blank'/> muhilneel: பேனா...

Tuesday, July 16, 2013

பேனா...




Ball-Point Pen & Refill

             மையூற்று எழுதுகோல் (Fountain Pen),பந்துமுனை எழுதுகோல் (Ball-Point Pen), ஹீரோ பேனா  (Hero Pen), ஜெல் பேனா (Gel Pen), பார்க்கர் பேனா  (Parker Pen)  என்று  எத்தனையோ வகையான பேனாக்களை
Micro tip Pen
படிக்கும் காலத்தில் பயன்படுத்தியதுண்டு. பள்ளிகளில் தெளிவான  அழகான கையெழுத்திற்கு  மையூற்றுப் பேனாக்களே  சிறந்ததென்று  ஆசிரியர்கள்  அவற்றை வைத்தே எழுதிப் பழகச் சொல்வர். இன்னும் பல ஆசிரியர்கள்,  பரீட்சைகட்கு  பந்துமுனை பேனாக்களை பயன்படுத்த வேண்டாமென்றும் அறிவுறுத்துவர் .







Ink Pen
Hero Pen

                                  படிக்கிற காலத்தில், அதிகமாகப் பயன்படுத்தியது, மை  பேனாக்களும், பந்துமுனைப் பேனாக்களும்  மட்டுமே. பார்க்கர் பேனா, ஹீரோ பேனாக்கள் எல்லாம் குறைந்த அளவே மை பிடிக்கும். ஜெல் பேனாக்களின் மை விரைவாக தீர்ந்து போய்விடும். எனவே, மை பேனாக்களையே அதிகம் பயன்படுத்தியதுண்டு.
Gel Pen

Feather Pen

                   சில சமயங்களில், பறவைகளின் இறகின் நுனியில் மை தொட்டு எழுதிய எழுதிய அனுபவமும் உண்டு.அதில் எழுதும் போது, எழுத்துக்கள் ஏதோ  Stencil (நகல் எடுக்க உதவும் உள்வெட்டுத் தகடு)  வைத்து  எழுதியது போல்  இரட்டைக் கோடுகளாய் வரும்.மையினை  தனியாக  எடுத்துக் கொண்டு, பறவையின்  இறகின்  நுனியில் மை தொட்டு எழுதுவதும் இனிமையானதோர் அனுபவமே.





Nib
       பேனாக்களில் மை தீர்ந்துவிடில், அருகில் அமர்ந்திருக்கும் சக மாணவரிடம், அவர்களது பேனாவிலிருக்கும்  மையினை சிறிது மேசையின் மேல்  உதறச்  சொல்லி, நிப்பைக் கொண்டு மையை உறிஞ்சி எழுதியதும் உண்டு. சில சமயங்களில், மை தீர்ந்தால், சிறிது தண்ணீர் ஊற்றி  எழுதியது கூட உண்டு. ஏற்கனவே ஒட்டிக் கொண்டிருக்கும் மையுடன், நீர் சேர்த்து எழுதும் போது , எழுத்துக்கள் நன்கு பளிச்சென்று இல்லாமல், சற்று மங்கி இருந்தாலும், ஏதோ அவசரத்திற்கு சமாளிக்க ஏதுவாக இருக்கும்.



Ink-Filler
                         இன்றோ , எழுதும் பழக்கமே குறைந்து கொண்டே வருகின்ற ஒன்றாகி வருகிறது. கணிப்பொறி (Computer), கைபேசி (Cellular Phone), மடிக்கணினி  (Laptop), iPad,iPhone, Tablet PC என்று    தொழில் நுட்ப  வளர்ச்சி  தகவல்களை விரல் நுனியில் கிடைக்கச் செய்கின்றன. தகவல் பரிமாற்றமும் எளிதான ஒன்றாகி விட்டது. தகவல்  தொழில்நுட்பத் துறையும் நாளுக்கு நாள், புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது. தந்தி சேவை சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது நாமனைவரும் அறிந்ததே. 



Parker Pen



           நாம் நினைவில் (Memory) ஏற்றிக் கொள்கிறோமோ இல்லையோ, கணினியின்  நினைவகத்தில் ( Computer Memory) ஏற்றிவிட்டு  அதைப் பற்றி மறந்து விடுகிறோம். இன்று கல்வி முறை, பாடத் திட்டங்கள், தேர்வு முறை, மதிப்பீடு  என அனைத்துமே கணினி  மயமானது நாமனைவரும் அறிந்ததே. காலப்போக்கில், பேனாக்கள், பென்சில்கள் போன்ற எழுது பொருட்களே இல்லாமல் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை !!!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன... பறவைகளின் இறகின் நுனியில் மை தொட்டு எழுதிய அனுபவம் இல்லை...

முடிவில் சொன்னது வருங்காலத்தில் நடக்கும் என்றே தோன்றுகிறது... ஏனென்றால் காகிதம் இருந்தால் தானே...? !

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும்,ஊக்கத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment