blank'/> muhilneel: October 2015

Thursday, October 15, 2015

Recycled newspaper Photo frame


நெகிழியின் பாதிப்பு

நமது அஜாக்கிரதையால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்து.எனது  நெகிழி (Plastic) பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்  என்ற கட்டுரையில் நெகிழி பைகளினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை குறித்து எழுதி இருந்தேன். சமீபத்தில், அது சம்மந்தமாக முகநூலில் ஒரு காணொளி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதை இங்கு பகிர்ந்துள்ளேன்.

நமது இந்தியாவில் சாலைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை அறியாமையால் உணவாகக் கொண்டு விடுகின்றன கால்நடைகள். மாடுகளின் வயிற்றில் இருந்து சுமார் அறுபது கிலோ வரை நெகிழிப் பைகள் எடுக்கப் படுகின்றன. எங்கிருந்து இவை நெகிழிப் பைகளை உட்கொள்கின்றன ? பசும் புல் மற்றும் இலை தழைகள் இல்லாத பட்சத்தில், சாலையோரம் சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டிகளை ஆடுகளும் மாடுகளும் உண்பதை  நாளும் கண்கூடாக காண்கிறோம். அப்படிப் பட்ட சூழ்நிலையில், இவை நெகிழிப் பைகளையும் சேர்த்தே உணவாகக் கொண்டு விடுகின்றன. அப்படி அவை உணவாக கொள்ளும் நெகிழி, நம்மை அறியாது நமது உணவுகளிலும் வந்து விடுகின்றன. இப்படி நெகிழி உண்டுவிடும் மாடுகள் தரும் பாலிலும், நெகிழியின் நச்சுத் தன்மை இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இது போன்று நெகிழி உட்கொண்டு விட்ட கால்நடைகளின் மாமிசத்தினை நாமும் உண்ண நேர்ந்தால், அந்த நெகிழியின் தீமைகள் நம்மையும் வந்தடையும்.

Wednesday, October 7, 2015

நல்லார் பொருட்டு பெய்யும் மழைநகரின் முக்கியமான சாலையாக விளங்கும் அவினாசி சாலை, அந்த விடிகாலை வேளையிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என்று பல்வேறு வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன. அந்த ஆறு மணி வேளையிலேயே, பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது பத்து பேராவது பேருந்திற்காக நின்றிருந்தார்கள்.

நெடுஞ்சாலை ஆதலால், அச்சாலையில் இருக்கும் உணவகங்கள், மளிகை கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், அனைத்துமே திறக்கப்பட்டு அன்றைய வியாபாரத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. அதே வரிசையிலேயே ஓர் பூங்கொத்து மற்றும் மலர் அலங்கார கடை. அதன் உரிமையாளர் சூர்யா.

கடையைத் திறந்து உள்ளே நுழைந்த சூர்யா, முந்தின நாள் விற்காமல் மீதமிருந்த ரோஜாப் பூங்கொத்துகளை தனியாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் கடையின் வாசலில் புது மலர்ச் செண்டுகளோடு கடைப் பையன் வண்டியில் வந்து சேர, மலர்க் கொத்துகள், அலங்கார மலர்கள் அனைத்தையும் அழகாக நேர்த்தியாக கடையில் அடுக்கி வைத்துவிட்டு, கடையிலிருந்த சாமி படங்களுக்கு புது மலர்ச் சரங்கள் சூடி, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி வழிபட்ட பின் வியாபாரத்திற்காக கல்லாவில் அமர்ந்தார் சூர்யா.

ஓர்  இளம் ஜோடி வந்து பூங்கொத்துகளை பார்த்தபடி, பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஒன்றை எடுக்கவும், வைக்கவுமாய் இருந்தனர். அதே சமயத்தில் கடைக்குள் நுழைந்த ஓர் இளைஞர், வேக வேகமாக கையில் கிடைத்த ஓர் பூங்கொத்தை எடுத்துக் கொண்டு, அவசரமாக கட்டணத்தை செலுத்தி விட்டு, மீதி சில்லறைக் காசுகளை கூட வாங்க நேரமில்லாதவர் போல, விருட்டென வண்டியிலேறி கிளம்பிவிட்டார்.

கடையின் வாசலில், கதவின் ஓரம் ஓர் தயக்கத்துடன், சிறுமி ஒருத்தி வந்து நின்றாள். உள்ளே செல்லலாமா, வேண்டாமா என்று எண்ணியவாறு தயங்கி தயங்கி நின்ற அச்சிறுமி, கடையின் முன் யாரோ வீசிச் சென்றிருந்த குப்பைக் காகிதங்களை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு, அப்போது தான் கழுவியிருந்த தன் முகத்தினை, தன் பாவாடை கொண்டே துடைத்தவாறு நின்றிருந்தாள்.

" வா ஷீபா ! உள்ள வா ! " என்றழைத்தார் சூர்யா.


" அண்ணா ! இன்னைக்கு ஏதாவது பழைய பூ இருக்கா ? இருந்தா தாங்கண்ணா " என்றவாறு கடைக்குள் நுழைந்தாள் பத்து வயது சிறுமி ஷீபா.குப்பையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு நின்றாள்.

" இருக்குப்பா. அதோ, உனக்காக தான் அங்க எடுத்து வச்சிருக்கேன். எடுத்துக்கோ ! " என்றார்.

முந்தின நாள் விற்காது போன மலர்களை எடுத்து பத்திரமாக நீர் நிரப்பிய பாத்திரம் ஒன்றில் போட்டுவிட்டு செல்வது சூர்யாவின் அன்றாட வழக்கம்.
அப்படி வைப்பதனால், வாடாது புதிது போலவே  மலர்கள்  இருக்கும். அந்த மலர்களை  மறுநாள்    ஷீபா விற்றுக் கொள்ள கொடுத்து விடுவார் சூர்யா.

அவர் செய்யும் உதவிக்காக, கடையை கூட்டி சுத்தம் செய்து வைப்பது, பக்கத்து கடையிலிருந்து டீ, காபி, வடை வாங்கிவருவது போன்ற சிறு சிறு உதவிகளை செய்வாள் ஷீபா.

" அண்ணா ! கொஞ்சம் தண்ணி குடிச்சக்கறேன் " என்றவள், சூர்யாவின் பதிலுக்காக காத்திராமல், மண் பானையிலிருந்து இரண்டு பெரிய தம்ளர் நிறைய தண்ணீரை எடுத்து மடமடவென குடித்துவிட்டு, ரோஜா மலர்களை கைகளில் எடுத்துக் கொண்டு, " வரேன் அண்ணா ! " என்றவாறு கடையை விட்டு வெளியேறினாள்.

சாலையை நோக்கி வந்தவள், சாலையை ஒட்டி இருக்கும் மண் பாதையில் ஒதுங்கி நின்று கொண்டாள். போக்குவரத்து அடையாள விளக்கு சிவப்பாவதைக் கண்டதும், வேகமாக வந்தாள். வந்தவள், நின்றிருந்த ஒவ்வொரு கார்களின் ஜன்னலுக்கு அருகிலும் சென்று தன் கையிலிருந்த ரோஜா மலர்களைக் காட்டியவாறு, " ஒரு பூ அஞ்சு ரூபாய் தாங்க. வாங்கிக்கோங்க " என்றாள்.

சிலர், பட்டென்று தலையை திருப்பிக் கொண்டனர். ஒரு சிலர், காரின் கண்ணாடியை இறக்கி விலையை விசாரித்து விட்டு, பட்டென்று கண்ணாடியை ஏற்றிக் கொண்டனர். சமயங்களில், காரில் பெண்களோ, சிறுமியரோ இருந்தால், அவர்கள் விரும்பினால், ஒன்றிரண்டு ரோஜா மலர்கள் விற்பனை ஆகும். வாடிக்கை பூ வியாபாரிகள் விற்கும் விலையை விட மலிவாக கிடைப்பதால், வாங்கிக் கொள்வார்கள்.

வாங்கியதும், சொன்ன விலையை கையில் கொடுத்துச் செல்பவர்கள் ஒரு சிலர். சொன்ன விலையை விட குறைத்து, பேரம் பேசி வாங்கிச் செல்பவர்கள் சிலர். இன்னும் சிலரோ, காசை காரின் ஜன்னல் வழியாக விட்டெறிந்து விட்டுச் செல்வார்கள். சமயங்களில், காசே கொடுக்காமல், பச்சை விளக்கு விழுந்ததும், விருட்டென கிளம்பிச் செல்பவர்களும் உண்டு.

 ஓர் கருப்பு நிற கார், சிவப்பு குறியீட்டிற்காக நின்றது. அருகில் சென்ற ஷீபா, மலர்களை காட்டியபடி காரின் ஜன்னலருகில் நின்றிருந்தாள். காரின் பின்னிருக்கையில், இரு சிறுமிகள் பள்ளி சீருடையில், அழகாக இரட்டை பின்னல் போட்டு அமர்ந்திருந்தனர்.

ஓட்டுனர் இருக்கையில் ஒரு ஆணும், அவரது  அருகிருக்கும் இருக்கையில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். காரின் கண்ணாடியை இறக்கிய அப்பெண், " மூணு ரோஸ் குடு பாப்பா " என்றவாறு மூன்று அழகான ரோஜா பூக்களை பார்த்து எடுத்துக் கொண்டார். காசைக் கொடுப்பதற்காக, தனது சிறிய கைப்பையை திறந்து ஒரு பூவிற்கு ஐந்து ரூபாய் வீதம் , மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து கொடுக்க எத்தனித்த வேளையில், போக்குவரத்து குறியீடு பச்சை ஆகிவிட்டது.

வேகவேகமாக காசைக் கொடுக்கிறேன் என்று ஷீபாவின் கையில்,  தன் ஒரு கையால் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்களையும், மற்றொரு கையில் கைப்பையையும் வைத்தவாறு கொடுத்துக் கொண்டிருந்தார். பச்சை விளக்கு விழுந்து விட்டதால், அவசரப்பட்ட அப்பெண், ரூபாய் நாணயங்களோடு தனது கைப்பையையும் சாலையில் தவற விட்டு விட்டார். இறங்கி எடுக்கவும் வழியில்லை. பின்னால் நின்றிருந்த வாகனங்களும் " பாம் ! பாம் ! " என்று ஒலியெழுப்ப, வேகமாக வண்டியைக் கிளப்பிச் சென்று விட்டார் அந்த ஆண். போக்குவரத்தும் அதிகமாக இருக்க, ஷீபாவும் சாலையை விட்டு இறங்கி ஓரமாக நின்று கொண்டாள்.

அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் சிவப்புக் குறியீடு விழ, இப்போது அவ்வளவாக பெரிய வாகனங்கள் கார், பேருந்து என இல்லாமல், இரு சக்கர வாகனங்களே சாலையில் நின்றிருந்தன. அவற்றின் இடையில் புகுந்து, சிதறியிருந்த ரூபாய் நாணயங்களையும், சில்லறைக் காசுகளையும், கீழே விழுந்து கிடந்த சில அட்டைகளையும், வாகனங்கள் ஏறியதில், நசிந்து போய் கிடந்த கைப்பையையும் எடுத்துக் கொண்டு சாலையின் ஓரம் ஓடி வந்தாள்.

சூர்யாவின் கடை நோக்கி சென்றவள், மேசை மீது சில்லரைக் காசுகளையும், கைப்பையையும் வைத்து விட்டு, மூச்சிறைத்தவாறு அமர்ந்து கொண்டாள்.

"என்னாச்சு ஷீபா ? " என்ற சூர்யாவிடம், சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, " அண்ணா ! ஒரு கார்ல போனவங்க, அவங்களோட கைப்பையை தவற விட்டுட்டாங்க " என்றாள்.

" சரி. இங்க டேபிள் மேல வெச்சிடு. யாராவது தேடி வந்தா குடுத்துடலாம் " என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க சென்று விட்டார் சூர்யா.

மதியம் உணவு வேளையின் போது, ஒரு பெண்மணி கடைக்கு எதிர்புறம் இருந்த சாலையின் அருகில் எதையோ தேடியபடி வந்தார். அவரை அடையாளம் கண்டு  கொண்ட ஷீபா, வேகமாக அவரிடம் ஓடிச் சென்றாள்.

" நீ காலையில எனக்கு பூ வித்த பொண்ணு தானே ? " என்றார் அப்பெண்மணி.

" ஆமாங்க. உங்க பர்ஸ் பத்திரமா இருக்கு. வாங்க " என்றவாறு சூர்யாவின் கடை நோக்கி விறுவிறுவென்று சென்றாள் ஷீபா.

சற்றே தயங்கியவாறு ஷீபாவின் பின் சென்றார் அப்பெண். நகரில் நடக்கும் பல திருட்டு, கொள்ளை, கொலைகட்கு சிறுவர் சிறுமியரை பகடையாக பயன்படுத்தும் செய்திகள் பலவற்றை கேள்விப்பட்டிருப்பதால், அவர் ஒருவித பயத்துடனே ஷீபாவின் பின் சென்றார்.

கடைக்குள் நுழைந்ததும் " அண்ணா ! இவங்க தான் கைப்பையை தவற விட்டவங்க " என்றாள் ஷீபா.

" இந்தாங்க மேடம். உங்க பை. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க" என்றவாறு கைப்பையை கொடுத்தார் சூர்யா.

பையை திறந்து பார்த்தவர், " எல்லாம் சரியா இருக்குங்க. ரொம்ப நன்றி " என்றவாறு வேகமாக சென்று விட்டார். சென்றவர், அருகிருந்த தானியங்கி பணம் எடுக்கும் எந்திரத்திற்கு சென்றார்.

சற்று நேரத்தில், மீண்டும் சூர்யாவின் கடைக்கு வந்த அப்பெண், " ரொம்ப நன்றிங்க. இந்த காலத்துல ஒரு ஏ.டி.எம் கார்டு கிடைச்சா, அதை தவறா பயன்படுத்த எத்தனையோ சந்தர்ப்பமும் வழியும் இருந்தும், நீங்க நியாயமா நடந்துக்கிட்டது பெருமையா இருக்குங்க. நான் உங்களை சந்தேகப்பட்டேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என்னுடைய முன்னாள் அனுபவங்கள் தான் என்னைய இப்போ சரி பார்க்க வைச்சது. இப்படி நான் 20,000 ரூபாய் தொலைச்ச அனுபவமும் உண்டு. ரொம்ப நன்றிங்க " என்றார்.

" நான் தப்பா எல்லாம் எடுத்துக்கலைங்க. நீங்க சரி பாத்துக்கிட்டது தான் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. உங்களோட இந்த பாராட்டெல்லாம் இந்த பொண்ணு ஷீபாவுக்கு தாங்க சேரணும். இந்த பொண்ணு தான் ரோட்டுல விழுந்ததை பத்திரமா கொண்டு வந்து என் கிட்ட ஒப்படைச்சது. அதை நீங்க கேட்ட போது நான் கொடுத்துட்டேன். அவ்வளவு தாங்க " என்றார் சூர்யா.

மலரேந்தி நின்றிருந்த வாடி வதங்கிய மலரை உச்சி முகர்ந்த அப்பெண், ஆதரவற்று நிற்கும் ஷீபாவிற்கு தான் ஆதரவாய் இருந்து, கல்வி அளித்து, அவள் வாழ்வில் மேம்பட வழிகோலுவதாய் உறுதியளித்துவிட்டு, ஷீபாவை உடனழைத்துச் சென்றார். அருகிருக்கும் காவல் நிலையத்திற்கு நேரே சென்ற அவர், ஷீபாவை பற்றியும் தன்னைப் பற்றியும் விபரம் கூறினார்.  அவர்கள், ஷீபாவை அருகிருக்கும் அரசினர் காப்பகத்தில் அவளை ஒப்படைப்பதாகவும், அவளுக்கு உதவுவதோ, கல்வி அளிப்பதோ, தத்தெடுப்பதோ எதுவாயினும், அங்கு வந்து  சட்டப்படி செய்து கொள்ள வேண்டுமெனவும் சொல்லி அனுப்பினர்.

ஷீபாவிற்கு நல்வாழ்வளிப்பதில் தீர்க்கமாய் இருந்த அவர் ஷீபாவிற்கு நம்பிக்கை அளித்து, அவளை விரைவில் தன்னுடனே அழைத்துப் போவதாக சொல்லி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார். ஏக்கம் பொதிந்த கண்களுடன் சாலையில் ஓடித் திரிந்த சிறுமி, கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் ஒளியெனப் பாய, ஒளிமயமான எதிர் காலத்தை நோக்கி செல்கிறாள்.

அதுவரை, பளீரென சுட்டெரித்துக் கொண்டிருந்த வானம், மேகப் போர்வை போர்த்திக் கொண்டு, மழை முத்துக்களை மண்ணில் வாரி இறைத்தது.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்க் மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

                                  - ஔவையார், மூதுரை.


குறிப்பு: இச்சிறுகதை பதாகை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

African doll made with newspaper.

My first try on making an African doll with newspapers.These are made using the newspaper rolls.
For the dress, I have used the tissue towel and colored them with watercolors.

Here is the detailed video tutorial from YouTube for making this African doll.

 https://www.youtube.com/watch?v=qbnicKoPsw4Linking this to

Beyond Grey Challenges - BGC#72 - ANYTHING GOES

Tuesday, October 6, 2015

Newspaper roll wall decor

Here is my wall decor made with recycled newspapers. 

I made some newspaper rolls using old newspapers. Then I glued the newspaper rolls. I glued a cardboard to the back, so that it will be easy to hang it to the wall.


 Then I used waste cardboard to make peacock cut-out. I made some flowers with paper and attached them too.


Now, a beautiful wall decor is ready.

Here are a few closeups....
Linking this to

Beyond Grey Challenges : BGC#72 - ANYTHING GOES

Saturday, October 3, 2015

வாசக நண்பர்களே ! உங்களுக்கோர் போட்டி !வருகின்ற பதினோராம் தேதி புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் வலைப்பதிவர் திருவிழா குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். வலைப்பதிவர் திருவிழாவினை முன்னிட்டு, வலைப்பதிவர் திருவிழா குழுவினர் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் நம் பதிவுலக நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். வலையுலக நண்பர்கள் பலரும் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்ட அனைவரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி, உங்களது கருத்துக்களின் மூலம் எங்களது படைப்புகளை மேலும் மெருகூட்டினீர்கள். உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.

இப்போது வாசக நண்பர்களான நீங்களும் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வெல்ல நல்லதோர் வாய்ப்பு. மொத்தப் பரிசுத் தொகை 10,000 ரூபாய்கள்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.


http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும்“போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 

போட்டிக்கான விதிமுறைகள் –

  •    யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address)இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்  •    ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை  இதே வரிசையில் தெரிவித்து     பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15)  தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது.  இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.   •           ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.   •           வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59 வரை அனுப்பலாம்.  •     மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.   •         இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.  •        விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

  •   வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல்முகவரி இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.


  •        மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.


  • போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

              இப்பதிவு கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது வலைப்பக்கத்திலிருந்து  எடுத்து இங்கே பகிரப்பட்டுள்ளது.


    நண்பர்களே ! போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள் !அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !

Friday, October 2, 2015

Altered book decor

Here is one more altered book.  I have altered an old event catalog from a community center. 
I started with folding the pages of the book. Then I colored them.Finally, I added some paper flowers, fabric flowers, pistachio shells for decorating.

 

For the cover, I attached  the cardboard from the cereal box and covered it. Then again, I used the cardboard strips to decorate the cover. Made a small flower out of crepe paper and  the leaves, again from the waste cardboard.

Done ! Here is the outcome.Linking this to


LESSology Challenge #51: It's reading time!
 
 

Thursday, October 1, 2015

வருக ! வருக !

அழகுத் தமிழில் முகம் பார்த்து
ஊக்கத்தினால் அகமகிழ்ந்து
அளவற்ற அன்பிற்கிங்கே
அடிமையாகி - நட்புகளை எம்
பதிவுவழி தேடி நிற்கும்
அன்புத் தமிழ் பதிவர் நாங்கள் !


 

வரவேற்கிறோம் ! தமிழ்ப் பதிவர்களை....

நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழாவுக்கு !

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்

பெண்கள் மீதான அமிலத் தாக்குதல் என்பது அவர்கள் காதலிக்க மறுத்த ஒரே காரணத்திற்காக என்று இத்தனை நாள் எண்ணியிருந்தேன். ஆனால், புது டில்லியில் உள்ள ஷெரோஸ் ஹேங் அவுட்(Sheroes Hangout) என்ற தேநீர் அங்காடி பற்றியும், அதை நடத்தும் அமில தாக்குதலுக்கு உள்ளான ஐந்து பெண்கள் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடூர சம்பவங்களை பற்றியும் படிக்கையில், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா , இவர்களும் மனிதர்கள் தானா அல்லது மாக்களில் இவர்கள் சேர்த்தியோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இந்த ஷெரோஸ் அங்காடி, " Stop Acid Attack " http://www.stopacidattacks.org/ இயக்கத்தினால் நடத்தப்படுகிறது. வீரர்களை heroes என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போல, வீராங்கனைகளை sheroes என்று குறிப்பிடும் விதமாகவே, இவ்வங்காடிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த அங்காடியை நடத்துவோர், ஐந்து பேர் கொண்ட குழு. நீத்து, ரூபா, சான்ச்சல் பஸ்வான், கீதா, ரீத்து ஆகிய ஐவரும் தான் இந்த அங்காடியை நடத்துகிறார்கள். இவர்கள் ஐவருமே, அமில வீச்சுக்கு ஆளானவர்கள். 
 இப்புகைப்படம் இவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

நீத்துவிற்கு மூன்று வயதாக இருக்கையில், அவரது தந்தையாலேயே அமில வீச்சுக்கு ஆளானவர். அமில வீச்சினால் இவரது கண் பார்வையையும் இழந்து விட்டார்.

ரூபாவின் இந்நிலைக்கு காரணம் அவரது மாற்றாந் தாய்.

ரீத்துவின் முகத்தை சிதைத்து, அவரது கனவு, கற்பனை, இலட்சியம் அனைத்தையும் அழித்தவர், முகமறியா ஒருவர்.

சான்ச்சல் பஸ்வான் உறக்கத்தில் இருக்கையில், போக்கிரிகளால் அமில தாக்குதலுக்கு ஆளானவர்.

ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தனது கணவராலேயே, அமிலம் வீசி சிதைக்கப்பட்டவர் கீதா.

இந்த தேநீர் அங்காடியின் சிறப்பு என்னவெனில், இது ஓர் தேநீர் அங்காடி மட்டுமல்ல, இங்கு புத்தகங்கள் வாசிக்க, ஓர் புத்தக அங்காடியும் உண்டு (Reader's Cafe).  

இங்கு, செயற்திறன் பட்டறையும் (Activism workshop) நடத்தப்படுகிறது. அமிலத் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களில் பலரும் எழுதப் படிக்க கூட தெரியாதவர்கள். இவர்களில் பலர் கணினி பயன்பாடு, கைபேசி பயன்பாடு போன்றவை அறியாதவர்கள் தாம். இந்த செயற்திறன் பட்டறையின் முக்கிய நோக்கம் என்னவெனில், இது போன்ற பெண்களுக்கு கணினி பயன்பாடு, கைபேசிகள் மற்றும் இன்னபிற தகவல் தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பளிக்கிறது.

இங்கிருக்கும் மற்றுமோர் அம்சம், கைவினைகள் கண்காட்சி மற்றும் விற்பனைப் பிரிவு. இந்தக் கண்காட்சியில், தாக்குதலுக்கு உள்ளான பெண்களின் கைவினைகள், அவர்தம் ஓவியங்கள், படைப்புகள், புத்தகங்கள், கையால் செய்யப்பட்ட நகைகள் போன்றவை  எப்போதும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருக்கும். இது தவிர, நாட்டிலுள்ள எவர் வேண்டுமானாலும், தத்தமது திறமைகளை இங்கு வெளிக்காட்டலாம். இதன் மூலம் கிடைக்கும் பணம், இந்த தேநீர் அங்காடியை நடத்த பயன்படுத்தப் படுகிறது.

இவர்களது வலைதளம் : http://sheroeshangout.com/
இவர்களது முகநூல் பக்கம் : https://www.facebook.com/SheroesHangout

இந்த தேநீர் அங்காடியில்  உணவு வகைகள் மற்றும்  பானங்கள் விற்கப்படுகின்றன. இவர்களது உணவு பட்டியலட்டையில் (menu card) உணவு மற்றும் பானங்களின் வகைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான விலைப்பட்டியல் கொடுக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் என்ன கொடுக்க விரும்புகிறார்களோ (Pay-what-you-want) அதைக் கொடுக்கலாம். இந்த அங்காடி செயல்பட 70 சதவீதத்திற்கும் மேலான பண உதவி, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளால் வழங்கப்படுகிறது.

இப்பெண்களின் முக்கிய நோக்கம், மக்களிடையே அமில தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான்.

அமிலத்தில் ஆடிய அனிச்சங்கள்
உரு தொலைத்த உன்னதங்கள்
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும்
விடாது கைப்பற்றிக்  கொண்டு
அழகென்பது உருவிலல்ல 
நல்ல உள்ளத்தில் தானென
உலகிற்கே நம்பிக்கைக்கு உதாரணமான
உயர் ஜீவன்கள் !

தகவல் திரட்ட உதவிய வலைப்பக்கங்கள்:உறுதிமொழி

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ வகை-(3)  பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது  என்று உறுதிமொழி அளிக்கிறேன்.

 இப்படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்.