிக்கற கோழி சிக்கற கோழி திங்கற கோழி
- சஞ்சல சலசல சலநீர் விழ விழ விழுந்தால் வெளுக்கும் வெயில் பட்டா சிவக்கும் வறுத்தா மணக்கும் வாயில் போட்டால் தித்திக்கும். - இலுப்பை பூ
- குரங்கின் வாலும் வாழைப்பழத் தோலும் நாயின் வாலும் சின்னப் பையன் வேலும்
- கோடு போட்ட வீடு கோலம் போட்ட வீடு வேப்ப மர சந்து வேணுகோபால் வீடு
- பரதநாட்டியம் பரந்த நாடு பழைய நாட்டியம் பரதநாட்டியம்.
- கும்பகோணம் குள்ளக் குமரேசன் , குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை குளத்தில் குதித்தது..
- தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி; தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி ; தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி; தக்காளி தக்காளி அருமையான தக்காளி..
இன்னும் சில நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்
திரு. ரீகன் ஜோன்ஸ் அவர்களது தமிழ் பிரியன் வலைதளத்தில் பல புதிய நா நெகிழ் வாக்கியங்களை உருவாக்கியுள்ளார். அப்பக்கத்திற்கான இணைப்பு இதோ:
நா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters) தமிழ் பிரியன்
திரு. ரீகன் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றிகள்.