blank'/> muhilneel: எது வெற்றி?

Sunday, July 14, 2013

எது வெற்றி?





"   எண்ணிய எண்ணியாங்கு எய்துதல்  "  

                இதுவே வெற்றி என்று கொள்ளப்படுகிறது. இதனை, மனதினில் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டயினும் அடைவது, உள்ளக் கனவுகளை நனவாக்குவது, எதிலும் முன்னணியாய், பலருக்கு முன்னோடியாய் இருத்தல் என்றும் கொள்ளலாம்.
                  இலக்கினை  ஒரே முயற்சியில் எட்டுதலும் வெற்றி தான். அதேபோல், தோல்விகள் ஏற்படினும், மேற்கொள்ளும் முயற்சிகளில் தொய்வேற்படாது, மனம் தளராது, விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும்  இலக்கினை எட்டிப் பிடித்தாலும் வெற்றி தான்.


                 ஆக, வெற்றி என்பது,
  •  செய்ய எண்ணியதை செம்மையாகச் செய்து முடித்தல். 
  •   படிப்படியான முன்னேற்றம். 
  •  " பல தொழில் கற்றவன் ஒரு தொழிலும் செய்யான்" ( Jack of All trades, but Master  of  None ) என்றில்லாமல், ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற்றம் கண்டு , தனித்துவத்துடன் விளங்குதலே ஆகும்.  
  • நினைத்த இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது இருத்தல். விவேகானந்தரின் கூற்றுப்படி,"Arise, Awake and Stop not till the Goal is Reached" 
  • எத்துனை முறை  தோற்றாலும், மனம் தளராது, அடுத்த முயற்சியை புத்துணர்வுடனும், தன்னம்பிக்கையுடனும் மேற்கொள்வது. 
  •  முயற்சி மேற்கொள்வதன் நோக்கம் "வெற்றி" . வெற்றி பெறத் தேவை "உழைப்பு" . உழைப்பிற்கு தேவை " உற்சாகம் ". எனவே, மேற்கொள்ளும் காரியம் எதுவாயினும் உற்சாகத்துடன் ஈடுபடுதல்.
                                  
வெற்றி ! - அதுவே மனதின் நோக்கம்
அதற்குத் தேவை - தளர்விலா ஊக்கம்
என்றும் கூடாது - தோல்வியால் ஏக்கம்
படிப்படியான தொடர் வளர்ச்சி - அதுவே ஆக்கம் !!! 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... ஆர்வம் / ஈடுபாடு தான் வேண்டும்... ஒவ்வொன்றையும் சொன்ன விதம் அருமை... பாராட்டுக்கள்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் கிடைப்பின் :

முந்தைய பகிர்வு : வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை?

http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_15.html

அதற்கு இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் அன்பான பாராடுதல்கட்கும், மேலான ஆதரவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

தங்களது பதிவுகளை நிச்சயம் படிக்கிறேன். சுட்டிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

purusho thaman said...

இைறயகால மாரா எபதமயாைதேய இைல. தா, சவா அறாக, மாரா யாக பயபத ேவய படாைவ ைவ கைத மைறறாக. மாைப எபாக காறாக. க எனமாைபட கவ ைறததா? யைல. க லேர படாைவ சயாக அறாக.

ெசைன நக ஆக இைணயாக ெபக ெதபறாக. ப, ப தமாக சாைலக க ெபகறப, நடதப, வாகனக பயதப இறாக. இ, இர வைர ட ற. இளெபகெபபா அழகாக ெதறாகஎபைதட, கவயாக தகைள ெதறாக.

purusho thaman said...

இைறயகால மாரா எபதமயாைதேய இைல. தா, சவா அறாக, மாரா யாக பயபத ேவய படாைவ ைவ கைத மைறறாக. மாைப எபாக காறாக. க எனமாைபட கவ ைறததா? யைல. க லேர படாைவ சயாக அறாக.

ெசைன நக ஆக இைணயாக ெபக ெதபறாக. ப, ப தமாக சாைலக க ெபகறப, நடதப, வாகனக பயதப இறாக. இ, இர வைர ட ற. இளெபகெபபா அழகாக ெதறாகஎபைதட, கவயாக தகைள ெதறாக.

Post a Comment