blank'/> muhilneel: விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் என்ன?

Monday, September 9, 2013

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணம் என்ன?







பாலவிநாயகருக்கு திடீரென விஷ்ணுவின் சுதர்சண சக்கரத்தின் மீது ஆசை வந்து விட்டது. விநாயகர் அதை ஒரு பொம்மை என்று நினைத்து விட்டார். ஒரு சமயம் விளையாட்டாக எடுத்து அதை விழுங்கிவிட்டார். விஷ்ணுவிற்கு  என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படி விநாயகரிடமிருந்து சக்கரத்தை திரும்பபெறுவது என்று பகவான் விஷ்ணு சிறிது நேரம் யோசித்தார். 


விநாயகரை அதிகமாக சிரிக்க வைத்தால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கும் போது சக்கரம் வெளியில் வந்து விழும் என்று எண்ணிய விஷ்ணு,  தனது இரண்டு காதுகளையும் நான்கு கைகளால் பிடித்துக் கொண்டு குனிந்து நிமிர்ந்து பலமுறை தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார்.இதை பார்த்தவுடன் விநாயகர் பலமாக சிரிக்க ஆரம்பித்தார். உடனே சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. விழுந்தவுடன் விஷ்ணு அதை எடுத்து கொண்டார்.

ஆதனால்தான் நாம் எல்லோரும் தோப்புக்கரணம் போட்டு  விநாயகரை வழிபடுகிறோம்.

நன்றி,
velanaimahakanapathi.com

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on muhilneel.blogspot.com.
Content from guestscounter.com, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion.

உங்கள் தளம் திறக்க முடியவில்லை... மேலே உள்ளது போல் வருகிறது... uestscounter.com-->ஏதேனும் இருந்தால் தளத்திலிருந்து எடுத்து விடவும்... கவனிக்கவும்... நன்றி...

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது இனிய வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா. தங்களுக்கும் எனது இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

எனது தளத்தில் இருந்து வரும் Malware attack குறித்து அறியத்தந்தமைக்கு நன்றிகள் ஐயா. stats counter நீக்கி விட்டேன்.இப்போது திறக்க முடிகிறதா என்று சொல்லுங்கள் ஐயா.

Muthu said...

சுவையான கதையுடன் விளக்கம்!

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment