Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Thursday, August 6, 2015
Recycled Pizza Box
Labels:
Arts and Crafts,
pizza box,
Recycled Crafts,
wall decor
Wednesday, August 5, 2015
Notan Art
Notan, the Japanese word for the interaction between dark and light.
Creating a black and white collage out of a simple square, and learning
about positive and negative space.
Inspired by Dhiyana's Notan art, I tried this one.
Inspired by Dhiyana's Notan art, I tried this one.
Labels:
Arts and Crafts,
Notan Art
Thursday, July 30, 2015
புத்தொளி பிறந்தது !
வாசலில் இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே
உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து
இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை
சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன்.
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை
அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த
நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன்
கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின்
பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். அவன் தேடியது அதில்
இல்லை. பரபரப்புடன் தன் அறைக்குச் சென்று தனது அலமாரியில் தேடினான்.
அங்கும் அவன் தேடியது கிடைக்கவில்லை.
ஏமாற்றத்துடன் அறையை விட்டு வந்த நிவாஸனை அவனது தந்தை எதிர்கொண்டார்.
” என்னப்பா ! ரொம்ப பரபரப்பா எதையோ தேடுற போலயே. என்ன தேடுற ? “
” ஒரு முக்கியமான பேப்பர் ஒண்ணு வெச்சிருந்தேன் அப்பா. அதைக் காணோம். அதைத் தான் தேடறேன் “
உன் கூட படிக்கிற அனிதாங்கற பொண்ணுக்குக் காதல் கடிதம் எழுதி வெச்சிருந்த.அது தானே ! அது என் கிட்ட தான் இருக்கு.”
அப்பா! அது வந்துப்பா….. நான் அந்தப்
பொண்ணைக் காதலிக்கிறேன்.அவள் என்னை விரும்பறாளான்னு தெரியலை.அதைத்
தெரிஞ்சிக்கத் தான் கடிதம் எழுதினேன்.
காதல் ! காதல் ! காதல் ! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா ?
இப்படி ஒரு கேள்விய நான் கேட்க
மாட்டேன். ஏன்னா, நம்ம வாழ்க்கையில பிடிப்பு ஏற்பட வேணும்னா,
காதலிக்கணும். முதல் படியா, நம்மை நாம் காதலிக்கணும். நம் செயல்கள்,
செய்கைகளைக் காதலிக்கணும். அப்போ தான் நம் மேலேயே நமக்கு நம்பிக்கை
பிறக்கும். நாம் செய்யும் ஒவ்வோர் செயலையும் முழு ஈடுபாட்டுடனும், மனம்
நிறைந்த ஆசையுடனும் காதலுடனும் செய்ய வேண்டும். அந்தக் காதல் நம் முயற்சியை
மென்மேலும் ஊக்கப்படுத்தும். அந்த முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ, எது
கிட்டினாலும், நம் மனதை ஒருநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதை
ஒருநிலைப் படுத்த நாம் அச்செயலின் மீது கொண்ட காதலும் ஈடுபாடுமே துணையாக
நிற்கும்.
உன் மேலே உனக்குக் காதலும்
நம்பிக்கையும் வந்துட்டா, உன் காதலை வெளிப்படுத்தக் கடிதம் எல்லாம்
தேவைப்படாதுப்பா. உன் கண்களும் உதடுகளுமே அதை அழகாக வெளிப்படுத்தும் !
நிவாஸனின் மனதுள் புத்தொளி பரவியது. அவனது வாழ்விலும் காதலிலும் அவனுக்கான வெற்றி ஒளி தெளிவாகத் தெரிந்தது.
பனிப்பூக்கள் கலாச்சார சஞ்சிகை நடத்திய சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
“காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?”
இவ்வரிகள் கதையில் வருமாறு கதையை எழுத வேண்டும். எனது முயற்சி மேலுள்ள கதை. போட்டியில் பரிசு கிட்டவில்லை.
Saturday, July 18, 2015
நெஞ்சில் முள்
வெளியில் ஆளே விறைத்து விடும் அளவுக்கு குளிர். குளிருக்கான
ஆடைகளான கம்பளி அங்கி, தொப்பி என அனைத்தையும் மாட்டிக் கொண்டு, கதவைத் திறந்தார் எழிலரசி. காலையில்
வாசலை தெளித்து, கோலம் போட்டால் தான்
எழிலரசிக்கு அன்றைய பொழுது
தொடங்கியதாக அர்த்தம்.
ஊரில் இருக்கும்
வரை, அன்றாடம் காலையில் வீட்டு வாசலில் சாணம்
தெளித்து, கோலம் போட்டு, வண்ணப் பொடி கொண்டு அழகாக வண்ணம் தீட்டி, பண்டிகை காலங்களில் வாசல் தொடங்கி வீதி வரை வண்ணக் கோலம் போட்டு பழகிய எழிலரசிக்கு அமெரிக்கா வந்த புதிதில், அடுக்கு
மாடிக் குடியிருப்பில், சிறிய வாசலில் எப்படி
கோலம் போடுவது என்ற யோசனையே
மேலோங்கியது.
அரிசியை சற்று நெருநெருவென்று
அரைத்து அதை வைத்து கோலம் போட்டு வாசலை அலங்கரித்து விடுவார். இவரது கோலம் போடும் ஆர்வத்தை
கடும் குளிரும் கலைத்து விடவில்லை.பண்டிகை
காலங்களிலும், வண்ணக் கோலங்கள்
வாசலை நிச்சயம் அலங்கரித்திருக்கும்.
அரிசி மாவுடன் மஞ்சள் தூள் மற்றும் உணவில் கலக்கக் கூடிய வண்ண திரவங்களை (food coloring) கலந்து வண்ண பொடிகள்
செய்வார்.
பெரிய
கோலமாக போட முடியாவிட்டாலும், வாசலுக்கு அளவாக, சிறியதாக சிக்குக் கோலங்களும், கோட்டுக்
கோலங்களும் போடுவார். பூஜைக்கென்று தனி அறை இல்லாது போனாலும், சமையலறையில்
தெய்வத்திற்கென்று சிறு இடம் ஒதுக்கி, படங்களை அடுக்கி வைத்து, கோலம் போட்டு
நாளும் பூஜை செய்வார்.
கதவு திறக்கும் சப்தம் கேட்டு இனியா
தூக்கம் கலைந்து எழுந்து வந்தாள். அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக்
கண்டதும்,
" ஓ ! அம்மா ! வெளியில
விறைக்குற அளவுக்கு குளிர் அடிக்குது. எதுக்காக இந்த குளிரிலேயும் கோலம் போடறீங்க ? சீக்கிரமா உள்ள வாங்க ! "
அக்கறையுடன் அன்னையிடம் கூறினாள் இனியா.
கோலம்
போட்டுவிட்டு உள்ளே வந்த எழிலரசி,
“
அப்பப்பா ! பயங்கர குளிர் ! “ என்றவாறு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டார்.
“ இந்தக் குளிர்ல எதுக்காக கோலம் போட
வெளியில போறீங்க ? “ அக்கறையுடன் கோபித்துக் கொண்டாள் இனியா.
“கோலம் போடுறதுக்கு முக்கிய காரணம்,
அரிசி மாவுல கோலம் போட்டா, அதை எறும்பு சாப்பிடும். இதனால, ஒரு சின்ன உயிருக்காவது
இன்னைக்கு சாப்பிடறதுக்கு வழி பண்ணுன திருப்தி “
“அது மட்டுமில்ல. குனிஞ்சு கோலம் போடுறது
நல்ல உடற்பயிற்சியும் கூட “ என்று விளக்கமளித்தார் எழிலரசி.
சற்று நேரம் யோசித்த இனியா, “ பிறகு
எதுக்காக அம்மா, வீட்டுக்குள்ள எறும்பு வந்துட்டா உடனே மருந்தடிக்க பெஸ்ட்
கன்ட்ரோல் (Pest Control) கூப்பிடறீங்க ? எறும்பு சாப்பிட்டுட்டு போகட்டும்
அப்படின்னு விட்டுடலாமே ? அது எவ்வளவு சாப்பிட்டுடப் போகுது ? என்றாள்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்
திகைத்து நின்றார் எழிலரசி.
Tuesday, July 7, 2015
அன்பின் உருவம் அன்னை
நன்றி, புகைப்படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த
உலகில் புதிதாய் ஒவ்வோர் உயிரும் ஜனிக்கும் வேளையில் ஓர் அன்னையின் ஜனனமும் நிகழ்கிறது.
நாம் இந்த மண்ணில் வாழும் காலத்தில் நமக்கு எத்தனை எத்தனையோ உறவுகள் கிடைக்கலாம். இவ்வுலகில் நமக்கான முதல் உறவு – நம் தாய். அன்னைக்கு
அடுத்தபடியாக நமக்கு இருக்கும் உறவுகள் அனைத்தையும் நமக்கு அறிமுகம் செய்பவர் நம் அன்னையே.
இவ்வுலகில்
தான் படைத்த அனைத்து ஜீவரசிகளுக்கும் தானே துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
இறைவன் உருவாக்கிய படைப்பே “தாய்”. இறைவனது படைப்பில், உலகில் தன்னலம் கருதாத படைப்பாக்கம்
ஒன்று இருக்குமாயின், அவரே “அன்னை”.
அம்மா
என்ற வார்த்தையில் இருக்கும் மூன்று எழுத்துகள்,
“
அ “ – உயிரெழுத்து , கருவிற்கு உயிர் கொடுக்கிறார் அன்னை.
“
ம் “ – மெய்யெழுத்து , உயிர் கொடுத்த கருவிற்கு தனது மெய்யில் இடம் கொடுக்கிறார்.
“
மா “ – உயிர் மெய்யெழுத்து , தான் உருவாக்கிய கருவுக்கு உயிரும் மெய்யும் கொடுத்து,
உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறார்.
இந்த
தத்துவத்தின் அடிப்படையில் உருவான சொல்லே “அம்மா”.
நமக்கான
அனைத்துத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வோர் முயற்சியிலும்
நமக்கு ஊக்கம் அளித்து, நம் வெற்றிகளில் நம்முடன் குதூகலித்து, அதே வேலையில் நாம் பெற்ற
வெற்றியின் தாக்கம் நம்மை நிலைகொள்ளாது, கீழே தள்ளிவிடும் நிலையில் நாம் இருந்தாலும்,
அதை நமக்கு உணர்த்தி பாதுகாப்பவர். தோல்வியிலும் துவண்டு விடாது தோள் கொடுத்து நல்லதோர்
தோழியாய், துணை நிற்பார் நம் அன்னையே.
தன்
மனையாளுக்கு உற்ற துணையாய், பிள்ளை வளர்ப்பில் தன் பங்கென்பது, பிள்ளைகளுக்கு தேவையானவற்றை
வாங்கிக் கொடுத்து, அறிவுரை கூறுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக எண்ணாது, தன் பிள்ளைகட்காய்,
தன் மனையாளுடன் அடுக்களை உதவி முதல் துவங்கி, பிள்ளைகட்கு உணவூட்டி, சீருடை அணிவித்து,
தலை வாரி, காலணி அணிவித்து, பிள்ளையின் புத்தகச் சுமையை தான் சுமந்து, பள்ளி வாசல்
வரை சென்று விட்டு வரும் ஒவ்வோர் தந்தையும் தாயுமானவரே.
கணவரது
ஒவ்வோர் முயற்சியிலும் உற்ற துணையாய், பக்க பலமாய் நின்று ஊக்குவிப்பதோடு, தன் பங்கிற்கு
தன்னாலான வரையில் பொருளீட்டி, சேமித்து, சிக்கனத்துடன் குடும்பம் நட்த்தும் ஒவ்வோர்
அன்னையும் தந்தையுமானவரே. அன்னையின் அஞ்சறைப்
பெட்டியில், சிறுகச் சிறுக சேமித்த சில்லரைக் காசுகளும் சமயங்களில், எதிர்பாரா பெரும்
செலவுகட்கும் கூட கைகொடுக்கும். அஞ்சறைப் பெட்டிகளில் சுவையும் மணமும் மட்டுமல்ல, சமயங்களில்,
அவை உண்டியலாகவும் மாறி, நம் அவசரத் தேவைக்கு உறுதுணையாய் நிற்கும்.
ஐயிரு
திங்கள் மடிசுமந்து, பிள்ளைக்கு தன் உதிரத்தையே பாலாக்கி, உணவு, உறக்கம் என்பதையெல்லாம்
மறந்து, தன் பிள்ளையே உலகமென, அவர்தம் நலனே தலையாயதாக எண்ணி பெண்டிர் செய்யும் பல தியாகங்கள்,
இன்றளவும் நம் சமூகத்தில், அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தான கடமையாக சித்தரிக்கப்படுகிறது.
பல வேளைகளில், ஒரு தாயின் கஷ்டம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
தன்
உதிரத்தை பாலாக்கி, நமக்கு ஊட்டும் நம் தாய், தன் உதிரத்தை வியர்வையாக்கி நமக்காய்
உழைக்கும் நம் தந்தை என, அம்மை அப்பன் இருவருமே தாயுமானவர்களே.
“ தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை “
இந்த
உயர் சிந்தனையை நாம் எந்நாளும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு
குழந்தைக்கு பாலூட்டி, சீராட்டி வளர்ப்பதோடு ஒரு தாயின் கடமை முடிந்து விடுவதில்லை.
அந்தக் குழந்தை வளர வளர, அதன் வாழ்க்கையின் ஒவ்வோர் நிலையிலும், ஊக்கம் அளித்து, உற்சாகம்
ஊட்டி, உறுதுணையாய் நிற்பார் அன்னை. பிள்ளைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க, ஓர்
தாய் பெரிய பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. அவர் பெற்ற அனுபவங்களே
நமக்கோர் பல்கலைக்கழகமாக திகழும்.
அன்னை தன் கிள்ளைக்கு உணவூட்டும் போது சொல்லும் கதைகளின் உதவியுடன், இரண்டு கை உணவு அதிகமாக உள்ளே செல்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல், நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் மனதில் பதிகிறது. அதே போல், உறங்குகையில் தாய் சொல்லச் சொல்ல “ உம்…உம்…” என்று சொல்லியபடியே கதை கேட்டு உறங்கும் குழந்தை நல்ல கற்பனை சக்தியுடன், எதையும் தெளிவாக விளக்கமாக விவரிக்கும் தன்மை உடையவராய் விளங்கும்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்னைக்கு நன்றி சொல்வோம். அன்னையின் கரம் பற்றி அன்புடனும் அனுசரனையுடனும் நடந்து கொள்வோம்.நமக்காக மூன்று வேளையும் உணவு பரிமாறி, நாம் உண்ணும் வரை அருகே இருந்து, நாம் உண்ட திருப்தியில் மனம் மகிழும் அன்னைக்கு ஒருநாள் உணவு பரிமாறி, நாமும் மகிழ்ந்து அவரையும் மகிழ்விப்போம்.
அன்னையை போற்றுவோம். அன்னையின் அன்பில் நம் வாழ்வு நலமும் வளமும் அடையும்.
குறிப்பு:
இக்கட்டுரை தமிழ்க் குடில் நடத்திய அன்னையர் தின கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
குறிப்பு:
இக்கட்டுரை தமிழ்க் குடில் நடத்திய அன்னையர் தின கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது.
Wednesday, May 27, 2015
பயன்மிகு இணையவழிச் சேவைகள் - இணைய நூலகங்கள்
நூலகங்கள் நம் எண்ணங்கள், கனவுகள்,திறன்கள் என அனைத்தையும் தன்னுள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷ கிடங்கு. ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்கள்.
இணையத்தின் வாயிலாக பல நூலகங்கள் நூல்களை தரவிறக்கம் செய்யும் வசதியுடனுன், இலாப நோக்கின்றி புத்தகங்களை தரவேற்றும் தனிநபர்கள் பலரின் வலைப்பூக்களும் நமக்கு இலவசமாக கிடைக்கின்றன.அத்தகைய நூலகங்கள் மற்றும் வலைப்பூக்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இணைய ஆவணகம்( Internet Archive : Digital Library )
Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். இந்நூலகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், திரைப்படங்கள், மென்பொருட்கள், பத்திரிகைகள், பாடல்கள்,லிப்ரி வாக்ஸ் ( LibriVox) ஒலி நூல்களின் தொகுப்பு, நுண் படங்கள் ( Micro film)என அனைத்தும் கிடைக்கின்றன.
இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள்,நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.
இந்நூலகத்தை கீழ்காணும் சுட்டியில் பயன்படுத்தலாம்.
இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை பல வடிவங்களில் ( format ) பெறலாம். Pdf, zip file, torrent, epub என பல வடிவங்களில் தரவிறக்கம் செய்யும் வசதியும் கிடைக்கிறது.
Open Library என்றழைக்கப்படும் திறந்த நூலகம் பல பொது தளங்கள் மற்றும் இப்போது அச்சில் இல்லாத பல பழைய நூல்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.
திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது. யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.
திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமானது. யார் வேண்டுமானாலும் இந்நூலகத்திலுள்ள நூல்களின் விபரங்களை மாற்றி அமைக்கலாம். இந்நூலாகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே, இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும்.
இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம்.புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம்.
திறந்த நூலகம் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்களை தருகிறது. இந்நூலகத்தில் இருக்கும் நூல்கள் பயனர்களின் தேவைக்கேற்ப பல கோப்பு வடிவங்களில் ( file formats ) கிடைக்கிறது.
PDF, Plain text, ePub, DjVu, Kindle, DAISY ஆகிய கோப்பு வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன. இதில் DAISY என்பது Digital Accessible Information SYstem என்பதைக் குறிக்கின்றது. எண்ணிம ஒலி நூல்கள், வார மற்றும் மாத பத்திரிகைகள் இவற்றை வாசிக்க இம் மென்பொருள் பயன்படுகிறது. DAISY அச்சுப் பிரதிகளுக்கு மாற்றாக கிடைக்கும் ஒலிக் கோப்புகள் ஆகும். இது பார்வையற்றோர், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.
இந்நூலகத்தினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பயன்படுத்தலாம்.
Http://openlibrary.org/
சென்னை நூலகம்
இந்நூலகம் திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம் ஆகும். இந்நூலகம் வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் ( Gowtham Web Services ) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். இந்நூலகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை கிடைக்கின்றன. உறுப்பினர்களாக இணைவோருக்கு இந்நூலகத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை pdf கோப்புகளாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை 20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்நூலகத்தில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை கீழ்காணும் வலைப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
இந்நூலகத்தின் இணையதள முகவரி
http://www.chennailibrary.com
நூலகம் திட்டம் (noolaham.org) :
இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவோர் எவர் வேன்டுமானாலும், எந்த நூலை வேண்டுமானாலும் மின்னூலாக்கம் செய்யலாம். குறிப்பாக, மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும்.
இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன.
இந்நூலகத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பயன்படுத்தலாம்.
http://www.noolaham.org
மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ( Project Madurai ):
உலகளாவிய தமிழர்கள் இணையத்தின் வாயிலாக ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி, உலகில் உள்ள எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள இலவசமாக வழங்கும் சேவை முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் ஆகும்.
இத்திட்டத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களது பங்களிப்பை வழங்கலாம்.
தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து தரவேற்றலாம். புதிதாக தரவேற்றப்பட்டுள்ள நூல்களை ஒப்பச்சு ( Proof Read ) செய்தும் நம் பங்களிப்பை இந்நூலகத்துக்கு வழங்கலாம்.
இத்திட்டத்தின் வாயிலாக பல இலக்கண இலக்கிய நூல்களையும் நாம் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்திட்டத்தினை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
http://www.projectmadurai.org/index.en.html
இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் புத்தகங்களின் பட்டியலை இங்கு காணலாம்.
http://www.projectmadurai.org/pmworks.html
புத்தகங்களை pdf கோப்புகளாகவும், Unicode, TSCII எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
தமிழ் இணைய கல்விக்கழகம் ( Tamil Virtual University) :
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின் நூலகம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள்,நெறி நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் கவிதைகள், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் என்று பலவகையான நூல்களும் கிடைக்கின்றன.
சங்க இலக்கிய நூல்களுக்கான உரைகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நூலினுள் நமக்குத் தேவையானவற்றை குறிச்சொற்களின் உதவியுடன் தேடும் வசதியும் கிடைக்கிறது.
இந்நூலகத்தில் பால்ஸ் அகராதி (Pal's dictionary ), ஆங்கிலம் தமிழ் அகராதி,சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி, தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி என்று பல அகராதிகள் கிடைக்கின்றன.
நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம் என்று பல சேவைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
இணைய கல்விக் கழகத்தின் நூலகத்தினை கீழ்க்காணும் இணைய பக்கத்தில் பெறலாம்.
செய்யுட் பாடல்கள், பாடல்களுக்கான உரைகள் என அனைத்தும் தெளிவாக, பயனாளர்கள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில் கிடைக்கிறது.
திறந்த வாசிப்பகம் ( Open Reading Room):
தமிழ் இலக்கியங்களின் தொகுப்பாக இணையத்தில் செயல்படும் நூலகம் திறந்த வாசிப்பகம் ஆகும். இங்குள்ள நூல்கள் அனைத்தும் பயனாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. நாளும் புதிதாக நூல்கள் பலவும் தரவேற்றம் செய்யப் படுகிறது.
இத்திட்டம் சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர் திரு. இரமேஷ் சக்ரபாணி அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திறந்த வாசிப்பகத்தினை கீழ்காணும் இணைய பக்கத்தில் காணலாம்.
பிரித்தானிய தமிழ் நூற்சேகரம்:
பிரித்தானிய தமிழ் நூற்சேகரம் என்கிற இத்திட்டம் பிரித்தானிய நூலகங்களும், தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்சமயம் பத்து நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன.இத்திட்டம் இந்திய மின் நூலகம் (Digital Library of India), மதுரை திட்டம் (Project Madurai), Million books project,TADILNET ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவில் பல தமிழ் ஆவணங்கள், அரிய பழைய தமிழ் நூல்களும் தரவிறக்கம் செய்யும் வசதியையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பூவினை கீழ்க்காணும் இணைய முகவரியில் பார்த்து பயன் பெறலாம்.
தமிழ் மரபு நூலகத்தின் வலைப்பூவினை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகம் :
தமிழகம் வலை வழங்கும் தமிழ் மின் நூலகத்தில் தமிழகம் வலையின் மின் வெளியீடுகளாக டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் நூல்கள், பெரியாரின் நூல்கள், மார்க்ஸிச நூல்கள், பல எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் கிடைக்கின்றன.
இணையத்தில் இயங்கும் இன்ன பிற தமிழ் எண்ணிம நூலகங்களுக்கான இணைப்புகளும், நூல் விற்பனைத் தளங்கள் மற்றும் நூல் தரவு தளங்களுக்கான இணைப்புகளும் கிடைக்கிறது.
தமிழகம் வலை வழங்கும் நூலகத்திற்கான இணைப்பு இதோ
இலவச தமிழ் மின்னூல்கள் :
மின் புத்தகங்களை படிக்க இன்று பல வகையான கருவிகள் கிடைக்கின்றன. அமேசான் (Amazon), பார்ன்ஸ் & நோபிள் (Barnes & Noble), புக்கீன் (Bookeen), எக்டாகோ (Ectaco), கோபோ (Kobo), பாக்கெட் புக் (Pocket Book) போன்ற நிறுவனங்கள் வழங்கும் இக்கருவிகளில் பயன்படுத்த ஏதுவாக மின் புத்தகங்களை வடிவமைத்து வழங்கும் தளம் தான் FTE ( Free Tamil Ebooks).
பழந்தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து சேமிக்க பல திட்டங்கள் செயல்படுகின்றன. புதிதாக தற்காலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் நூல்களை மின்னூலாக்கம் செய்து அந்நூல்களை Creative Commons உரிமத்துடன் வெளியிடப்படும் போது, அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கான உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றது. அதே வேளையில், அப்புத்தகங்களை எவர் வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் புதிதாக வெளியாகும் தமிழ் புத்தகங்களை நாம் எளிதாக பெறலாம்.
இலவச தமிழ் மின்னூல்களை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
கூகுள் புத்தகங்கள் :
http://books.google.com/
கூகுள் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால், கீழ்காணும் கூகுள் ப்ளே பக்கத்தில் சென்று தரவிறக்கி, நமது மின்னஞ்சல் சேமிப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
https://play.google.com/books
குறிப்பு :
இக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள படங்கள் அனைத்தும் இங்கு குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
http://www.vallamai.com/?p=56279
இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.
http://www.vallamai.com/?p=56279
Labels:
இணையவழி சேவைகள்,
கட்டுரை,
தமிழ்,
வல்லமை மின்னிதழ்
Friday, April 24, 2015
April Showers....
Scrapbook page for welcoming the colourful spring.
I have used an old directory for creating this scrapbook page.
The umbrella, rain drops were drawn and cutout from waste cardboard.
The flowers and birds were from advertisement flyers and old magazines. I have added some Spring quotes.
Linking this to
LESSology Challenge #46: Typeface
Mixed Media Monthly Challenge #11 - April Showers
Recycle Re-Purpose Re-Invent April1 April30 Must Recycle
Labels:
Arts and Crafts,
Recycled Crafts,
Scrapbook page
Subscribe to:
Posts (Atom)








