Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Thursday, August 29, 2013
Bala Krishna - Color Pencil Sketch
Labels:
Arts and Crafts,
Drawing
Tuesday, August 27, 2013
அதலைக்காய் - முள்ளிக்காய் - மிதி பாகற்காய்
Labels:
தமிழ்
Wednesday, August 21, 2013
ஓர் இனிய நட்பின் உதயம் !!!
அந்த மூன்றாண்டு கல்லூரிப் படிப்பு, காலமெலாம் அவளது நினைவுகளில் பசுமையாய் நிறைந்திருக்கக் கூடிய இனிமையானதோர் தன்னலம் பேணா உறவினை ஏற்படுத்திக் கொடுக்குமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
அந்த அன்புத் தாரகையுடன் அவளிற்கு ஏற்பட்ட அழகானதோர் நட்பிற்கும், ஆழமான நேசத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்து, வசந்த்தத்தினை அள்ளித் தந்த தோழியவளுக்கு கோடானு கோடி நன்றிகளை ஆனந்தக் கண்ணீருடன் காணிக்கையாக்கினாலும் தகும்.
இனிமையானதொரு உறவிற்கு அடித்தளமிட்ட அந்த நிகழ்வு - அது என்றென்றும் மனதில் பசுமையாய் பூத்துக் குலுங்கும், நினைத்த மாத்திரத்தில் சுகந்தத்தை அள்ளித் தெளிக்கும் இன்பகரமான நினைவுகள்.
கல்லூரி வாழ்வுதனை கூண்டுப் பறவையாய் கழித்த மூன்றாண்டுகளில், காலை,மதியம்,மாலை, இரவு என்று நான்கு வேளைகளிலும் உணவருந்தச் செல்லும் அந்த உணவுக் கூடம். வழக்கம் போல் ஓர்நாள் மாலை, சிற்றுண்டி முடித்து தோழியருடன் அரட்டை அடித்தபடியே தற்செயலாய் அமர்ந்து விட்டாள் அன்புத் தாரகையின் அருகில். தோழியர் குழாமே கலகலப்பாய் அரட்டையில் இலயித்திருக்க, அங்கு வசந்தம் புன்னகையுடன் நிழலாடியது.
ஏனோ, திடிரென்று வசந்தம் தகிக்கும் கோடையாக மாறி அனல் பார்வை வீச, ஒன்றும் விளங்காதவளாய் அவள், வசந்ததினை ஏனென்று வினவ,வசந்தமோ, அன்புத் தாரகை தன்னுடன் மட்டுமே நட்புப் பாராட்ட வேண்டுமென்றும், தனக்கு மட்டுமே தாரகையின் நட்பு சொந்தமென உரிமை கொண்டாட, இவளோ அதையெல்லாம் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு, "எனக்கு இவள் தான் தோழியே ! " என்று கிண்டலடித்து தாரகையை நெருங்கி அமர, வசந்தத்தின் நெஞ்சில் ஏனோ பூகம்பம்.
அடுத்தடுத்து வந்த நாட்களில், வசந்தம் தண்மையாய் புன்னகை புரிய, அங்கு துவங்கியதோர் இனிமையான நட்புப் பயணம்.எத்துனையோ ஆத்திரங்கள் - அழுகைகள், புன்னகைகள் - புன்முறுவல்கள், சண்டைகள் - சமாதானங்கள். அத்தனையிலும் அவர்களது நட்பு மென்மேலும் பலம் பெற்றது.
அந்த விடுதியின் வாசலில், சிலையென வீற்றிருந்த தாத்தாவும் நிச்சயம் மனதினுள் முறுவல் பூத்திருப்பார், இவர்களது அன்பு - ஆனந்தம், சண்டை - சமாதானம், ஆதரவு - அரவணைப்பு, சிரிப்பு - கோபம் இவையனைத்தையும் கண்டு !!!

ஏனோ, திடிரென்று வசந்தம் தகிக்கும் கோடையாக மாறி அனல் பார்வை வீச, ஒன்றும் விளங்காதவளாய் அவள், வசந்ததினை ஏனென்று வினவ,வசந்தமோ, அன்புத் தாரகை தன்னுடன் மட்டுமே நட்புப் பாராட்ட வேண்டுமென்றும், தனக்கு மட்டுமே தாரகையின் நட்பு சொந்தமென உரிமை கொண்டாட, இவளோ அதையெல்லாம் விளையாட்டாய் எடுத்துக் கொண்டு, "எனக்கு இவள் தான் தோழியே ! " என்று கிண்டலடித்து தாரகையை நெருங்கி அமர, வசந்தத்தின் நெஞ்சில் ஏனோ பூகம்பம்.
அடுத்தடுத்து வந்த நாட்களில், வசந்தம் தண்மையாய் புன்னகை புரிய, அங்கு துவங்கியதோர் இனிமையான நட்புப் பயணம்.எத்துனையோ ஆத்திரங்கள் - அழுகைகள், புன்னகைகள் - புன்முறுவல்கள், சண்டைகள் - சமாதானங்கள். அத்தனையிலும் அவர்களது நட்பு மென்மேலும் பலம் பெற்றது.
அந்த விடுதியின் வாசலில், சிலையென வீற்றிருந்த தாத்தாவும் நிச்சயம் மனதினுள் முறுவல் பூத்திருப்பார், இவர்களது அன்பு - ஆனந்தம், சண்டை - சமாதானம், ஆதரவு - அரவணைப்பு, சிரிப்பு - கோபம் இவையனைத்தையும் கண்டு !!!
Sunday, August 18, 2013
கண் திறந்தது !!!
உறையூர் கிராமத்தில் சொக்கன், விறகு வெட்டி
தன் அன்றாட ஜீவனத்தை நடத்திக் கொண்டு வந்தார். தினமும்
காலை, அருகிலிருக்கும் காட்டுக்குச் சென்று விறகுகளை வெட்டி வந்து, தன் குடிசைக்கு
வெளியில் விறகு கட்டைகளை
சிறுசிறு கட்டுகளாகக் கட்டி அடுக்கி வைத்திருப்பார். சில சமயங்களில், லாரி அல்லது டெம்போ போன்ற வாகனங்களில்
ஆட்கள் வந்து மரங்களை ஏற்றிச் செல்வர். இல்லையெனில், சொக்கன் அவற்றை வண்டியில் கட்டி
சுமை ஏற்றிக்கொண்டு சென்று மரமறுக்கும் தொழிற்சாலையில் போட்டு வருவார். சில சமயங்களில்,
சில்லறை விலைக்கும் மக்கள் விறகு வாங்கிச்
செல்வர்.
சொக்கனுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவனது பெயர் முனியன். மிகவும்
புத்திசாலி. சூட்டிகையானவனும் கூட. எதையும் கூர்ந்து
கவனித்து கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன்.எந்த
விஷயமானாலும் ஏன் எதற்கு என்று
கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விடுவான்.படிப்பிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தான்
.தான் கற்றதை அன்றாட வாழ்வில்
செயல்படுத்துபவன்.
ஓர் நாள் மாலை, சொக்கன் வெட்டிய மரச்சுமையை வண்டியிலேற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
அவர் வழக்கமாக மரங்களை இறக்கி வைக்குமிடத்தில் இரண்டு
அரையாள் உயர வேம்பு கன்றுகள் புதிதாய் நடப்பட்டு இருந்தன. யாரிங்கு நட்டு வைத்திருப்பார்கள்
என்று எண்ணியவாறு,
“ முனியா ! முனியா ! இங்கன வா ஐயா ! “ என்று
தன் மகனை அழைத்தார்.
“ என்ன அப்பாரு ? கூப்பிட்டீகளா ? “ என்றவாறு
வந்தான் சொக்கனின் மகன் முனியன்.
“ யாரய்யா இங்ஙன வேப்பஞ் செடிய நட்டு வெச்சது
?” என்ற சொக்கனது கேள்விக்கு
“நாந்தான் அப்பாரு வெச்சேன்” என்றான் முனியன்.
“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தினார் சொக்கன்.
சிறிது நேர அமைதிக்குப்
பின், “நமக்கு மரக் கட்டைகள்,
விறகு அடுக்கி வைக்க இருக்கறதே
இந்த கொஞ்ச இடம் தான்,
நீ இங்கன கொண்டு வந்து
மரக் கண்ணை நட்டு வெச்சுட்டியே
ஐயா” என்றார் சொக்கன்.
“எங்க பள்ளிக்கூடத்துல இன்னிக்கு வாத்தியாரு
நமக்கெல்லாம் மூச்சுக் காத்து தர்றது இந்த மரங்களும் செடிகொடிகளுந்தேன்னு சொன்னாக.
நம்ம வீட்ல தொழிலே மரம் வெட்டுறதுதேன். இப்போ நம்ம பொழப்புக்காக மரத்த வெட்டி சம்பாதிச்சு
சாப்பிடறோம். இப்புடியே மரத்த வெட்டிட்டே இருந்தா, நாளைப்பின்ன நாம உசுரோட இருக்க தேவையான
மூச்சுக் காத்துக்கு எங்ஙன போய் மரத்த தேடுறது ? அதேன், இங்ஙன ரெண்டு வேம்பு கண்ணுகளை
நட்டு வெச்சிருக்கேன். இதுக வளந்து நின்னா, நாளைக்கு நமக்கு உபயோகமா இருக்குமில்ல
? நாம மரக் கட்டைகளை அடுக்கி வைக்க வேற
இடம் பாத்துக்கலாம் அப்பாரு“ என்ற முனியனது பேச்சைக் கேட்டு
வாயடைத்துப் போய் நின்றார் சொக்கன். அவரது கண்களில் நீர் கரைபுரண்டோடியது. அந்த நொடியே, சொக்கனது
மனம், “ இனி மரங்களை வெட்டுவதில்லை! “ என சபதம் கொண்டது.
தான் இத்தனை காலம்,
மரங்களை வெட்டி மனித சமூகத்திற்கே
பெரும் கேடுதனை விளைவித்து வந்திருந்ததை
உணர்ந்தார்.
தான் இத்தனை நாள் செய்த
தவறுக்கு பிராயச்சித்தமாக, மாதா மாதம் ஒரு
மரக் கன்றேனும் நட வேண்டுமென மனதில்
உறுதி மேற்கொண்டார்.
அதனை நிறைவேற்றும் விதமாக, ஒரு மரக்
கன்றினை நட்டு நீரூற்றினார். அந்த மரக் கன்று
காற்றில் அசைந்தாடி, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக
அவர்
மேல் உரசி நின்றது.
அவரது மனதில் புத்துணர்வை உணர்ந்தார்.
Friday, August 16, 2013
தெளிவு பிறந்தது !!!
பாலன் ஒரு சிறந்த உழைப்பாளி. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பம்
என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிடைக்கும் இலவசங்களை
பயன்படுத்தியும் தினம் கூலி வேலைக்குப்போயும் சந்தோஷமாகவே வாழும் ஒரு சாதாரண இந்திய பிரஜை.
அவன் மனைவியும் அன்பானவள். நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பம் இப்போது ஏனோ சலிப்பதாகத்தோன்றியது பாலனுக்கு.
வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,
மனைவிக்குத் தேவையானதை எல்லாமே தான் வாங்கித்தர வேண்டும் என்ற இரு கனவுகள்
மட்டுமே அவனுக்கு இருந்தது. அது அப்படியே நிறைவேறியும் வந்தது.
கடந்த வருடம் இந்திராகாந்தி வேலைவாய்ப்புத்திட்டம் வந்த பின் அவன்
மனைவியும் வேலைக்குப்போனாள். முன்பெல்லாம் அவளுக்குத்தேவையான பணம்
கொடுக்கும் போதும் குடும்பத்திற்குத்தேவையான பொருட்களை வாங்கி வரும் போதும்
அவனுக்கு ஒரு பெருமிதம் உண்டாகும். குடும்பத்தை நன்றாக கவனிக்கிறான் என்ற
மகிழ்ச்சி மனநிறைவு ஏற்படும்.
ஆனால் இப்போதெல்லாம் அவன் மனைவி அவனிடம் தன் தேவையை எதுவும்
சொல்வதில்லை. அவளே வேலைமுடிந்து வரும் போது தேவையானவற்றை வாங்கி
வந்துவிடுகிறாள்.
தன் முக்கியத்துவம் குடும்பத்தில் குறைவதாக அவனுக்கு மனதில் தோன்றியது.
வேலை செய்யும் போதே எதற்கு இப்படி பாடுபடுகிறோம் என்ற சலிப்பு வர ஆரம்பித்தது.
அன்று மாலை வழக்கத்திற்கு மாறாக, சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான் பாலன். வீட்டில் அவனது மனைவி பவானி இல்லை.வெறிச்சென்று இருந்த வீட்டைப் பார்த்த அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அடுப்படியில் இருந்த பாத்திரத்தில் இருந்த பழைய சாதத்தின் தண்ணீரை ஒரு தம்ளரில் ஊற்றி சிறிது உப்பு போட்டு குடித்துவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான். அசதியில் மெல்ல அப்படியே கண்ணயர்ந்தவனை, ராமய்யாவின் குரல் எழுப்பியது.
" என்ன பாலா, வாசல்ல படுத்து உறங்கீட்டு இருக்க ? " என்றார் ராமையா.
" பவானி புள்ள வேலைக்கு போயிருக்கு. இன்னும் வரல. அது வந்துரும்னு திண்ணைல காத்து இருந்தேன். அப்படியே அசதில கண்ணசந்துட்டேன் போல.வாங்க உக்காருங்க மாமா. செத்த நேரம் பேசிக்கிட்டு இருப்போம்." என்றான்.
" உன் வேலை எல்லாம் எப்புடி போயிட்டு இருக்கு ? பவானி புள்ளையும் புதுசா வேலைக்கு போகுது போல? " என்றார்.
" என் வேலைக்கு என்ன ? அதே, மாடு மாதிரி நாளெல்லாம் உழைப்பு தான். சம்பளம் தான் உசந்த பாடு இல்ல. ஏதாவது அவசரத்துக்கு கடன உடன வாங்கினாலும், அத தீக்கறதுக்கே சம்பளம் சரியாப் போயிடுது.என்ன செய்ய ? நான் தினம் விடியக்காலைல நம்ம ஊர் கூட்டுறவு பால் பண்ணையில பால் எடுத்து ஊத்தலாம்னு நினைச்சு வெச்சிருக்கேன். பவானி புள்ளைய ராணியாட்டம் வெச்சுக்கனும்னு நினைக்கிறேன்.அந்தப் புள்ள வேலைக்கு போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா" என்றான் பாலன்.
அப்போதுதான் வேலையிலிருந்து வந்திருந்த பவானி, " வாங்க சித்தப்பா, எப்ப வந்தீக? ஒரு நிமிஷம் இருங்க. காபித்தண்ணி கலந்துட்டு வந்துடறேன்." என்றவாறு விறுவிறுவென்று வீட்டினுள் சென்றாள்.
" அந்தப் பிள்ளை உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு பாக்குது ஐயா. அதுவும் பத்து வரைக்கும் படிச்சிருக்கு. தன்னோட படிப்பு உனக்கு உபயோகமா இருக்கணும்னு நினைக்குது. பக்கத்துல இருக்குற சின்னப் பிள்ளைங்களுக்கு சாயந்திரம் வீட்டுப்பாடம் செய்ய, தெரியாதத சொல்லிக் குடுக்கன்னு, டியூசன் எடுத்துச்சு. அதுல நிலையா ஒரு வருமானம் இல்ல. நீயும் குடும்பத்த காப்பாத்த பால் பண்ணை, வயக்கூலி வேலைன்னு மாடா உழைக்கிற. உன் கஷ்டத்துல பங்கெடுக்க நினைச்சு அந்தப் பிள்ளை வேலைக்கி போகுது. தப்பா எடுத்துக்காத ஐயா. சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா நாளைப்பின்ன உன்னை மதிக்காம போயிடுமோ, குடும்பத்துல உனக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுமோன்னு எல்லாம் யோசிக்காத. அதுவும் சேர்ந்து உழைச்சு காசு சேர்த்தா, நாளைப்பின்ன நல்லா வாழலாம்னு தான அது நினைக்கிது. அது தப்பில்லையே ஐயா. தேவையில்லாத சஞ்சலத்த மனசுல வளத்துக்காதப்பா. நிம்மதியா இரு. நல்லதே நடக்கும்." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் பவானி காபியோடு வந்தாள். காபியை வாங்கி குடித்து முடித்தவர்,
" சரி, நானும் கிளம்பறேன் பாலா. நேரமாச்சு. வரேனம்மா பவானி" என்றவாறு கிளம்பினார்.
பாலனுக்கு மனதிலிருந்த சஞ்சலம் தீர்ந்து தெளிவு பிறந்தது. வீட்டினுள் சென்றான். அன்பும் புரிதலும் நிறைந்த அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
" அந்தப் பிள்ளை உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு பாக்குது ஐயா. அதுவும் பத்து வரைக்கும் படிச்சிருக்கு. தன்னோட படிப்பு உனக்கு உபயோகமா இருக்கணும்னு நினைக்குது. பக்கத்துல இருக்குற சின்னப் பிள்ளைங்களுக்கு சாயந்திரம் வீட்டுப்பாடம் செய்ய, தெரியாதத சொல்லிக் குடுக்கன்னு, டியூசன் எடுத்துச்சு. அதுல நிலையா ஒரு வருமானம் இல்ல. நீயும் குடும்பத்த காப்பாத்த பால் பண்ணை, வயக்கூலி வேலைன்னு மாடா உழைக்கிற. உன் கஷ்டத்துல பங்கெடுக்க நினைச்சு அந்தப் பிள்ளை வேலைக்கி போகுது. தப்பா எடுத்துக்காத ஐயா. சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா நாளைப்பின்ன உன்னை மதிக்காம போயிடுமோ, குடும்பத்துல உனக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுமோன்னு எல்லாம் யோசிக்காத. அதுவும் சேர்ந்து உழைச்சு காசு சேர்த்தா, நாளைப்பின்ன நல்லா வாழலாம்னு தான அது நினைக்கிது. அது தப்பில்லையே ஐயா. தேவையில்லாத சஞ்சலத்த மனசுல வளத்துக்காதப்பா. நிம்மதியா இரு. நல்லதே நடக்கும்." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில் பவானி காபியோடு வந்தாள். காபியை வாங்கி குடித்து முடித்தவர்,
" சரி, நானும் கிளம்பறேன் பாலா. நேரமாச்சு. வரேனம்மா பவானி" என்றவாறு கிளம்பினார்.
பாலனுக்கு மனதிலிருந்த சஞ்சலம் தீர்ந்து தெளிவு பிறந்தது. வீட்டினுள் சென்றான். அன்பும் புரிதலும் நிறைந்த அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
Thursday, August 15, 2013
சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், நமது அடையாளம், நமது இனிய மொழிகளும், பண்பாடும் அன்றோ ? நம்மை ஒன்றிணைப்பது இந்தியன் என்ற மேன்மையான உணர்வே !
‘‘முப்பது கோடி முகமுடையாள்–உயிர்
மொய்ம்புறமொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்’’
என்ற மகாகவி பாரதியாரின் கூற்றிற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமை கண்ட தேசம் நமது தேசம்.
"சுதந்திரம் நமது பிறப்புரிமை ! "
எத்துனையோ இன்னலுக்குப் பின் அடைந்தோம், எத்துணையோ உயிர்களை தியாகம் செய்து அதற்கு ஈடாக பெற்றோம் தேசத்தின் சுதந்திரமதை. பலர் இன்னுயிர் ஈந்து நமக்கு பெற்றுத் தந்த சுதந்திரமதை காப்பது நம் கடமையென்பதை மனதில் இருத்தி, காத்திடுவோம் தேசத்தினை. தேசத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நம்மாலான பணிகளை மேற்கொள்வோம்.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
கொடிப் பாடல்
பல்லவி
- தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
- தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
- ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
- உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
- பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
- பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
- பட்டுத் துகிலென லாமோ? - அதில்
- பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
- மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
- மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)
- இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
- எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
- மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
- மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)
- கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
- காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
- நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
- நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)
- அணியணி யாயவர் நிற்கும் - இந்த
- ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
- பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
- பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)
- செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
- தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
- சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
- சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)
- கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
- காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
- பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
- பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)
- பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
- போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
- மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
- மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)
- பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
- பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
- துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
- தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)
- சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
- சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
- தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
- தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
உலகிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் !!!
Wednesday, August 7, 2013
Aluminum Foil Painting
Labels:
Arts and Crafts,
Foil Painting,
Painting
Subscribe to:
Posts (Atom)




