Pages

Tuesday, November 1, 2011

காளமேகப் புலவர் - tongue twisters

           காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்தவர். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
  ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று. காளமேகப் புலவரை ஒரு ஆசுகவி என்று இலக்கியம் கூறும். ஆசுகவி எனப்படுவோர் எடுத்த மாத்திரத்திலே கவி பாடக்கூடிய திறமை படைத்த புலவர்களைக் குறிக்கும்.



மானமே நண்ணா மணமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணு - மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
மானா மணிமேனி மான்
                                     -- காளமேகப் புலவர்
Source: http://pkhari.blogspot.com

விளக்கம்:  
மானம் மான் மன்னா - பெரிய யானைகளையுடைய வேந்தனே!, ஆனா மினல் மின்னி - நீங்காது மின்னானது விளங்கி, முன் முன்னே நண்ணினும் - முன்னே முன்னே தோன்றினும்,மானா மணி மேனி - ஒவ்வாத அழகிய உருவத்தையுடைய, மான் - மானை யொப்பாள், மானமே நண்ணா மனம் - மானம் யாதும் மேவாத உள்ளம், என் மனம் என்னும் - எனது உள்ளம் என்னும்; நனி நாணும் - மிகவும் நாணும் குறைபடா நிற்கும்; ஈனமாம் - (ஆதலால், நீ இதுவரை வரைந்து கொள்ளா திருத்தல் நினது பெருமைக்குக்) குறைபாடாகும் எ - று.
(வி - ரை) தலைவன் நெஞ்சு தன்னிடத்து வாராதிருந்தும், தன் நெஞ்சு தலைவன்பால் சேறலின் 'மானமே நண்ணா மனம்' என்றாள். 'செற்றார் பின் சொல்லாப் பெருந்தகைமை காமநோய், உற்றார் அறிவதொன் றன்று' (குறள் - 1255) என்பது தலைவிக்கு அநுபவமாயிற்று.

Source: http://www.tamilvu.org
 ***********************************************************************************************************************************

காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

                                      - காளமேகப் புலவர்
  Source: http://pkhari.blogspot.com

விளக்கம்:
காக்கைக்காகா கூகை = காக்கைக்கு ஆகா கூகை = கூகையை(ஒரு வகை ஆந்தை) இரவில் வெல்லுவது காக்கையால் ஆகாது.
கூகைக்காகா காக்கை = கூகைக்கு ஆகா காக்கை = பகலில் கூகையால் காக்கையை வெல்வதற்கு முடியாது. ஆகாத காரியம்.
கோக்கு கூ காக்கைக்கு
கோ = மன்னன்; கோக்கு = மன்னனுக்கு
கூ = புவி
காக்கைக்கு = காப்பதற்கு
கொக்கொக்க = கொக்கு ஒக்க = கொக்கைப் போன்று தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்கவேண்டும். இல்லையெனில்,
கைக்கைக்கு = பகையை எதிர்த்து
காக்கைக்கு = காப்பாற்றுதல்
கைக்கைக்காகா = கைக்கு ஐக்கு ஆகா=(தகுந்த சமயமில்லாது போனால்) திறமைமிக்க தலைவனுக்கும் கைக்கு எட்டாது போய்விடும்.

இந்தப்பாடலின் பொருள்: தகுந்த சமயமும் வாய்ப்பும் பார்த்து,
வாய்ப்புகளை நழுவ விடாது செயலாற்ற வேண்டும். 

Source:http://www.yarl.com
************************************************************************************************************************************
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
பாடியவர்: காளமேகப் புலவர்
விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?
முழு விளக்கம்:
வண்டே,
தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்
துதைது – அடுத்த பூவுக்குச் சென்று
அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்
தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? - நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?
Source:http://madharasan.wordpress.com
************************************************************************************************************************************
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

பாடியவர்: காளமேகப் புலவர்

விளக்கம்
தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)
தூதோ- மூலமாக அனுப்பும் தூது
தீது - நன்மை பயக்காது!
தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ
தூது - தூதுப் பணியில் தூதை
ஓதாது - (திறம்பட) ஓதாது!
தூதி தூது - தோழியின் தூதோ
ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்
தொத்து - தொடர்தலும்
தீது - தீதாகும்
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது
தித்தித்தது _ எனக்கு இனிமையான தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை
ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!

Source:http://www.yarl.com
************************************************************************************************************************************

9 comments: