Pages

Monday, August 5, 2013

என் கணினி அனுபவங்கள் - தொடர் பதிவு

            



                 எனது முதல் கணினி அனுபவங்களை எழுத அழைத்த தோழி இராஜலஷ்மி பரமசிவம் அவர்கட்கு என் நன்றிகள். இதோ என் முதல் கணினி  அனுபவங்கள்.

                                 முதன் முதலில் கணினியைப் பயன்படுத்தியது பள்ளியில்   எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான். அப்போதெல்லாம், கணினி ஏதோ விளையாடுவதற்காகவே பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாய் எனக்குத் தோன்றியது.ஏனோ, கணினி விளையாட்டுகளில் அவ்வளவாய் ஆர்வம் ஏற்படவில்லை. அதன் பின், பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்துப் படித்தபடியால், கணினி பற்றி அறிய அவ்வளவாக வாய்ப்பு கிட்டவில்லை.

                             கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பில்  தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவு எடுத்துப் படித்தேன். அப்போதெல்லாம் ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். முதல் பாடம்  C Programming. Scanf, Printf, syntax இவையெல்லாம் புதிதாகவும், error, compilation,execution என புரியாத பலவும் வர, மனதில் பயமே கிளம்பியது. அதன் பின், அடுத்த செமஸ்டரில் C++, COBOL எல்லாம் பழகப் பழக எளிதாகி விட்டது.

                               ஒரு செமஸ்டர் விடுமுறையின் போது, ஜாவா ( JAVA) கற்றுக் கொள்ள  APTECH  Computers  பயிற்சி மையத்தில் சேர்ந்து, ஆறு மாத பயிற்சியில் பதிவு செய்து கொண்டேன். ஆனால், இருப்பதோ இரண்டு மாத விடுமுறை மட்டுமே. நான் விடுதியில் தங்கி படித்தபடியால், விடுமுறைக்குள் கற்றுக் கொண்டுவிட வேண்டும். அதற்கு அவர்கள், Crash Course ஆக இரண்டு மாதங்களிலேயே ஆறு மாதத்திற்கான பாடங்களை முடித்து விடுவதாகச் சொல்லி, சில ஆயிரங்களை கட்டணமாக வசூலித்து விட்டனர். வகுப்புகள் ஆரம்பமாயின. Java Complete Reference புத்தகத்தினைக் கையில் கொடுத்து, " இதிலுள்ள Programs Execute பண்ணிப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார். வகுப்பு ஆரம்பிக்கும் நேரத்திலும், முடியும் போதும் மட்டுமே வருவார். சந்தேகங்களை ஒரு நாளும் நிவர்த்தி செய்யவும் மாட்டார். நாளை சொல்லித் தருகிறேன் என்று சொல்லுவதோடு சரி. அதன்பின், அதனை மறந்தே போய் விடுவார். அடுத்த நாள் கேட்டால், இன்றைய பாடம் முடிந்ததும் சொல்லித் தருகிறேன் என்பார். அன்றைய பாடம் முடியவும், அடுத்த batch மாணவர்கள் வரவும் சரியாக இருக்கும். அதன்பின், எங்கே சொல்லிக் கொடுப்பார்?  நிர்வாகத்திடம்  அவரைப் பற்றி கூற, அவரோ, நான் கற்றுக் கொள்வதில்லை என்று என் மீதே குறை கூற  "இனி பயிற்சி மையங்களை நாடுவது கூடாது. சொந்த முயற்சியில் கற்றிருந்தாலே நன்றாக கற்றிருக்கலாமோ" என்று தோன்ற, அப்போதே பயிற்சி மையங்களுக்கு முழுக்கு போட்டேன்.

                                    முதுகலை பட்டப்படிப்பின் போது தான் இணைய அறிமுகம். அதன் பின், மின்னஞ்சல் கணக்கு துவங்குவது பற்றி அறிந்து கொண்டேன்.  பாடங்கள் முழுவதுமே இணையத்தை பயன்படுத்தி கற்க வேண்டியவையாகவே இருக்கும்.

                                    கணினியில் தமிழில் எழுதலாம் என்பதை அறிந்தபோது தாங்கவொன்னா சந்தோஷம். Blogger வழங்கும் இலவச வலைப்பூ சேவை தனை பயன்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறேன். அன்றாடம், புதிது புதிதாய் ஏதேனுமொன்றை கற்று வருகிறேன்.

                                
                                     
                                   

11 comments:


  1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம் படிக்க இனிமையாகதான் இருக்கிறது

    ReplyDelete

  2. உங்கள் வலைத்தள செட்டிங்க்ஸ் எல்லாம் ஒகே ஆனால் பேக்கிரவுண்ட் கலர்தான் படிக்க கஷ்டத்தை தருகிறது நேரம் கிடைக்கும் போது மாற்றி அமையுங்கள் மேலும் நேரம் கிடைக்கும் போது தமிழ் மணத்தில் இணையுங்கள்

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிகள் சகோதரரே !!!

    background colour மாற்றி அமைத்து விட்டேன்.இப்போது படிக்க எளிதாக உள்ளதா?

    வலைப்பூவில் பல ஆங்கிலப் பதிவுகளும் எழுதியுள்ளேன்.தமிழ் மணத்தில் இணைக்க முடியுமா?

    ReplyDelete
  4. இப்போது எனக்கு படிக்க எளிதாக இருக்கிறது ஆனால் இன்னொரு திருத்தம் அடுத்த பதிவுகள் எழுதும் போது FONT SIZE யை சிறிது அதிகப்படுத்தவும். ஒரு சில ஆங்கில பதிவுகள் இருந்தால் பரவாயில்லை உங்களது பதிவுகள் அனேகமாக தமிழில் இருப்பதால் தமிழ்மணத்தில் சேர்க்கலாம் அது போல இண்டலியிலும் சேருங்கள்

    ReplyDelete
  5. நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள் , நம் எல்லோருக்கும்ர் மிக மிக மெதுவாகத்தான் கணினி அறிமுகமாகியிருக்கிறது.

    ஒரு பெரிய கணினி மையத்தைப் பற்றி இப்படி யாராவது சொன்னால் தான் தெரிகிறது.

    அருமையான பதிவு. நன்றி தமிழ்முகில் பகிர்விற்கு.

    ReplyDelete
  6. @ Avargal Unmaigal

    அறியத் தந்தமைக்கு நன்றிகள்.விரைவில் தமிழ் மணத்தில் இணைக்கிறேன்.

    ReplyDelete
  7. @ rajalakshmi paramasivam

    தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...

    உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணத்தில் இணைக்க Html -ல் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும் : dindiguldhanabalan@yahoo.com நன்றி....

    ReplyDelete
  9. @ திண்டுக்கல் தனபாலன்

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் ஐயா !!

    தாங்கள் ஏற்கனவே எனது மற்றோர் தளத்திற்கு கூறியபடி, .in என்பது .com ஆக மாற head tag ற்கு கீழே, நீங்கள் கொடுத்த code சேர்த்துள்ளேன்.இப்போது .com வேலை செய்கிறதா என்று சொல்லுஙகள்.

    இனிமேல் தான் தமிழ் மணத்தில் இணைக்க வேண்டும்.விரைவில் இணைக்கிறேன்.

    ReplyDelete
  10. அனுபவம் இனிமையாக இருக்கிறது.
    இன்று தான் இப் பக்கம் அகப்பட்டது.
    இது வரை நாளும் தங்கள் பெயர் கிளிக்க அங்கு கொண்டு சென்று என்னை விழுத்தியது.
    இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவியே.அந்த வலைப்பூ கவிதைகளுக்காக மட்டும் வைத்துள்ளேன்.இதில் கதை,கட்டுரை,அனுபவங்களை எழுதி வருகிறேன்.

    ReplyDelete