Pages

Tuesday, August 6, 2013

எனது முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது !!! - தொடர் பதிவு

     

      நான் கணினியில் பதிவெழுதத்  துவங்கிய   நாட்களை  மீண்டும் எண்ணிப் பார்த்து  மகிழ்ந்து, அந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர அழைப்பு விடுத்த சகோதரி அம்பாளடியாள் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

         

        எனது கவிதைகளை சேமித்து வைப்பதற்காகவே வலைப்பூ ஒன்றைத் துவங்கினேன்.அது தான் முகிலின் பக்கங்கள். ஆரம்பத்தில், எனது வலைப்பூ இணையத்தில் எவர் வேண்டுமானாலும் பார்த்து படிக்குமாறு (Public) வைத்திருந்தேன். ஆனால், சில நாட்களிலேயே, எனது பதிவுகள் இணையத்தில் பல தளங்களில் பல்வேறு ஆசிரியர்களின் பெயர்களில் உலா வர, அவர்களுக்கு  மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு சிலர் நீக்கி விடுவர். சிலரோ, கண்டு கொள்ளாது நீக்க மாட்டார்கள். எதற்கு வம்பென்று, எனது கவிதை வலைப்பூவை  என் அழைப்பை பெறும் ஒரு சிலர் மட்டும் படிக்குமாறு ( Private ) மாற்றினேன்.மீண்டும், சிறிது நாட்களுக்கு முன்னர் தான் எனது வலைப்பூவை அனைவரும் படிக்கும்படி மாற்றியமைத்துள்ளேன்.

           

          நான் இரசித்த செய்திகள், கர்ம வீரர் காமராஜர் குறித்த  செய்திகள், புகைப்படங்கள், எனது அனுபவங்கள், சமையல் வலைதளங்களில் இருந்து நான் சமைத்து ருசித்த செய்முறை குறிப்புகள், எனது சிறுகதைகள், எனது கைவினை வேலைப்பாடுகள், ஓவியங்கள், உயிர் தகவல் தொழில்நுட்பம் (Bioinformatics) சார்ந்த வினா விடைகள், குறிப்புகள் ஆகியவற்றை இந்த  வலைப்பூவில் பகிர்ந்து வருகிறேன். 

 

                 ஒவ்வோர்  முறையும் புதிய பதிவொன்றை எழுதும் போதும், முதல் பதிவு எழுதும் போது ஏற்பட்ட ஆர்வமும், மகிழ்வும் குறையாது எழுதுகிறேன்.அதற்கு முழு காரணம், ஊக்கமும், உற்சாகமும், ஒவ்வோர் பதிவிற்கும் அன்பான  வாழ்த்தினை அளிக்கும் சக பதிவுலக நண்பர்களே காரணம்.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

 

 

நன்றி ! நன்றி !! நன்றி !!!

இந்தப் பதிவினைத் தொடர

1. தேன் மதுரத் தமிழ்  -  சகோதரி  கிரேஸ் பிரதிபா

2.  மழைச்சாரல்  - சகோதரி ப்ரியா

3. கவரிமானின் கற்பனை காவியம்  -

 ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.

திருமதி. பி .தமிழ் முகில் நீலமேகம்


12 comments:

  1. உங்களது சந்தோசத்தை பங்கு போட நாங்களும் வந்துவிட்டோம்

    ReplyDelete
  2. தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே !!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி சகோ என் அழைப்பை ஏற்று தொடர் பதிவைத் தந்தமைக்கு .தாங்களும் ஒரு ஆருபரைத் தேர்வு செய்தால் மேலும் மகிழ்ச்சியாக இருக்கும் .

    ReplyDelete
  4. தங்களது வருகைக்கு மிக்க நன்றி தோழி . நான் மூன்று பேருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

    ReplyDelete
  5. அன்பின் திருமதி. பி .தமிழ் முகில் நீலமேகம், பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!!

    ReplyDelete
  7. முதல் பதிவின் ஆனந்தத்தை சுருக்கமாய் விரைவாய் கூறி முடித்துவிடீர்கள்... அருமை... என்னையும் இதை தொடர அழைத்தமைக்கு நன்றி... விரைவில் தொடருகிறேன்...

    ReplyDelete
  8. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி. தங்களது அனுபவங்களைப் படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. இந்த தொடர் பதிவில் என்னுடயதும் இணைத்தாயிற்று... :) http://wordsofpriya.blogspot.com/2013/08/blog-post_18.html

    ReplyDelete
  10. @ ப்ரியா
    மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  11. ''..ஒவ்வோர் முறையும் புதிய பதிவொன்றை எழுதும் போதும், முதல் பதிவு எழுதும் போது ஏற்பட்ட ஆர்வமும், மகிழ்வும் குறையாது எழுதுகிறேன்..''

    ME..too


    Eniya vaalththu.
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  12. தங்களது வருகைக்கும் அன்பானதொரு வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே.

    ReplyDelete