blank'/> muhilneel: கதை - 7

Wednesday, January 11, 2012

கதை - 7

இலக்கம்: 8


பெங்களூரின் குளிரில் நன்றாக தூங்கி கொண்டுயிருந்தவனின் தூக்கத்தை கெடுத்தது அலைபேசி , வெறுப்புடன் அலைபேசியை எடுத்தான்.தொடர்புகொண்டத்து ஊரிலிருந்து அவரின் அத்தை பையன்தான். பேசி முடித்து தொடர்பை துண்டித்து வெறுப்புடன் படுக்கைவிட்டு எழுத்தான், யாருங்க போன்ல ,என்ன விசயம் என்று அவன் மனைவி கேட்டவுடன் அனைத்தையும் கொட்டிதீர்த்தான் ........

          "ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டாராம்.குறைந்தது பத்து நாட்களாவது  ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களாம். அத்தை வீட்டில், என் அத்தை பையன் சங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அத்தையால் அருகிருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லையாம்.இப்போது சங்கர் நம் இருவரில் யாரையேனும் அங்கு வந்து அம்மாவுடன் இருக்கும்படி கூறுகிறான்" என்று கூறினான் பவன்.
               "நாம எப்படி அங்க போய் இருக்கிறது? எனக்கு இப்போ ஆபீஸ்ல ஆடிட்டிங்.உங்களுக்கோ, போர்டு மீட்டிங் இருக்கு. என்ன பண்றது? இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..அவங்கள ஏதாவது முதியோர் இல்லத்துல சேத்துடலாம்னு. அவங்க தான், பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்க..அவங்க பாத்துப்பாங்க... அப்படின்னு சொல்லிட்டாங்க" என்றாள் அவனது மனைவி பிரியா.இவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக கட்டிலில் படுத்திருந்த அவர்களது ஏழு வயது மகன், பிரவின் கேட்டுக் கொண்டிருந்தான்.அமைதியாக படுத்திருந்த அவன், விழித்து விட்டதை அறிந்ததும்,"என்ன பிரவின், எழுந்திட்டியா??போய் பல் தேய்ச்சு குளி.... என்ன யோசிச்சிட்டு இருக்க??" என்றாள் பிரியா. "இல்லை மம்மி...நாளைக்கி...நானும் நல்லா படிச்சி, அமெரிக்கா எல்லாம் போகணும் அப்படின்னு சொன்னீங்க. அப்போ, நான் போயிட்டா, உங்களை யார் பாத்துப்பா?? உங்களுக்கும் நான், நீங்க சொன்ன முதியோர் இல்லம் எல்லாம் பாத்து தெரிஞ்சி வெச்சுக்கணும் இல்ல.அதை  தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான் பிரவீன்.
            பவனுக்கும், பிரியாவுக்கும் அவர்களை யாரோ மண்டையில் சம்மட்டியால் அடிப்பதாய் உணர்ந்தார்கள்.


No comments:

Post a Comment