blank'/> muhilneel: April 2013

Monday, April 22, 2013

காமராஜர் ஒரு சகாப்தம்



Photo: "காமராஜர் ஒரு சகாப்தம்"- "காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.

அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.

காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

" நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.

இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது." 



"காமராஜ் முதலமைச்சராக இருந்த போது மதுரைக்கு சென்றார். இரவு விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையிலோ இரவு மின்சாரம் இல்லை. ஊழியர்கள் வந்து பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். காத்திருந்த காமராஜ், " கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்றார்.

அறைக்குள்ளிருந்த கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டுவந்து போட்டார்கள்.

காமராஜ் படுக்க வந்தார். கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

" நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று போலிஸ்காரரை அனுப்பிவைத்த காமராஜ் சில நொடிகளில் உறங்கிவிட்டார்.

இந்த எளிமை உலக வரலாற்றில் எந்த மக்கள் தலைவரிடமும் காண்பது அரிது."


Source: Facebook

எளிமையின் திரு உருவம்




காமராஜர் முதல்வராக இருந்தபோது ஓர் அதிகாரி அவரிடம், 'குந்தா அணைக்கட்டை மலையைக் குடைந்து அருமையாகக் கட்டியிருக்கீங்க! இதை நமது வாயால் சொல்வதை விட, திரைப்படமா எடுத்துக் காண்பித்தால் பாமர மக்களுக்குக்கூட நன்றாகப் புரியும்!' என்றார்.

அதற்கு காமராஜர் 'சரி, அதற்கு எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார்.

அந்த அதிகாரி, 'ஏறக்குறைய மூன்றூ லட்ச ரூபாய் வரை செலவாகும்' என்றார்.
காமராஜரோ, 'அடப்பாவிகளா...மூன்று லட்சமா? இந்த மூன்று லட்சம் ரூபாய் இருந்தால், நான் இன்னும் பத்து ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி விடுவேன். புள்ளைங்க படிக்க வழியைக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி அரசாங்கம் செய்ததை எனது சாதனைனு வெளிச்சம் போட்டுக் காட்டப் பாக்குறியா...போ...போ...'என்று மறுத்து விட்டார்.

 Source: Facebook.com

Friday, April 5, 2013

விடுகதைகள்

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்


 மஹாபலிச் சக்கரவர்த்தி  99 அசுவமேத யாகம் செய்து முடித்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்கிறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்க­ுத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார்.­அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில்­ சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியரு­க்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.


 பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை

கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு­குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை

பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்

ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான்

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..



Source: Facebook


Wednesday, April 3, 2013

உலக வெப்பமயமாதல்





         



பூமியின் சராசரி வெப்பநிலை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டே வருகிறது.இதனால், பூமியின் காலநிலைகளில் நிரந்தரமானதொரு மாற்றம் ஏற்பட்டுவிடுமென்று நம்பப்படுகிறது. இதுவே உலக   வெப்பமயமாதல் என்றழைக்கப் படுகிறது.புவி வெப்பமடைதல் தொடர்பான காலநிலை மாற்றங்கள் மீதான அறிவியல் கருத்தொருமிப்பு யாதெனின்பூமியின் சராசரி வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில் 0.4 ° சி முதல் 0.8 ° சி வரை அதிகரித்துள்ளது என்பதாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளில், படிம எரிபொருட்களை எரித்தல், காடுகளை அழித்து வெற்று நிலங்களாக்குதல்,விவசாயம்,நிலம் தீர்வு போன்ற செயல்களால் கரியமில வாயு (Co2 ) , வெப்ப வாயுக்கள், பைங்குடில் வாயுக்கள் எனப்படும் க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் (Green House Gases) இவற்றின் அளவு  அதிகரித்தபடியால், இவையே உலக வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணங்களாக அமைந்து விட்டன.வருகின்ற 2100 ஆம் ஆண்டின் வாக்கில், சராசரி உலக வெப்பநிலை 1.4 °C முதல் 5.8 °C வரை அதிகரிக்கக் கூடும்  என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.உலக வெப்பமயமாதலால், துருவ பனி முகடுகள் உருகி,கடல் நீர் மட்டம் உயருதல்,பயங்கர புயல்கள் ,பிற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் .


Source:

http://www.livescience.com/topics/global-warming/page-7.html