பூமியின் சராசரி வெப்பநிலை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே வருகிறது.இதனால், பூமியின் காலநிலைகளில் நிரந்தரமானதொரு மாற்றம் ஏற்பட்டுவிடுமென்று நம்பப்படுகிறது. இதுவே உலக வெப்பமயமாதல் என்றழைக்கப் படுகிறது.புவி வெப்பமடைதல் தொடர்பான காலநிலை மாற்றங்கள் மீதான
அறிவியல் கருத்தொருமிப்பு யாதெனின்,
பூமியின் சராசரி
வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில் 0.4 °
சி முதல் 0.8 °
சி வரை
அதிகரித்துள்ளது என்பதாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளில், படிம எரிபொருட்களை எரித்தல்,
காடுகளை அழித்து வெற்று நிலங்களாக்குதல்,விவசாயம்,நிலம் தீர்வு போன்ற
செயல்களால் கரியமில வாயு (Co2
) , வெப்ப வாயுக்கள், பைங்குடில் வாயுக்கள் எனப்படும் க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் (Green
House Gases) இவற்றின் அளவு அதிகரித்தபடியால், இவையே
உலக வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணங்களாக அமைந்து விட்டன.வருகின்ற
2100 ஆம் ஆண்டின் வாக்கில், சராசரி
உலக வெப்பநிலை 1.4 °C முதல் 5.8 °C வரை அதிகரிக்கக் கூடும்
என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.உலக வெப்பமயமாதலால், துருவ
பனி முகடுகள் உருகி,கடல் நீர்
மட்டம் உயருதல்,பயங்கர புயல்கள்
,பிற தீவிர வானிலை நிகழ்வுகள்
ஏற்படக்கூடும் .
http://www.livescience.com/topics/global-warming/page-7.html
No comments:
Post a Comment