blank'/> muhilneel: விநாயகருக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பது ஏன் ?

Thursday, September 5, 2013

விநாயகருக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பது ஏன் ?




விநாயகப் பெருமானின் இரண்டு தந்தங்களில் ஒரு தந்தம் உடைந்திருப்பதை அறிவோம். அது ஏனென்று தெரியுமா ? 

ஒரு தந்தம் உடைந்திருப்பதனால், அவர் ஏகதந்தா விநாயகர் என்றழைக்கப் படுகிறார். ஏகதந்தா என்றால் ஒற்றைப் பல் என்று அர்த்தம்.அவரது ஏகதந்தா அவதாரத்தைப் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன.

கதை 1:


பத்ம புராணத்தின்படி, சிவபெருமானைக் காண, அவரது சிஷ்யரான பரசுராமர் கைலாயம் சென்றாராம். அப்போது சிவபெருமான் தவத்தில் இருந்ததால், பரசுராமரை விநாயகப் பெருமான் தடுக்க, அவர் தனது கோடாரியால் விநாயகரைத்  தாக்கி விட்டார்.

அந்தக் கோடரி சிவபெருமானால் பரசுராமருக்கு வழங்கப்பட்டது. அதை அறிந்த விநாயகர், பரசுராமரைத் தடுக்காததால், கோடாரி வீச்சில் ஒரு தந்தம் உடைந்து விட்டது. அன்றிலிருந்து  விநாயகர் ஏகதந்தா என்று அழைக்கப்படுகிறார். பின்னர் பரசுராமர் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கதை 2:


ஒரு விருந்தில், விநாயகப் பெருமான் லட்டுகளையும், கொழுக்கட்டைகளையும் அதிகமாக உண்டு விட்டு, க்ரௌஞ்சா என்ற அவரது சுண்டெலியின் மீது ஏறி வர, வழியில் ஒரு பாம்பினைக் கண்ட சுண்டெலி, பயத்தினால் விநாயகரை அப்படியே  கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது. இதனால் அவரது வயிறு வெடித்து, உண்ட லட்டுகளும், கொழுக்கட்டைகளும் வெளியே சிதறின. 

பாம்பினைப் பிடித்து தன வயிற்றை  இறுகக் கட்டினாராம் விநாயகர். இதைக் கண்ட சந்திரக் கடவுள் சிரிக்க, கோபம் வந்த விநாயகப் பெருமான், தனது தந்தத்தினை உடைத்து சந்திரன் மீது எறிந்து " இனி நீ முழு ஒளியுடன் எப்போதும் ஜொலிக்க முடியாது" என்று சாபமளித்தார். எனவே தான் அவருக்கு ஒரு தந்தம் உடைந்திருக்கிறது . இதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது  மக்கள் நிலவைப் பார்ப்பதை தவிர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.



கதை 3:


வியாசருக்காக  தனது தந்தத்தினை உடைத்து,  மகாபாரதத்தின் ஓர்  அத்தியாயத்தை விநாயகர் எழுதியதாக சொல்லப்படுகிறது.


தன் பக்தர்களுக்காக கணபதி எதையும் தியாகம் செய்வார் என்பதையே ஒற்றை தந்தம் குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.அவரை வணங்கி வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறுவோம்.

நன்றி, tamil.boldsky.com

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை...

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment