Pages

Wednesday, September 16, 2015

நெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்

நெகிழி - நம் அன்றாட வாழ்க்கையில் ஓர் நாளேனும் இதனை பயன்படுத்தாது இருக்கிறோமா ? இல்லை என்றே  அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழி பயன்பாடு நம்மிடையே உள்ளது. விடியற்காலை நெகிழிப் பைகளில் பால் வாங்குவது தொடங்கி,  கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்குவது, புதிய துணிமணிகள், குடிதண்ணீர் பாட்டில்கள், உணவகங்களில் உணவு வாங்கினால், சூடான உணவுப் பொருட்கள், கொதிக்கும் குழம்பு வகைகள் வரை அனைத்துமே நெகிழிப் பைகளில் என்றாகி விட்டது. 

இந்த நெகிழிப் பைகளை பயன்படுத்தி விட்டு என்ன செய்கிறோம் ? குப்பைகளில் தூக்கி எறிந்து விடுகிறோம். அப்படி தூக்கி எறியும் நெகிழிப் பைகள் என்னவாகின்றன ? மற்ற பொருட்களைப் போல் மண்ணில் மக்கி அழிந்து போகின்றனவா ? இல்லை. மண்ணுள் அப்படியே தங்கிப் போய்விடுகின்றன. காற்றில் அலைக்கழிக்கப் பட்டு, நீர் நிலைகளில் சென்று சேர்ந்து நீரினையும் மாசு படுத்துகின்றன. 

நெகிழிப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படும் இரசாயனங்கள் நச்சுத் தன்மை கொண்டவை.  நெகிழிப் பைகள் தயாரிக்கப் பயன்படும் ஸைலீன் (Xylene), எத்திலீன் ஆக்சைடு (Ethylene oxide), பென்ஸீன் (Benzene) ஆகிய இரசாயனங்கள்,  உயிரினங்களுக்கு பல விதமான நோய்களையும் உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த இரசாயங்களால் நீர், நிலம், காற்று என்று நம் வாழ்வுக்கு ஆதாரமான அனைத்துமே பாழ்பட்டுப் போகின்றன.

நெகிழிப் பைகளை அழிப்பதாக எண்ணி அவற்றை எரித்தாலும், புதைத்தாலும் அதனால் விளையும் கேடுகளே அதிகம். எரிக்கையில் வெளியேறும் நச்சு வாயுக்கள் உயிரினங்களின் நலனுக்கு கேடாக அமைகின்றன. நாம் தூக்கி எறியும் நெகிழிப் பைகளின் நிறங்களினால் ஈர்க்கப் பட்டு பறவைகளும் விலங்குகளும் அவற்றை உண்டு விடுகின்றன. கடலில் மற்றும் நீர்நிலைகளில் சென்று சேரும் நெகிழிப் பைகள், நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கு எமனாக அமைகின்றன.

இறந்து போன கடல் பறவையின் வயிற்றினுள் காணப்பட்ட நெகிழிப் பொருட்கள்

நீரில் மிதக்கும் நெகிழிப் பையை ஜெல்லி மீனாக எண்ணி சாப்பிட எத்தனிக்கும் கடல் ஆமை இணைய பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்  moocs.southampton.ac.uk   .
இது போன்று, ஏதேனும் ஒரு நீர்வாழ் உயிரினம் நெகிழிப் பைகளை அறியாமையால் உட்கொண்டு விட்டால், அதனால் அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும். அது எப்படி ? நெகிழிப் பையை உட்கொள்வதால் ஓர் நீர்வாழ் விலங்கினம் முற்றிலுமாக அழிந்து போய் விடும் எனில், உணவுக்காக அந்த உயிரினத்தை சார்ந்திருக்கும் மற்றோர் இனத்திற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். இப்படி ஏற்படுவதால், ஓர் உணவுச் சங்கிலி (food chain) அறுபட்டு விடுகிறது. உணவுச் சங்கிலி அறுபட்டால், ஒரு இனம் அளவிற்கு அதிகமாக பெருகவும், வேறோர் இனம் உணவின்றி அழியும் அபாயமும் ஏற்படுகிறது.

நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை  நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.

நிலங்கள் மற்றும் காடுகளை  ஆக்கிரமித்திடும்  நெகிழிப் பைகளை  உணவாகக் கொண்டுவிடும் விலங்குகளின் வயிற்றில் அவை அப்படியே தங்கிப் போய், அவற்றிற்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகளினால் மூன்று மாதத்திற்கு ஒரு காட்டு விலங்கு வீதம் அழிகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பூமியில் உள்ள உயிர் இனங்கள் ஒவ்வொன்றாக அழிந்து விடும் பேராபத்தும் இருக்கிறது.

மண்ணிலும் விளைநிலங்களிலும் மண்டிவிடும் நெகிழிப் பைகள் நிலத்தடி நீரோட்டத்தினை பாதிக்கின்றன. மேலும், தாவரங்களின் வேர்கள் நிலத்தினுள் பரவி ஓடை இயலாதவாறு தடை செய்கின்றன. இதனால், செடி கொடிகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப் படுகிறது.

நெகிழிப் பைகளால் விழையும் இத்தகைய தீங்குகளில் இருந்து நம்மையும் நமது சுற்றுச் சூழலையும் காத்துக் கொள்வது எங்கனம் ? நெகிழி பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப் பைகளை மீண்டும் பயன்படுத்தலாம். அவை நமக்கு பயன்படாது என்று எண்ணினால், அவற்றை குப்பைகளில் வீசி, அல்லது எரித்து சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தாது, அவற்றை மறுசுழற்சி மையங்களில் (Recycling Centers) கொடுத்து விட்டால், அவர்கள் அந்தப் பைகளைக் கொண்டே மீண்டும் புதிய பைகளை உருவாக்கி விடுவார்கள்.

நாம் கடைகளுக்கு செல்கையில் நாமே கைகளில் பைகளை கொண்டு சென்றால், கடைகளில் இருந்து வாங்கி வரும் நெகிழிப் பைகளின் எண்ணிக்கை குறையும். அவை வீணாக குப்பையில் சென்று சேர்வதும் தவிர்க்கப்படும்.

கனடாவிற்கு வந்த புதிதில், ஒரு கடையில் சாமான்கள் வாங்கச் சென்றிருந்த போது, வாங்கிய சாமான்களை போட்டுத் தர நெகிழிப் பை வேண்டுமெனில், அவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலித்தார்கள். இதனால் அக்கடைக்கு வரும் மக்கள் அனைவருமே தம்முடன் பைகள் வைத்திருந்தனர். இது போன்ற திட்டமும் கூட, நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைக்கும்.

நெகிழி தண்ணீர் பாட்டில்கள் அழகான பைகளாக உருமாற்றி, நாம் கடைத் தெருக்களுக்கு செல்கையில் பயன்படுத்தும் வகையில் பயனுள்ளதாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இதை பாருங்களேன்.


படத்திற்கு நன்றி, arcmate.com.

இவையனைத்திற்கும் மேலாக, மிகவும் முக்கியமான செய்தி ஒன்று.

" துணிப் பைகளையும், பொட்டலம் போடும் முறையையும் கேவலமாக எண்ணிக் கொண்டே இருக்கும் வரை, நெகிழி அரக்கனின் பிடியிலிருந்து நாம் நம்மையும் நமது சுற்றத்தையும்  காப்பது சிரமம். "



தகவல் திரட்ட உறுதுணையாக இருந்த வலைப்பக்கங்கள்

http://www.care2.com/causes/6-animals-who-died-after-swallowing-plastic.html 
arcmate.com
answers.com 
University of Southampton - Exploring our Oceans

பொட்டலம் புகைப்படம் கீழ்க்கண்ட வலைப்பக்கத்தைச் சார்ந்தது

http://stepoutofhome.blogspot.ca/2008/09/good-ol-pottalam.html



உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்கா எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.



42 comments:

  1. நெகிழியின் கெடுதியைப் பற்றிய அருமையான கட்டுரை.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
  2. ஆஹா நெகிழியின் தீமையை விரிவாக எடுத்து சொலியமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. @ கிரேஸ்

    நன்றி தோழி.

    ReplyDelete
  4. மொத்தம் ஐந்து வகைகளில் போட்டிக் கட்டுரைகள் உள்ளன... அதில் எந்த வகை என்பதை மறவாமல் ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழ் கொடுக்கவும்... நன்றி...

    மேலும் இதுவரை வந்த கட்டுரைகளை காண சொடுக்குக இங்கே --> சபாஷ்... சரியான போட்டி...!<---

    புதுக் கோட்டை விழாக் குழுவின் சார்பாக
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  5. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்கான கட்டுரை என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு விட்டேன் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்
    போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. @ ரூபன்

    நன்றி சகோதரரே.

    ReplyDelete
  8. நெகிழிப் பைகள், பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துபவர் விழிப்புணர்வு பெற்றால் தேவையும் உற்பத்தியும் குறைந்து சுற்றுச் சூழல் மாசின்றி அமையும். நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

    ReplyDelete
  9. இன்றைய காலத்திற்கு அவசியமான ஒன்றை அழகான முறையில் கட்டுரையாகத்தந்த விதம் சிறப்புங்க. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்செல்லும் பாங்கு ..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இன்றைய உலகின் மிக பெரிய சாபங்களில் ஒன்று நெகிழி! அதைப்பற்றி விரிவான கட்டுரை அருமை தோழி!! போட்டியில் பங்குபெற்றமைக்கு விழாக்குழுவின் சார்பாக என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. @ Pavalar Pon.Karuppiah Ponniah

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  12. @ சசிகலா

    மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  13. @ Mythily kasthuri rengan

    மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  14. நெகிழியால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தொகுத்து அருமையான படங்களுடன் பட்டியல் இட்டிருப்பதற்குப் பாராட்டுக்கள் தோழி! இக்காலத்துக்கு மிகவும் அவசியமான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  15. @ ஞா. கலையரசி

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  16. @ My Mobile Studios

    தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

    ReplyDelete
  17. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! வலைப்பூவிற்கும் புதியவன்! நெகிழி பற்றிய கருத்துகள் அருமை!! வாழ்த்துகுகள்! சிறு விண்ணப்பம்!
    நெகிழி யை அரசு கூறி ய வழிமுறைகளில் யாரும் தயாரிப்பதில்லை ஒவ்வொரு பிளாஸ்டிக் "களிலும் அதை எத்தனை முறை பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்தினால் நெகிழியில் உள்ள நச்சுதன்மை வெளிவரும் போன்ற சில தகவல்களையும் இனணத்திருக்கலாம் (அதிகப்படியாய் கூறியிருந்தால் மன்னிக்கவும்)

    என் தளம் வந்தமைக்கும் கருத்துகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் பல !

    ReplyDelete
  18. @ கரூர்பூபகீதன்

    தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன் சகோதரரே.

    உண்மை தான். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பின்புறம் ஓர் எண் குறிப்பிடப்பட்டிருக்குமெனவும், அந்த எண்கள், அவற்றின் மக்கும் தன்மையை குறிக்கும் எனவும் கேள்விப்பட்டதுண்டு.

    நினைவூட்டியமைக்கு நன்றிகள். அதிகப்படியாக தாங்கள் எதுவும் சொல்லவில்லை. இணையத்தில் தேடிப் பார்த்து கட்டுரையில் சேர்க்க முயல்கிறேன்.

    நன்றி.



    ReplyDelete
  19. கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் வென்றமைக்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  20. @ துரை செல்வராஜூ

    மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  21. வெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. @ மு. கீதா

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  24. @ தி. தமிழ் இளங்கோ
    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  25. வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. @ Mythily kasthuri rengan

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  28. @ Avargal Unmaigal

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

    ReplyDelete
  29. மின்-தமிழ் இலக்கியப்போட்டியில் பங்கு பெற்று பரிசினை வென்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. வாவ்! வாவ்! மகிழ்ச்சி தோழி :) வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  31. அன்புடையீர்!

    இரண்டாம் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  32. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டுக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete
  33. பரிசினைவென்றசகோவிற்குமனமார்ந்தவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. @ S.P.Senthil Kumar

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. தங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. @ கிரேஸ்

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் தோழி.

    ReplyDelete
  36. @ Manavai James

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  37. @ மணிவானதி

    தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் முனைவர் ஐயா அவர்களே.தங்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. @Malathi
    மனமார்ந்த நன்றிகள் சகோ.

    ReplyDelete
  39. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திருமிகு பி.தமிழ் முகில் அவர்களுக்கு வணக்கம். விழாவுக்குத் தாங்கள் வர இயலாத சூழலில், தொகை எங்களிடமே உள்ளது. தங்கள் முகவரியைத் தெரிவித்து, தங்களின் வங்கிக் கணக்கைத் தெரிவித்தால் அதில் தொகையைச் செலுத்திவிடலாம். அல்லது யாரேனும் புதுக்கோட்டை அருகில் உள்ள தங்கள் நண்பர் வழியே கேடயத்தைத் தந்தனுப்ப விரும்புகிறோம். அஞ்சலில் அல்லது கூரியரில் அனுப்ப இயலாத நிலை. விவரம் தெரிவிக்க வேண்டுகிறோம். தொகையும் கேடயமும் என்னிடமே உள்ளன. மின்னஞ்சல் செய்க -muthunilavanpdk@gmail.com வாழ்த்துகளுடன், நா.முத்துநிலவன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.
    பி.கு. தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி. விழாவின் நோக்கமே அதுதான்.

    ReplyDelete
  40. அன்புச் சகோதரிக்கு வணக்கம். விழாவின்பின் எனக்கு தனிப்பட்ட முறையிலும் குழுக்களிலம் வந்த ஏராளமான மின்னஞ்சல்களின் தொந்தரவால் எல்லாவற்றையும் பார்த்து ட்ராஷ் செய்ய முற்பட்டபோது எனது வேண்டுகோளிற்கிணங்கத் தாங்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலும் தவறுதலாக அழிந்துவிட்டது சகோதரி. எனவே இப்பிழையைப் பொறுத்துக் கொண்டு தங்களின் மின்னஞ்சலை (மேற்காணும் எனது முகவரிக்கு) மீண்டும் அனுப்பி உதவ வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்க. (இந்தப் பின்னூட்டத்தை நீங்கள் படித்துவிட்டு அழித்துவிடலாம்)

    ReplyDelete