Pages

Thursday, January 5, 2012

கதை - 6



இலக்கம்: 7


சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள். கீர்த்திக்கு சௌமியா மீதும், இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..
அடுத்த நாள் மாலை 6:00 மணி ....
பிரிவு உபசார விழா முடிந்து, நால்வரும் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தடிக்கு  வந்து சேர்ந்தனர்.சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன.ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீர்த்தி பேச ஆரம்பித்தான்." சௌமியா, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே??" என்றான். "சொல்லு கீர்த்தி" என்றாள் சௌமியா. உடனே கீர்த்தி, "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றான். உடனே இந்திரஜித், "நான் உன்னைக் காதலிக்கிறேன் லாவண்யா" என்றான். சௌமியா,லாவண்யா இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவ்விடத்தில் அமைதி நிலவியது. அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து   நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம். அதற்குள், நாமும் நம் கல்வி நிலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வோம்" என்றாள் லாவண்யா.அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தனர் கீர்த்தியும் இந்திரஜித்தும்.மனதில் தெளிவு பிறந்தவர்களாய் புதிய உற்சாகத்துடன் நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வாழ்வில் வசந்தங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.

http://www.eegarai.net/t75627p195-7#708255 




No comments:

Post a Comment