Labels
- Arts and Crafts (353)
- Bioinformatics and Programming (15)
- General (39)
- Recipes (23)
- இணையவழி சேவைகள் (6)
- கடித இலக்கியம் (2)
- கட்டுரை (20)
- கதை (44)
- காமராஜர் (21)
- சிறுவர் கதைகள் (5)
- தமிழ் (105)
- திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா சிறுகதைகள் (13)
Monday, July 16, 2012
Saturday, June 9, 2012
கோடையிலும் வீட்டை ஜில்லென்று வைத்துக்கொள்ள !!!
அக்னி நட்சத்திரம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது.
வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு
மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில
ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.
http://tamil.boldsky.com/
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.
http://tamil.boldsky.com/
Labels:
General
Friday, May 25, 2012
கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
தகர வருக்கம் 37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.
நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.
பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.
மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.
வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.
Source:http://library.senthamil.org
Labels:
தமிழ்
ஆத்திசூடி
- ஆசிரியர்: ஔவையார்
- பாடல்கள்: 109
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
- ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய
தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே. உயிர் வருக்கம்
1.அறம் செய விரும்பு- நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
2. ஆறுவது சினம்- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல்- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல்- நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்- ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
உயிர்மெய் வருக்கம்
14.கண்டொன்று சொல்லேல்.- கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
15.ஙப் போல் வளை.- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
- 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
- ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய
- "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
- சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
- உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
- ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
- உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
- ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
- எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
- பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
- நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
- நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
- பாம்புகளை பிடித்து விளையாடாதே.
- 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
- கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
- இழிவான செயல்களை செய்யாதே
- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
- தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
- மிகுதியாக துங்காதே
ககர வருக்கம்
32.கடிவது மற- யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)
- பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
- உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
- இழிவான குணஞ் செயல்களை நீக்கு
- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
- பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
- கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்
- உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
- குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
- வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
- அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே
- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
- கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
- நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
- பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
- முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
தகர வருக்கம்
55. தக்கோ னெனத்திரி- பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
- யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
- நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
- பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
- முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
- ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
- கடவுளை பழிக்காதே.
- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
- மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
- ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி- நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
- உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
- வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே
- நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
- பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
- பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
- மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்- பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
- பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
- குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
- பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
- உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்
- விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்
- அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
- அறியாமையை போக்கு
- அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
- பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
- யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே
மகர வருக்கம்
88. மனந்தடு மாறேல்- எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
- பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
- மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
- பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
- நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
- சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
- நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்- உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
- பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே
- கல்வியாகிய நற்பொருளை விரும்பு
- முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
- உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
- ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
- யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
- பகைவர்களை நம்பாதே
- எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
Source: Wikipedia
Labels:
தமிழ்
Monday, May 21, 2012
நாடி கவிதை வலைபூ நடத்திய கவிதை போட்டிக்கான பதிவு.

தாகத்திற்கு நீர்நிலை தேடி
பறந்து திரிந்த நிலை மாறி
குழாயடியில் - தொண்டை நனைக்க
துளி நீரேனும் கிட்டாதா
எனும் நிலை வந்ததோ??
Labels:
தமிழ்
Thursday, April 26, 2012
Wednesday, April 25, 2012
காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை பற்றி காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா

தமிழ் மணத்தில் பெரியார் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் பெரியார் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்த சம்பவத்தை காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா சொல்கிறார் கேளுங்கள். "காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க, ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு , அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு "அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார். அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல் ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க. பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது. ஐயா (காமராஜர்) பேசுனா அது மேடைல பேசுற மாதிரி இருக்காது சாதரண ஆளா தான் பேசுவாரு , ஆனா அவரு ஒரு பொய் கூட சொல்ல மாட்டாரு, ஐயா மாதிரி ஒரு ஆள இனிமே யாருமே பாக்க முடியாது. அவருமாதிரி தனக்குன்னு எதுவுமே யோசிக்காத மனுசன என் வாழ்கைல நான் பார்த்ததே இல்ல. ஐயாவ எல்லோரும் கருப்பு காந்தின்னு சொல்லுவாங்க, ஐயா ஒரு கருப்பு தங்கம் , அய்யாவோட அம்மா அதுக்கு நேர் மாறா நல்லா சிவப்பா இருப்பாங்க, அவங்க முகத்த பார்த்தாலே ஒரு அன்பான பார்வை தான் தெரியும், காமராஜர் சினிமாவுல சிவகாமி அம்மாவா ஒருத்தவங்க நடிச்சிருந்தாங்க, அத பார்த்தா ஏதோ பாவமா இருந்தது. ஆனா நிஜத்துல சிவகாமி அம்மாவா பார்த்தா தெய்வீகமா இருப்பாங்க."
Labels:
காமராஜர்
Subscribe to:
Posts (Atom)

