blank'/> muhilneel: November 2012

Friday, November 30, 2012

குப்பை - சிறுகதை



அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, பள்ளிக்கோடத்துக்கு கிளம்பு.” என்றாள். அவள் குரலைக் கேட்டதும், கண் திறந்து பார்த்த மணிமாறன், “அம்மா, எனக்கு புது நோட்டும், பென்சிலும் வேணும்மா. நான் பேப்பர்ல எழுதி, நோட்ல ஒட்டி வெச்சிருந்தத டீச்சர் பாத்துட்டாங்க, திங்கட்கிழமை வரும் போது, புது நோட்டோட வரணும், இல்லைன்னா கிளாஸ்க்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாங்கம்மா” என்றான். “சரிப்பா, வாங்கித் தர்ரேன்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். இன்று முதலாளி அம்மாவிடம், சிறிது பணம் கேட்டு வாங்க வேண்டும் என்றெண்ணியவாறு வேகமாக நடந்தாள்.  
அந்த பங்களாவின் கேட்டினைத் திறந்து கொண்டு, வீட்டின் பின்கட்டு வழியாக சமையற்கட்டினை அடைந்தவளை, கோபத்துடன் எதிர்கொண்டாள் எஜமானி அம்மாள் சுகன்யா. “ வங்கம்மா, வாங்க. இப்பத்தான் வர்றீங்களா? காபி குடிங்க” என்று நக்கலாய், அவள் வேலைக்குத் தாமதமாய் வந்ததை இடித்துரைத்தாள். “இல்லீங்கம்மா……..” என்று ஆரம்பித்த ராமாயியை,   “ வேலைக்கு   வர்ற நேரத்தைப் பாரு. ஆறு மணிக்கு வரணும்னு சொல்லி இருக்கேண்ல, இப்ப மணி ஆறரை ஆகப் போகுது. இனிமேல் வேலையை ஆரம்பிச்சு, எப்ப முடிக்கறது??? சீக்கிரம் ஆரம்பி “ என்று சிடுசிடுத்து விட்டுச் சென்றாள்.
பரபரவென்று அங்கு குவிந்திருந்த வேலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் செய்ய ஆரம்பித்தாள் ராமாயி. பாத்திரங்கள் துலக்கி, வீடு முழுவதும் பெருக்கி துடைத்து விட்டு, கொல்லைப் புறத்தில் மலையென குவித்து வைக்கப் பட்டிருந்த துணிகளை எல்லாம் துவைத்து காயப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். நான்கு மணிநேர ஓய்வில்லா வேலைகட்குப் பின், அப்பாடா என்று அயர்ந்து ஓரமாய் அமர்ந்தவளை, சுகன்யாவின் அதட்டும் குரல் விரட்டியது. ”வேலை எல்லாம் முடிஞ்சதா?? மாடியில சின்னையா ரூம் ரொம்ப தூசியா இருக்கு, அதைப் பார்த்து பெருக்கி சுத்தம் பண்ணி வை. வேண்டாதது எல்லாம் ரூம் வாசல் கிட்ட இருக்கற ஷெல்ஃப்ல இருக்கு. ரூமை கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணிட்டு, தேவை இல்லாததுன்னு ஷெல்ஃப்ல இருக்கறதெல்லாம் கொண்டு போய் தெருவோர குப்பைத் தொட்டில போட்டுடு” என்று கட்டளையிட்டாள்.
எஜமானி அம்மாள் ஏவலிட்ட பணிகளை செய்ய எத்தனித்தாள். அவளால் செய்ய இயலவில்லை. ஓய்வின்றி வேலை செய்தவளுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. ”அம்மா, பசியாயிருக்குங்க. பழையது இருந்தா சாப்டுட்டு செய்யட்டுங்களா ??” என்றாள் ராமாயி. “சரி…சரி.. அந்த அடுப்பு மேடைக்கு கீழ இருக்கற பழைய சாதத்த சாப்டுட்டு வேலைய பாரு” என்று கூறி விட்டுச் சென்றாள். சாதத்தினை எடுத்து வந்து, ஓர் ஓரமாய் அமர்ந்து உண்டு விட்டு, பாத்திரங்களை துலக்கி வைத்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பினாள்.
மாடிப்படி ஏறி, அந்த அறையைத் திறந்தவளுக்கு மலைப்பாக இருந்தது. ஆம்….. அறை முழுவதும், புத்தகங்களும், பேப்பரும், பேனாக்களுமாய் இறைந்து கிடந்தன. சாப்பிட்ட தட்டுகளும்,காபி தம்ளர்களும் டேபிளின் மீது அப்படியே கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்து சீர்படுத்திவிட்டு, அறையினை சுத்தம் செய்தாள். பின், இறுதியாக, எஜமானி அம்மாள் சொன்ன வேண்டாதவற்றை எடுத்துப் பார்த்தாள். அது முழுவதும், சில பக்கங்களே எழுதிய நோட்டுக்களும், எழுதாத முழு நீள தாட்களும், பேனாக்களும், பென்சில்களுமாய் நிறைந்திருந்தது. “ இவ்வளவு இருக்கு. இது எல்லாமே  வேண்டாததா என்ன?“ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவற்றை எடுத்து, குப்பைக் கூடையில்  போட எத்தனித்தாள். அப்போது தான் அவள் அதை கவனித்தாள், அதில் நிறைய நோட்டுகள் சில பக்கங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு இருந்தன. மற்ற பக்கங்கள் எல்லாம் ஏதும் எழுதா வெள்ளைத் தாட்களாகவே இருந்தன. “ இவ்வளவு பக்கங்கள் இருக்கே, இதைப் போயி குப்பைல போடச் சொல்றாங்களே. நம்ம பிள்ளைக்கு வேணும்னா கேட்டு எடுத்துட்டு போகலாமா “ என்றெண்ணியவள், அவற்றை அள்ளிக் கொண்டு கீழே வந்தாள்.
“அம்மா, இதிலே எழுதாத நோட்டுகள், கொஞ்ச பக்கம் மட்டும் எழுதுன நோட்டுகள் எல்லாம் நிறைய இருக்கும்மா” என்றவளை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தாள் சுகன்யா. “ அதான், எல்லாம் வேண்டாம்னு தான எடுத்து வெச்சிருக்கு. குப்பைல எடுத்து போட வேண்டியது தானே, அதை விட்டுட்டு என்ன பேசிட்டு இருக்க?? ” என்றதட்டினாள் சுகன்யா. “சரிங்கம்மா” என்று கூறிவிட்டு, ஏதோ கேட்க எத்தனித்தவள், ஏதாவது கேட்டால், மீண்டும் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்றெண்ணி மவுனம் ஆனாள்.
                          குப்பைகள் என்று அவர்கள் ஒதுக்கியவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், “ அவங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்கள்ல, நாம இதுல இருக்கற நல்ல நோட்டுப் புத்தகங்கள நம்ம பிள்ளைக்கு எடுத்துகிட்டா என்ன….இவங்களும் நான் நோட்டு வாங்க பணம் கேட்டா, இன்னைக்கு குடுக்கப் போறதில்லஎன்றெண்ணியவள் கேட்டின் அருகில் அமர்ந்து, தன் மகனுக்கு பயன்படும் என்று தோணிய நோட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். இதனை தற்செயலாக கவனித்துவிட்ட சுகன்யா, விறுவிறுவென்று ராமாயியிடம் வந்தாள். “என்ன பண்ற இங்க?” என்று கேட்டுவிட்டு, ராமாயியின் பதிலுக்குக்கூட காத்திராமல்,  “ வீட்டிலிருந்து  என்ன திருடிட்டு போகப் பாக்கற? ” என்று காரசாரமாய் கத்தத் துவங்கி விட்டாள். அவ்வளவு நேரம் அவளிட்ட ஏவல்கட்கும், அதட்டல்கள் எதற்கும் பேசாது, வேலைகளை கவனித்து வந்த ராமாயி, “அம்மா, கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நீங்க சுத்தப் படுத்த சொன்னீங்க, நான் செஞ்சேன். அங்க, உபயோகமான பொருட்கள் நிறைய குப்பைல கிடந்தது. உங்க கிட்ட சொன்னதுக்கு, அதெல்லாம் குப்பைல போடச் சொல்லீட்டிங்க. நான், அதில என் பிள்ளைக்கு பயன்படலாமேனு தோணுன பொருட்கள குப்பைல இருந்து எடுத்தேன். எதையும் சந்தேகத்தோடயும், அதிகாரச் செருக்கோடயும் பாக்கற நீங்க, முதல்ல உங்க மனச சுத்தப் படுத்திக்கோங்க. உங்க கிட்ட இனி நான் வேலை பாக்கறதா இல்ல. நான் வரேன்என்று கூறி விடுவிடுவென்று வெளியேறினாள் ராமாயி.


Thursday, November 29, 2012

Developing and Executing Perl

         Perl is an interpreted language.So, no compilation is needed.
                   An interpreted language is a programming language that is compiled into machine readable code at the moment it is run by the languages interpreter. Examples of interpreted languages are Perl, PHP, Ruby, and Python.This is in contrast to a compiled languages like C, C++, or Java. These languages are pre-compiled or compiled into machine readable code once by a language compiler. This creates an executable in the machine's native language that can then be run many times.
                     To use Perl, one should create a text file containing the Perl program.This file can be created using any text editor available in the system.In order to  designate them as perl scripts, the file names should have an extension ".pl"

             For example,the perl file can be saved as firstprogram.pl

         This file can be executed on the command prompt as

                               c:/>  perl  firstprogram.pl
This command will display the error messages in the code if any or the code will be executed.

                     The basic output in Perl is obtained using the Print command.The print command echos the string and expressions on the screen.

                                  Print      " My first Perl program \n";

  • The  string constants are represented using double quotes (" ").
  • The  newline character prints the output in a new line (\n).
  • The semi-colon indicates the   end of Perl command.Each and every Perl statement  should be terminated with a semi-colon.

The output of the above given perl code will be

                         My first Perl program

Since we have specified to be printed on a new line (\n), the output will be printed on a new line.

Perl - Introduction

               Perl is the acronym for Practical Extraction Report Language.Perl was introduced in 1987 by Larry Wall. Perl is a UNIX based language. Perl is a high-level, interpreted, general-purpose and dynamic programming language.Perl is Open Source software, licensed under its Artistic License, or the GNU General Public License (GPL)
                 Perl Code is portable.When starting with Perl, we have to locate the path of the perl library.So,we use
                            # /usr/bin/perl
In the LINUX/UNIX system, we can locate perl using whereis command. This command returns, /usr/bin/perl. This is used as the first line of the source code.

Downloading and Installing Perl:
              Perl runs on over 100 platforms.The UNIX and Mac OS/X Operating Systems have Perl already Installed.Windows does not have Perl installed by default. ActiveState Perl has binary distributions of Perl for many platforms. This is the simplest way to install the latest version of Perl.The ActivePerl can be downloaded from http://www.activestate.com/activeperl/downloads .

               Perl for Windows:
                                 
  • ActiveState Perl has binary distributions of Perl for Win32 (and Perl for Win64).
  • Strawberry Perl: A 100% Open Source Perl for Windows that is exactly the same as Perl everywhere else; this includes using modules from CPAN, without the need for binary packages. Help is available from other Windows Perl developers on the #win32 irc channel on irc.perl.org
  • DWIM Perl for Windows: A 100% Open Source Perl for Windows, based on Strawberry Perl. It aims to include as many useful CPAN modules as possible. It even comes with Padre, the Perl IDE

Source:
http://www.perl.org/get.html




Monday, November 19, 2012

Kamarajar - Rare Pictures Collection



Kamarajar with C.N.Annadurai

Kamaraj with pre Independence movement leaders of tamilnad


Kamarajar - Russia visit

Kamarajar with Jawaharlal Nehru

Kamarajar with Sarvapalli Radhakrishnan & Indira Gandhi



Kamarajar with Queen Elizabeth

Kamarajar School Photo - Kamaraj was initially enrolled in the Enadhy Nayanar Vidyalaya elementary school, and later in  Kshatriya Vidyasala.

Sivaji Ganesan with K.Kamaraj



K.Kamaraj with Moraji Desai

K.Kamaraj with E.V.Ramasamy Periyar


Kannadasan with Kamarajar



Kamaraj with his Ministers


 K.Kamaraj's funeral Video


I express my heartfelt Thanks to the people who had collected these rare images of Kamarajar and protect them as a treasure.

Sources:
kamarajar.blogspot.com
http://pixelsindia.blogspot.com
http://www.facebook.com/pages/Perunthalaivar-Kamarajar-Professionals-Forum/143830179023283

Sunday, November 18, 2012

பாசம்- சிறுகதை


         வழக்கமாக விளையாட  வரும்போதெல்லாம், தன் நண்பர்கள்  பட்டாளத்துடனே அந்த மைதானத்திற்கு  வரும் இராசேந்திரன், அன்று  சற்று முன்னதாகவே வந்து  விட்டான். அந்த பசுஞ்சோலை கிராமத்தில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்கும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது, ஊருக்கு எல்லையாக இருந்த அந்த பொட்டல் காடு தான். இராசேந்திரன், வீட்டிலிருந்து சந்தோஷமாய் குதித்து விளையாடியபடி அந்த பொட்டல் காடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில், அவனைக் கண்ட பக்கத்து வீட்டு சிவகாமி பாட்டி “என்னப்பா, விளையாட கிளம்பிட்டியா ? பாத்து பத்திரமா போய்ட்டு வா“ என்றவரிடம் “சரி பாட்டி“ என்று பதிலளித்துவிட்டு துள்ளி ஓடினான்.
          வழிநெடுக தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த கடலையை கொறித்துக் கொண்டே வந்தவனது கவனத்தை, ஓர் சிறு முனகல் சத்தம் ஈர்த்தது. அவன் சட்டென்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கிருந்து சத்தம் வந்ததென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெதுவாக திரும்பி நடக்கத் தொடங்கியவனுக்கு, மீண்டும் அக்குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். சத்தம் அங்கு அருகிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் இருந்து வருவதை உணர்ந்து, அருகில் சென்று பார்த்தான். அங்கோர் மேசையின் அடியில், சில மண் பானைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.பானைகள் மெல்ல ஆடுவதைக் கண்ட அவன், மெல்ல ஒவ்வோர் பானையாக எடுத்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.
                வெளி உலகே அறியாது, சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை உணராது, அளவிலா ஆனந்தத்துடன் நான்கு நாய்க்குட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் ஏறி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனது கண்களில் ஆர்வமும், மனதில் மகிழ்ச்சியும் நிரம்பியது. சில நிமிடங்கள் தனைமறந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவற்றை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. சுற்றிலும் பார்த்தவனுக்கு, அங்கோர் கோணிப்பை கிடப்பது தெரிந்தது. அதை எடுத்து வந்தவன், ஒவ்வோர் நாய்க்குட்டியாய் எடுத்து பையினுள் போட்டான். அவன் தூக்கியதும், ஒவ்வொரு குட்டியும் மெல்லிய முனகலுடன் அவனது கரங்களில் தஞ்சமடைந்தன. பின், அலுங்காமல் குலுங்காமல் அந்தக் கோணிப் பையை தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான் இராசேந்திரன்.
            வீட்டிற்குள் நுழையும் போதே “அம்மா!!!” என்றழைத்தவாறு வந்தவனை, எதிர்கொண்டார் அவனது தந்தை. “ அம்மா கிராமத்து எல்லையில் இருக்கிற எல்லையம்மன் கோவிலுக்கு போயிருக்கிறார் அப்பா, வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்” என்றார். எப்போதும் வீட்டிற்குள் நுழையும் போதே, அவனது வருகைக்காக காத்திருந்து, வந்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உண்ண வழங்கும் தாய் அன்று வீட்டில் இல்லாதது, அவனுக்கு சற்று வருத்தமாகவே இருந்தது.  இராசேந்திரனின் கையில் இருந்த கோணிப்பையை கவனித்த அவனது தந்தை, “ என்னப்பா அது கோணிப்பையில?” என்றார். “நாய்க்குட்டிகள் பா. அந்த பொட்டல் பக்கத்துல இருக்கிற தண்ணீர்ப் பந்தல்ல இருந்தது. பார்க்க ஆசையா இருந்தது. எடுதுட்டு வந்தேன் பா “ என்றான். “சரி, முகம் கழுவிட்டு வா. பால்  ஊற்றித் தருகிறேன். நீ குடித்துவிட்டு, நாய்க் குட்டிகளுக்கும் கொஞ்சம் எடுத்து வை” என்றார் தந்தை. தந்தை கொடுத்த பாலைக் குடித்து விட்டு, குட்டிகளுக்கும் பால் எடுத்து வைத்தான். அவை குடிக்கும் அழகினை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் அதில் ஏனோ லயிக்கவில்லை.
  வாசற்படியில் வந்தமர்ந்த இராசேந்திரன், கன்னத்திற்கு தன் கைகளால் முட்டுக் கொடுத்து அமர்ந்து, தன் தாய் வருகிறாளா  என்று வீதியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது, கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டான். மணி ஏழரை அடித்தது. வீட்டினுள் வந்து, சிறிது தண்ணீர் அருந்தி விட்டு, மீண்டும் வாசலுக்கு சென்றான். அப்போது, தெரு முனையில் யாரோ வருவது போல தோன்றியது. ஆவலாய் எட்டிப் பார்த்தான்.அவனது தாய் வருவது தெரிந்தது. அவள் வீட்டினுள் நுழைந்தது தான் தாமதம், “ எனக்கு என்ன அம்மா வாங்கிட்டு வந்தீங்க? “ என்றான். “ உனக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். அந்த பையில இருக்கு, எடுத்துக்கோ “ என்றாள் அவனது தாய். “ ஏன் அம்மா எங்கிட்ட சொல்லாம போய்ட்டிங்க?? நான் உங்களை எவ்வளவு தேடினேன் தெரியுமா?? “ என்றான். “ இன்னைக்கு எல்லையம்மன் கோவில்ல விசேஷம். மாசா மாசம் இரண்டாம் சனிக்கிழமை நடக்கும். நானும், ரெண்டு மூனு மாசமா போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா போக முடியல. இன்னிக்கு தெருவுல எல்லாரும் போவதா, பக்கத்து வீட்டு சிவகாமி அம்மா சொன்னாங்க. அதான் டா ராஜா போய்ட்டு வந்தேன்.” என்றாள்.தாயும் மகனும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தந்தை அங்கு வந்தார். இராசேந்திரனைப் பார்த்து, “ உன் தாய் நீ வீட்டிற்கு வரும் போது இல்லைன்னதும், உன் மனம் எவ்வளவு தேடுது, அதே போல் தானே தன் குட்டிகளைக் காணாது, இவைகளின் தாய் இவற்றைத் தேடும்” என்றார். அப்போது தான், இராசேந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. 
          மறுநாள் காலை, தந்தையுடன், குட்டிகளை எடுத்துக் கொண்டு தண்ணீர்ப் பந்தலுக்கு சென்று குட்டிகளை எடுத்த இடத்தில் விட்டான். குட்டிகள் மெல்லிய குரலில் முனகின. பந்தலை விட்டு ஓரமாய் ஒதுங்கினார்கள் தந்தையும் மகனும். அப்போது, எங்கிருந்தோ தாய் நாய் ஓடி வந்தது. தன் குட்டிகளைக் கண்டதும், பாசத்துடன் அவற்றை தம் நாவால் வருடிக் கொடுத்தது. தாயைக் கண்ட குட்டிகள் வாலை ஆட்டி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தின. மன நிம்மதியுடனும், மகிழ்வுடனும் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தான் இராசேந்திரன்.