blank'/> muhilneel: October 2011

Monday, October 31, 2011

Importance of trees

In one day a human being breathes oxygen equivalent to three cylinders.Each oxygen cylinder on an average costs Rs 700, so in a day one uses Oxygen worth Rs 2100 and for a full year it is Rs 7,66,500.
If we consider an average life span of 65 years; the costs of oxygen we use become a staggering sum of Rs 500,00,000. All this oxygen is derived free of cost from the surrounding trees. Very few people look at trees as a resource and there is rampart tree cutting going on everywhere which should stop.

Sunday, October 30, 2011

மாலை மாற்றுச் சொல், மாலை மாற்றுச் செய்யுள்

Palindrome என்றால் முன்னாலிருந்து பின்னுக்கும் பின்னாலிருந்து
முன்னுக்குமாக வாசித்தாலும் ஒரே மாதிரியான எழுத்துக்கள் - அதாவது ஒரே சொல்- பிறழாமல் வரும் அமைப்பு.இதனை தமிழில் " மாலை மாற்று" என்று
குறிப்பிடுவர்.சித்திரக்கவி வகையில் மாலை மாற்று எனப்படும் பாலிண்ட்ரோம் (Palindrome) அடங்கும்.

இதன் இலக்கணம் –
“ஒரு செய்யுள் முதல்,
ஈறு உரைக்கினும்,
அஃதாய் வருவதை
மாலை மாற்றென மொழி”
பொருள் –
ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்குவர வேண்டும்.

http://sagotharan.wordpress.com

நமது தமிழ் மொழியில் உள்ள சில மாலை மாற்று செய்யுள்கள்.

நாள்உ லைகொதி அசீரண உலாதுதி
நீள்க தைசரி கவருது - வாழ்வா
துருவ கரிசதைகள் நீதி துலா உ
ணரசீ அதிகொலைஉள் நா. 


https://groups.google.com/group/santhavasantham

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"

"நேணவராவிழ யாசைழியே, வேகதளோயா ளாயுழிகா
காழியுளாயா ளோதகவே, யேழிசையாழவி ராவணனே!"
முதல் "ந"கரம் கடைசியில் "ன"கரமாகியிருக்கிறதே அன்றி மற்றபடிக்கு சரியான பாடல் தான்.


source: http://www.visvacomplex.com/MaalaiMaaRRu2.html

திருஞான சம்மந்தரின் மாலை மாற்று திருப்பதிகம் 
பாடல்கள் மற்றும் அதன் பொருள்
முதற்பாடல்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

இரண்டாம் பாடல்:

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க

மூன்றாம் பாடல்:

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே

நான்காவது பாடல்:

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

நீவா = நீங்குதல் இல்லாத
வாயா = மெய்ப்பொருளானவனே
கா = காவுகின்ற
யாழீ = யாழையுடையவனே
வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம்
வாராமே = எங்களை அடையாமல்
கா வா = வந்து காப்பாற்றுக
வான் நோவா வா = தேவர்கள் வருந்தாதபடி
மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே
காழீயா = சீர்காழி இறைவனே
காயா = ஆகாய வடிவினனே
வாவாநீ = நீ விரைந்து வருவாயாக

ஐந்தாவது பாடல்:

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

யா = எப்பொருள்களுக்கும்
காலா = காலவடிவமாக உள்ளவனே
மேயா = (எல்லாவற்றிலும்) மேவியிருப்பவனே
மேதாவீ = அறிவில் மேம்பாடு மிக்கவனே
தாய் ஆவி = (எல்லோருக்கும்) தாயாகவும், உயிராகவும் விளங்குபவனே
வீயாதா = எக்காலத்தும் அழிவில்லாதவனே
வீ தாமே = கின்னரம் என்னும் பறவைகள் தாமே (இசையில் மயங்கி விழுமாறு)
யாழீ = யாழை மீட்டுபவனே
யாம் = யாங்கள்
மேல் = மேற்கொண்டு
ஆகு = ஆவனவற்றிற்காக
ஆயா = ஆராய்ந்து வருந்தாதபடி
கா = காத்தருள்க

ஆறாவது பாடல்:

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகாலேலாகா ழீதேமேகா போலேமே

மேலே = மார்க்கண்டேயரின் மீது
போகாமே = கூற்றுவன் வெகுண்டு செல்லாமல்
தேழீ = அதட்டித்தெழித்தருளியவனே
காலாலே = திருவடியினாலே
கால் ஆனாயே = காலனுக்கும் காலனாய் விளங்கினையே
ஏல் = எற்றுக்கொள்ளத்தக்க
நால் = சனகர், சனந்தனர், சந்த்குமாரர், சனாதனர் என்னும் நாஉ முனிவர்களுக்கும்
ஆகு = ஞான ஆசிரியராக எழுந்தருளி
ஆல் = கல்லால மர நிழலில்
ஏலா = அவர்களை ஏற்றருளியவனே
காழீதே = சீர்காழியில் விளஉம் முழுமுதல் தெய்வமே
மேகா = மேகம் போன்ற கொடைத்தன்மையுடையவனே
போலேமே = அடியார்களாகிய நாங்கள் உன் தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவரைப் போல ஆக மாட்டோமா

ஏழாவது பாடல்:

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நீயா = நீங்குதல் இல்லாத
மாநீ =உமாதேவியை உடையவனே
ஏயா = ஒப்பில்லாத
மாதா = தாயாக விளங்குபவனே
ஏழீ = ஏழு இசையின் வடிவாகத்திகழுபவனே
கா நீ தானே = நீயே எம்மைக் காப்பாற்று
நே = நேயம் மிகுந்த நெஞ்சை
தாநீ = இடமாகக் கொண்டருள்பவனே
காழீ = சீர்காழியில் விளங்கும்
வேதா = வேதங்களின் பொருளானவனே
மாய் = எங்களைக் கொல்லவரும்
ஆநீ = துன்பங்களை
மாயாயே = நீ மாய்த்தருள மாட்டாயா

எட்டாவது பாடல்:

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

(சம்பந்தரின் தேவாரப்பதிகங்களில் எட்டாவது பாடலில் இராவணனைக் குறிப்பிட்டிருப்பார். அந்த மரபைப்பின்பற்றியே இந்தப் பாடலும் இராவணனைக் குறிக்கிறது.)

நே = நேயம் மிகுந்து
அணவர் = திருவடியை நெருங்கி நிற்கும் மெய்யடியார்களின்
ஆ = ஆவிகள்
விழ = தம் வயமற்று கிடக்க
யா = யாத்துக் கட்டிய
சை = ஆசையாகிய கயிற்றினை
ழியே = (அருளால்) அவிழ்த்தருள்பவனே
வேக = வேகத்தினுடைய மானின்
அதள் ஏரி = தோலினை அழகு பெற அணிந்தருள்பவனே
அளாய = துன்பங்கள் கலந்த
உழி = இடங்களில்
கா = எம்மைக் காத்தருள்க
காழியுளாய் = சீர்காழிப் பதியில் வீற்றிருப்பவனே
அரு = மன்னிப்பதற்கு அரிய
ஏது = குற்றங்களை
இளவெள = எம் சிறுமைத்தன்மையினால் யாம் செய்துவிட்டோம்
அகவே = (ஆதலின்) அவை நின்னருளால் பொறுத்தருளத்தக்கனவே ஆகும்
ஏழிசை = ஏழிசையும் பாடுதலில் வல்ல
இராவணனே = இராவணனும்கூடத் தான் செய்த பெரும்பிழைகளை நின்னால் பொறுக்கப்பட்டனன் அல்லனோ?

ஒன்பதாவது பாடல்:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

(ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மாவும் தேடியும் அடிமுடி காணமுடியாத பெருஞ்சிறப்பைப் பாடுவார்)

காலேமேலே = எல்லாப் பொருள்களுக்கும் முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = அடியார்களுக்குப் பெரும் செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = எல்லாரையும் மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும் பிரம்ம தேவனும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = எம்மைக் காத்தருள்க

பத்தாவது பாடல்:

வேரியுமேணவ காழியயே யேனைனிணே மடளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

(பத்தாவது பாடலில் சமணர்களையும் பௌத்தர்களையும் சம்பந்தர் சாடியிருப்பார்).

வேரியும் = வாசனையும்
ஏண் = பெருமையும்
நவம் = புதுமையும் கொண்ட
காழியயே = சீர்காழிப் பதியில் உள்ளவனே
ஏனை = பிறிதாகிய வெறுப்பையும்
நீள்நேம் = நீண்ட நேயத்தையும்
அடு = அடுத்தலும்
அள் = அள்ளுதல்
ஓகரது ஏ = யோகிகளுடைய செயலேயாகும்
தேரகளோடு = புத்தர்களின் சொற்களையும்
அமணே = சமணர்களின் சொற்களையும்
நினை = நினைத்தலையும்
ஏய் = அவர்களுடன் கூடுதலையும்
ஒழி = ஒழியும்படி செய்து
காவணம்(ஏ) = அந்நெறிகளில் யாம் சேராமல் எம்மைக் காக்கும் தன்மைகள்
உரிவே = உமக்கு உரியனவேயாகும்

திருக்கடைக்காப்பு:

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே

(பத்துப் பாடல்கள் கொண்டதுதான் பதிகம். ஆனால் ஞனசம்பந்தரின் பதிகங்களின் இறுதியில்
அந்தப் பதிகத்தைப் பாடிய தன்னைப் பற்றியும் தமிழின் சிறப்பையும், பதிகத்தைப் பாடுவதால் ஆகிய பயனையும் கூறியிருப்பார். இந்தப் பதினோராவது பாடலைத் 'திருக்கடைக்காப்பு' என்று குறிப்பிடுவார்கள்).

அழி = அழிக்கவல்லவனே
தாய் ஏல் = உலகுக்கெல்லம் தாயாகும் தன்மையை ஏற்கத்தக்கவன்
நல் நீயே = நல்லவனாகிய நீ ஒருவனேயாம்
நல் = நன்மை புரிவதில்
நீள் = உயர்வு மிக்கவனே
ஆய் உழி கா = தளர்ச்சி நேரும் இடத்து எம்மைக் காத்தருள்க
காழியுளானின் = சீர்காழிப் பதியில் உள்ள சிவனைப் பற்றிய
நையே = மன உருக்கத்தைத் தரும் இப்பாடல்களையே
நினையே = நினைப்பாயாக
தாழ் இசையா = (அதனால்) உமக்கு ஒரு குறையும் உண்டாகாது
தமிழ் ஆகரனே = தமிழுக்கு உறைவிடம் போன்ற திருஞானசம்பந்தன் உறுதி கூறுவது இது.

Source::http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

Friday, October 28, 2011

Thursday, October 27, 2011

Kovil Puliyodharai / Puliyodharai Recipe | Sharmis Passions

Methi Matar Malai | Sidedish for rotis | Sharmis Passions

Eggless Mango Cake / Mango Loaf Bread | Sharmis Passions

Instant Tomato Dosai (Thakkali Dosai) | Sharmis Passions

Eggless Banana Muffins (Eggless Banana Nut Muffins) | Sharmis Passions

Baked Bread Rolls - Healthy teatime snack | Healthy Diet Plan #4 | Sharmis Passions

Carrot Peas Paratha - Healthy dinner time | Healthy Diet Plan #6 | Sharmis Passions

Thattai Recipe (Thattai Murukku Recipe) | Diwali Savoury Snack Recipes | Sharmis Passions

Badusha Recipe - How to make Badhusha (Stepwise and Video Included) | Diwali Sweets | Sharmis Passions

INSTANT OATS DOSA | INDIAN OATS RECIPES ~ Rak's Kitchen

Mysore Pak Recipe | Deepavali Sweets | Sharmis Passions

Friday, October 14, 2011

கணிப்பொறி கலைச் சொல் அகராதி

நன்றி :

வளர் தமிழ் மன்றம்,

அண்ணா பல்கலைகழகம்,
சென்னை 600025.




http://www.scribd.com/doc/68782138/TamilTechnicalDictionary?secret_password=buuqwqzf7gtn0rvl00j