Pages

Monday, July 22, 2013

சில மலர்கள் இரவில் மலர்வது ஏன் ?

செண்பகம்
மனோரஞ்சிதம்
சம்பங்கி

          சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ஆகியவற்றை எளிதில் கவர்கின்றன.மேலும், இவற்றின் அபார வாசனை பூச்சிகளை தன்வசம் இழுக்கின்றன.மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.
 
                இரவில் மலரும் மலர்கள் சில: மல்லிகை, செம்பகம்,சம்பங்கி, மனோரஞ்சிதம்,வெண்தாமரை,நிஷாகந்தி.



மல்லிகை
வெண்தாமரை
நிஷாகந்தி

4 comments:

  1. அறியா தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தங்களை என் தளத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. அழகு... தகவலுக்கும் நன்றி...

    ReplyDelete
  4. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா !!

    ReplyDelete