blank'/> muhilneel

Thursday, February 23, 2012

புதிர்

1) காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை வாழைக்காய்?


முதல் வரி: 1 / 4 + 1 / 8 = 3 / 8 
இரண்டாம் வரி: 4 + 1 / 8 = 33 / 8 
மூன்றாம் வரி: 3 / 8  காசுக்கு 33 / 8  வாழைக்காய் எனில் ஒரு காசுக்கு 11 வாழைக்காய்.

2 ) எண்ணஞ்சு கால் சிரசினை
     இருபதொருமா சிரசன் 
     கொல்லுகிறேன் நானென்றான் - ஏன்?
     ஏனென்றால் 
     ச எழுத்து நாலதையும்
     த எழுத்து ஒன்பததையும் 
     தூக்கிச்  சென்றதால்.


     எண்ணஞ்சு கால்: 8 x 5 x 1 /4 =10 தலை இராவணன்
இருபத்தொரு மா : 20 x 1 / 20 = 1 தலை இராமன் (ஒரு மா=1 / 20 )
ச எழுத்து நாலு  சீ  (ச,சா,சி, சீ )
த எழுத்து ஒன்பது தை (த,தா,தி,தீ,து,தூ,தெ,தே,தை)

ஒரு தென்னந்தோப்புல ஏழு வேலிகள் இருந்துச்சு. ஒவ்வொரு வேலிக்கும் ஒருத்தன்னு மொத்தம் ஏழு காவல்காரங்க. அப்ப, அந்தத் தென்னந்தோப்புல ஒரு திருடன் திருடப் போறான். இந்த காவக்காரங்களும் திருடங்க. அவங்க எல்லாருமே ஒன்னு சொன்னா மாதிரி திருடங்கட்ட சொல்லுறாங்க, "நீ எடுத்துட்டு வர்ற தேங்காயில பாதி எனக்குத் தரணும்"னு. அவனும் ஒத்துக்கறான். அப்படி அவன் ஒவ்வொருத்தருக்கும் இருக்குறதுல பாதியா ஒவ்வொரு வேலியிலயும் குடுத்துட்டு வெளில வரும்போது, கையில ஒரே ஒரு தேங்காய் இருக்குது. அப்ப, அவன் மொத்தமாப் பறிச்ச தேங்காய்க எவ்வளவு?





http://varalaaru.com/Default.asp?articleid=768 
     

Sunday, February 19, 2012

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்: இதனை சர்க்கரை நோய் என்பர். நமது  உடலில் சீரணத்திற்கு பங்கு வகிக்கும் முக்கிய உறுப்புகளில் கணையமும் ஒன்று. 6 அங்குல நீளத்திற்கு இரைப்பைக்கு முன்பு வயிற்றுக்கு குறுக்காக அமைந்திருக்கும் உறுப்பே கணையம், கணையத்துள் லங்கர் ஹாரன்ஸ் திட்டுகள் அமைந்துள்ளது, அதிலுள்ள பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றது, இன்சுலின் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது, இன்சுலின் அளவு குறையும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுவே நோய் நிலையாகும். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையான அளவைவிட அதிகரிப்பதையே சர்க்கரை நோய் அல்லது மதுமேகம் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம். இந்நோய் உலகத்தில் உள்ள எல்லா நாட்டு மக்களுக்கும் உள்ளது. எனினும் இந்தியா போன்ற சில நாடுகளில் மிக அதிக அளவு பாதிப்பு உள்ளது.இந்தியாவில் ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் அதிகளவு பாதிப்பு உள்ளது. வட மாநில மக்கள் இந்த அளவுக்கு பாதிக்கபடுவதில்லை. 35 வயதுக்கு மேல் 8 முதல் 15 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கின்றது. பொதுவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உணவுக்கு முன்பு 80 முதல் 120/1 லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருப்பது நலம். உணவு உண்ட பின்பு ஒன்றரை மணி நேரத்தில் 160 வரை வந்து பின்பு இரண்டரை மணி நேரத்தில் இயல்பான நிலையை எட்டவில்லை எனில், சர்க்கரை நோய் தாக்கம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் சர்க்கரை நோயாளி தானா? என்பதை உறுதி செய்ய முடியும். உடலில் அத்தனை பிரதான உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும் ஒரே நோய் நீரிழிவு நோய்.
சர்க்கரை நோய் வருவதற்கு பற்பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமானதாக கீழ்கண்ட காரணங்கள் பிரதானபட்டவையாக உள்ளன.
1. பரம்பரையாக இப்பாதிப்பு வரலாம்.
2. தாய், தந்தை இருவரும் பாதிக்கப்பட்டு இருப்பின் குழந்தைக்கு வரமிக அதிக வாய்ப்புகள் உண்டு.
3. தாய், தந்தை இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு இருப்பின் 50 சதவீதம் வரவாய்ப்பு உள்ளது.
4. அதிகளவு இனிப்பு சுவை உணவுகளை அன்றாட வாழ்வில் உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
5. அதிகம் மசாலா சேரும் உணவுகளை விரும்பி உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
6. அதிக எண்ணெய் உணவுவகைகளை உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
7. துரித உணவுகளை விரும்பி உண்பவருக்கு வரவாய்ப்பு உள்ளது.
8. மன அழுத்தம் காரணமாக வரலாம்.
9. மன நோயிற்கு மருத்துவம் செய்யும் போது அதன் பின்விளைவாக வரலாம்.
10. சில மருந்துகளை பயன்படுத்தும் போது அதன் பக்கவிளைவாக வரலாம்.
11. குழந்தை பேறு காலத்தில் வரலாம். குழந்தை பேறு பெற்றபின் சரியாகிவிடலாம்.
12. குழந்தைகளுக்கும் வரலாம்.
13. எவ்வித காரணமும் இன்றி வரலாம்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
1. சிறுநீர் அடிக்கடி போதல்
2. அதிக தாகம்
3. அதிக பசி
4. அதிக சோர்வு
5. கண்பார்வை குறைதல்
6. உடல் இளைத்தல்
7. உடல் அரிப்பு
8. கை, கால், விரல்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு
9. இல்லற வாழ்வில் இன்பம் குறைதல்
10. கை, கால், மூட்டிகளில் வலி
11. புண் ஏற்பட்டால் ஆறாத்தன்மை
12. பிறப்புறுப்பு மற்றும் மலத்துவாரத்தில் அரிப்பு
13. பிறப்புறுப்பு மற்றும் மலத்துவாரத்திற்கு அருகில் வீக்கம்
14. தோள்மூட்டு வலி
15. கால், பாதங்களில் எரிச்சல்
16. கைகளில் எரிச்சல்
17. உதடு, நாக்கு உலர்ந்து போதல்
18. உடலில் வறட்சி
19. மன உளைச்சல்
20. படபடப்பு தன்மை உடலில் எப்போதும் காணப்படுதல்
சர்க்கரை நோய்க்கான மருந்துவம்:
சித்தமருத்துவம் மதுமேக நோய்க்கு பல வகையான மருந்துகளை கூறுகின்றது, எனினும் அதில் எளிய மருந்துகளை கீழே தரப்பட்டுள்ளது. மதுமேகத்தை பொறுத்தவரையில் சிகிச்சை வகையினை 3 வகையானதாக பிரிக்கலாம்.


  • உணவில் கட்டுப்பாடு
  • உடற்பயிற்சி
  • நீரிழிவு நோய்க்கான மருந்துகள்
அ) உணவு முறைகள்:
1. இனிப்பு சுவையுடைய உணவு பொருட்களை அறவே தவிர்த்தல்
2. தேன், கருப்புக்கட்டி போன்ற இயற்கை இனிப்பு உணவுகளையும் தவிர்த்தல்
3. அதிக மசாலா சேரும் உணவுபொருட்களை தவிர்த்தல் அல்லது அளவு குறைவாக உண்ணுதல்
4. எண்ணெய் சேரும் உணவுகளை குறைத்து உண்ணுதல்
5. நெய், வெண்ணெய், டால்டா சேரும் பதார்த்தங்களை தவிர்த்தல்
6. குளிர்பானங்களை தவிர்த்தல். பெப்ஸி, கோகோ கோலா, மிராண்டா, 7அப் போன்ற அனைத்துவகை குளிர்பானங்களையும் தவிர்த்தல்.
7. காபி,டீ போன்றவற்றில் சர்க்கரை நீக்கி அருந்தவும்.
8. பால் பொருட்களை முறையாக பயன்படுத்தவும்.
9. கிழங்குகளை உணவில் தவிர்க்கவும். உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சேம்பு கிழங்கு,கருணை கிழங்கு போன்றவற்றை தவிர்க்கவும்.
10. காரட்,பீட்ரூட் போன்றவற்றை தவிர்க்கவும்.
11. பழங்களை அதிகம் தவிர்க்கவும்.மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை பழம், ஆரஞ்சு பழம்,             அன்னாசி பழம் இவற்றை தவிர்க்கவும்.
12. கொய்யா,ஆப்பிள்,பப்பாளி இவைகளை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
13. ஐஸ் கிரீம்,சாக்லேட்,ஸ்வீட்ஸ்,பால் ஸ்வீட்ஸ் போன்றவைகளை அறவே தவிர்க்கவும்.
14. எண்ணெய் அதிகம் சேரும் கொழுப்பு பொருட்களை குறைவாக உணவில் சேர்க்கவும்.
15. அன்றாட உணவில் கீரை அதிகம் சேர்க்கவும்.குறிப்பாக சிறு கீரை,அரைக்கீரை,முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை இவைகளை அதிகம் சேர்க்கவும்.
16. கேழ்வரகு, சோளம், சாமை அரிசி உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
17. புரத சத்துப் பொருட்களான கொண்டைக் கடலை, சிறு பயறு,மொச்சை, தட்டாம் பயறு,கொள்ளு இவைகளை உணவில் அதிகம் சேர்க்கவும். 18.கத்தரிக்காய்,புடலங்காய்,முருங்கைக்காய்,அவரைக்காய்,வெள்ளரிக்காய்,சுரைக்காய்,தடியங்காய்,            வெண்டைக்காய், முட்டைக்கோஸ்,பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
19. கோதுமை சேரும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் எளிதில் பசிக்காது.
20. உணவின் அளவை குறைத்து உணவு உண்ணும் வேளையை அதிகமாக மாற்றிக் கொள்ளவும். தினமும் மூன்று வேளை உண்ணுவதை நான்கு வேளையாக மாற்றி உணவு அளவை குறைத்துக் கொள்ளவும்.
ஆ) உடற்பயிற்சி:
மது மேகத்தை கட்டுப்பாட்டில் வைப்பது நடைபயிற்சி ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிட நடைபயிற்சி அவசியம். நடைபயிற்சி செய்வதால் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாறி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.மேலும் யோகாசனங்கள் இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க துணை செய்கிறது.
  1. சர்வாங்காசனம்
  2. ஹலாசனம்
  3. உட்டியாகு
  4. நெளலி
  5. பத்மாசனம்
போன்ற ஆசனங்கள் கணையத்தின் பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் அளவு அதிகரிக்க உதவுகின்றது. எனவே நடைபயிற்சி மற்றும் ஆசனங்கள் செய்வது மது மேக நோயின் பாதிப்பை குறைக்கும்.
இ) மருந்துகள்:
மது மேக நோயிற்கு பல்வேறு மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருந்தாலும் அவைகளில் எளிய                                          அதே சமயம் நிறைந்த குணம் தரும் மருந்துகள் இங்கு கொடுத்துள்ளோம்.
1. ஆவாரம் கொழுந்து, கல்மதம், கொன்றை வேர் இவைகள் வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து மோரில் அரைத்து காலை,மாலை இருவேளை 20 நாட்கள் கொடுக்க மது மேகம் குறையும்.
2. ஆவாரை கொழுந்து,ஆவாரம் பூ,ஆவாரை இலை,கீழாநெல்லி,நெல்லி வற்றல் ஆகிய அனைத்தையும் 5 கிராம் அளவு எடுத்து மோர் விட்டு நன்கு அரைத்து பின்பு உலர்த்தி அதை அரை கிராம் வீதம் காலை,மாலை மோரில் கலந்து கொடுத்தால் நீரிழிவு நோய் குறையும்.
3. கடலழிஞ்சில், பூவரசு, மஞ்சணத்தி,ஆவாரை இவைகளின் பட்டைகளை ஓரளவு எடுத்து இடித்து அதன் பொடிகளை அரை கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை இருவேளை உண்ண நீரிழிவு குறையும்.
4. வேப்பம் பட்டை,பேயப்புடல்சீந்தில் இந்த மூன்றையும் ஒரே எடை எடுத்து இடித்துப் பொடி செய்து ஒரு கிராம் வீதம் வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
5. ஆவாரம் பட்டை,வேப்பம் பட்டை,மருதம் பட்டை இவைகளை நன்கு இடித்து அதன் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
6. இலவங்கம், பங்கம்பாளை, மரமஞ்சள் இம்மூன்றினையும் ஒரே எடை எடுத்து பொடித்து ஒரு கிராம் அளவு காலை,மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மது மேகம் குறையும்.
7. மருதம் பட்டை,நாவல் கொட்டை சமஅளவு எடுத்து பொடித்து ஒரு கிராம் வீதம் காலை,மாலை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
8. ஆவாரைத் தூள், மஞ்சள்,பொன்முசுட்டை வேர்,இவற்றை ஒரே அளவு சேர்த்து இடித்து ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொள்ள மது மேகம் குறையும்.
9. அதிவிடயம், அரச வித்து, ஆலம் வித்து மூன்றையும் எடுத்து பொடித்து ஒரு கிராம் அளவு வெந்நீரில் மூன்று வேளை உட்கொள்ள மது மேகம் குறையும்.
10. வெள்ளி லோத்திரம், அகில்கட்டை,சந்தனம் இவைகள் மூன்றையும் ஒரே அளவாய் சேர்த்து பொடித்து அரை கிராம் வீதம் காலை,மாலை இரு வேளை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
11. விலாமிச்சு வேர்,வெள்ளி லோத்திரம்அத்திப்பட்டை மூன்றையும் ஒரே அளவாய் சேர்த்து பொடித்து அரை கிராம் வீதம் காலை,மாலை இரு வேளை வெந்நீரில் உண்ண மது மேகம் குறையும்.
12. மர மஞ்சள், கருவேலம்பிசின் வகைக்கு 15 கிராம் எடுத்து அதனுடன் மஞ்சள் 7 கிராம்,ஆவாரைப் பூ 7 கிராம் சேர்த்து பொடி செய்து அதனை ஆவியில் வேகவைத்து அப்பொடியை உலர்த்தி காய வைத்து அதனில் ஒரு கிராம் காலை,மாலை,இருவேளை வெந்நீரில் அருந்த மது மேகம் குறையும்.
13. சாதிக்காய்,சாதிபத்திரி,கோரோசனை,காசிக்கட்டி 5 கிராம் எடுத்து பொடித்து ஒரு கிராம் இருவேளையாக காலை,மாலை வெந்நீரில் கொடுக்க மது மேகம் குறையும்.
14. கிராம்பு,சாதிக்காய்,சாதிபத்திரி,அபின் இவைகளை ஒரே எடையாய் கொண்டு கால் கிராம் இரவில் பாலில் கொடுக்க மது மேகம் குறையும்.
15. கருஞ்சீரகம்,சீரகம்,ஓமம்,குரோசாணி ஓமம்,திப்பிலி,கிராம்பு ஒரே அளவாய் எடுத்து பொடித்து கால் கிராம் வீதம் காலை,இரவு ஆகிய இருவேளை வெந்நீரில் கொடுக்க மது மேகம் குறையும்.
16. கடுக்காய்,நெல்லிக்காய்,வேலம்பிசின் இவைகளை சேர்த்து ஒரே எடையாய் எடுத்து பொடித்து ஒரு கிராம் வீதம் காலை,மாலை,வெந்நீரில் சாப்பிட மது மேகம் குறையும்.


 Source: http://blog.grannytherapy.com/2011/08/blog-post.html

Wednesday, February 8, 2012

நடுவெழுத்து அலங்காரம் - 3


 

விடை:கடிகாரம்,கடல் அலை 

Source: eegarai.com

நடுவெழுத்து அலங்காரம் - 2

1 . அசதி 
2 . பாதாம் 
3 . மேசியா
4 .தவம் 
5 . அம்மி     

விடை : சதாசிவம்

source: eegarai.com

Wednesday, January 25, 2012

Tamil Tongue Twisters-2/சொற்பயிற்சி, நா பயிற்சி, நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள் - 2

  • ஆனை அலறலோடு அலற அலறியோட
  • சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி
  • ஷீலாவுக்கு சீக்கிரம் சீலை தேவை
  • புட்டும் புதுப் புட்டு
    தட்டும் புதுத் தட்டு
    புட்டைக் கொட்டிட்டு
    தட்டைத் தா.
  • வீட்டுக்கிட்ட கோரை
    வீட்டுக்கு மேல கூரை
    கூரை மேல நாரை.
  • துள்ளும் கயலோ
    வெள்ளம் பாயும்
    உள்ளக் கவலை
    எள்ளிப் போகும்.
  • கருகும் சருகும் உருகும்
    துகிரும் தீயில் பட்டால்!
  • லாரி நிறைய இறாலு, அதுல நாலு இறாலு நாறுன இறாலு
    Source:http://nattrangaal.blogspot.com 


  • வில்வராயநல்லூரில்  வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.
  • வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.
  • கூவுற கோழி கொக்கர கோழி  கொக்கர கோழி கொழுகொழு கோழி        கொழுகொழு கோழி குத்தற கோழி குத்தற கோழி கொக்கர கோழி      கொக்கர கோழி  சிக்கற கோழி  சிக்கற கோழி  திங்கற கோழி          
  • சஞ்சல சலசல சலநீர் விழ விழ  விழுந்தால் வெளுக்கும் வெயில் பட்டா சிவக்கும்  வறுத்தா மணக்கும் வாயில் போட்டால் தித்திக்கும். - இலுப்பை பூ  
  • குரங்கின் வாலும்  வாழைப்பழத் தோலும்                                           நாயின் வாலும்     சின்னப் பையன் வேலும் 
  • கோடு போட்ட வீடு      கோலம்  போட்ட வீடு    வேப்ப மர சந்து             வேணுகோபால் வீடு 
  • பரதநாட்டியம் பரந்த நாடு    பழைய நாட்டியம் பரதநாட்டியம்.
  • கும்பகோணம் குள்ளக் குமரேசன் , குதிரையை குச்சியால் குத்தினான்..குதிரை குளத்தில் குதித்தது..
  • தக்காளி தக்காளி அக்கா வாங்கின தக்காளி;  தக்காளி தக்காளி அழுகிப் போன தக்காளி ; தக்காளி தக்காளி அக்கா பாக்காத தக்காளி;   தக்காளி தக்காளி அருமையான தக்காளி..   
Source: Makkal TV show - கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை      

  இன்னும் சில நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்

திரு. ரீகன் ஜோன்ஸ் அவர்களது  தமிழ் பிரியன் வலைதளத்தில் பல புதிய நா நெகிழ் வாக்கியங்களை உருவாக்கியுள்ளார். அப்பக்கத்திற்கான இணைப்பு இதோ:

நா நெகிழ் வாக்கியங்கள் (Tongue Twisters) தமிழ் பிரியன் 

திரு. ரீகன் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றிகள்.

Wednesday, January 11, 2012

கதை - 7

இலக்கம்: 8


பெங்களூரின் குளிரில் நன்றாக தூங்கி கொண்டுயிருந்தவனின் தூக்கத்தை கெடுத்தது அலைபேசி , வெறுப்புடன் அலைபேசியை எடுத்தான்.தொடர்புகொண்டத்து ஊரிலிருந்து அவரின் அத்தை பையன்தான். பேசி முடித்து தொடர்பை துண்டித்து வெறுப்புடன் படுக்கைவிட்டு எழுத்தான், யாருங்க போன்ல ,என்ன விசயம் என்று அவன் மனைவி கேட்டவுடன் அனைத்தையும் கொட்டிதீர்த்தான் ........

          "ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டாராம்.குறைந்தது பத்து நாட்களாவது  ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களாம். அத்தை வீட்டில், என் அத்தை பையன் சங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அத்தையால் அருகிருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லையாம்.இப்போது சங்கர் நம் இருவரில் யாரையேனும் அங்கு வந்து அம்மாவுடன் இருக்கும்படி கூறுகிறான்" என்று கூறினான் பவன்.
               "நாம எப்படி அங்க போய் இருக்கிறது? எனக்கு இப்போ ஆபீஸ்ல ஆடிட்டிங்.உங்களுக்கோ, போர்டு மீட்டிங் இருக்கு. என்ன பண்றது? இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..அவங்கள ஏதாவது முதியோர் இல்லத்துல சேத்துடலாம்னு. அவங்க தான், பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்க..அவங்க பாத்துப்பாங்க... அப்படின்னு சொல்லிட்டாங்க" என்றாள் அவனது மனைவி பிரியா.இவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக கட்டிலில் படுத்திருந்த அவர்களது ஏழு வயது மகன், பிரவின் கேட்டுக் கொண்டிருந்தான்.அமைதியாக படுத்திருந்த அவன், விழித்து விட்டதை அறிந்ததும்,"என்ன பிரவின், எழுந்திட்டியா??போய் பல் தேய்ச்சு குளி.... என்ன யோசிச்சிட்டு இருக்க??" என்றாள் பிரியா. "இல்லை மம்மி...நாளைக்கி...நானும் நல்லா படிச்சி, அமெரிக்கா எல்லாம் போகணும் அப்படின்னு சொன்னீங்க. அப்போ, நான் போயிட்டா, உங்களை யார் பாத்துப்பா?? உங்களுக்கும் நான், நீங்க சொன்ன முதியோர் இல்லம் எல்லாம் பாத்து தெரிஞ்சி வெச்சுக்கணும் இல்ல.அதை  தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான் பிரவீன்.
            பவனுக்கும், பிரியாவுக்கும் அவர்களை யாரோ மண்டையில் சம்மட்டியால் அடிப்பதாய் உணர்ந்தார்கள்.


Thursday, January 5, 2012

கதை - 6



இலக்கம்: 7


சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள். கீர்த்திக்கு சௌமியா மீதும், இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..
அடுத்த நாள் மாலை 6:00 மணி ....
பிரிவு உபசார விழா முடிந்து, நால்வரும் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தடிக்கு  வந்து சேர்ந்தனர்.சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன.ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீர்த்தி பேச ஆரம்பித்தான்." சௌமியா, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே??" என்றான். "சொல்லு கீர்த்தி" என்றாள் சௌமியா. உடனே கீர்த்தி, "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றான். உடனே இந்திரஜித், "நான் உன்னைக் காதலிக்கிறேன் லாவண்யா" என்றான். சௌமியா,லாவண்யா இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவ்விடத்தில் அமைதி நிலவியது. அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து   நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம். அதற்குள், நாமும் நம் கல்வி நிலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வோம்" என்றாள் லாவண்யா.அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தனர் கீர்த்தியும் இந்திரஜித்தும்.மனதில் தெளிவு பிறந்தவர்களாய் புதிய உற்சாகத்துடன் நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வாழ்வில் வசந்தங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.

http://www.eegarai.net/t75627p195-7#708255