blank'/> muhilneel: கதை-4(Modifications in Hint Given)

Wednesday, December 21, 2011

கதை-4(Modifications in Hint Given)

  ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம்.காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது................
          அவருக்காகவே காத்திருந்தது போல், தொலைபேசி மணி ஒலித்தது.ஒருவித நடுக்கத்துடனே ராம் தொலைபேசியை எடுத்தார்."ஹலோ,ராம்சரண் ஹியர்" என்றார்.எதிர் முனையில் ஓர் கரகரப்பான குரல்."ஹலோ ராம், என்ன பொண்ணைக் காணோம் என்றதும் ரொம்ப ஆடிப் போயிட்டியா??" என்றது.ராமிற்கு முகமெல்லாம் வியர்த்துப் போயிற்று."ஹலோ,நீங்க யாரு? எங்க இருந்து பேசறிங்க? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்."உன் பொண்ணு உனக்கு வேணும்னா 10 லட்சம் ரூபாய் எடுத்துட்டு மகாபலிபுரம் ரோட்ல இருக்குற சவுக்குத் தோப்பு கிட்ட வா.போலீஸ் கிட்ட போன, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டும் தொனியில் கூறியது அக்குரல்.வீட்டிலிருந்த நண்பர்கள் அனைவரும்,"போலீஸ் கிட்ட போக வேண்டாம்.கேட்ட பணத்தைக் குடுத்துட்டு பொண்ண கூட்டிட்டு வந்துரலாம்" என்றனர்.ராம்சரணுக்கும் அதுவே சரியெனப் பட, அவரும் அவசர அவசரமாய்,பீரோவில் இருந்த  பணத்தை எடுத்து பெட்டியில் அடுக்கினார்.பெட்டியை எடுத்துக் கொண்டு காரிலேறி விரைவாகப் புறப்பட்டார்.
            சவுக்குத் தோப்பிற்கு அருகில் சென்றதும்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,பெட்டியை எடுத்துக் கொண்டு, சாலையோரம் நின்று எவரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தார்.கால் மணி நேர காத்திருப்பிற்குப் பின், ஒருவன்    வருவது தெரிந்தது.அவன் ,ராம்சரணை
தோப்பிற்குள் வருமாறு சைகை காட்டினான்.உள்ளே சென்ற ராம்சரண்,அங்கு நின்றிருந்த இளைஞனை  பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவன்,ராம்சரனின்  நண்பர் ஜெயராமின் மகன் விதார்த்.அவன்,ராம்சரணை அருகிருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அந்த வீட்டில், அறையின் ஒரு மூலையில் அவரது மகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் தான்,ராம்சரணுக்கு உயிரே வந்தது.
        விதார்த் பேச ஆரம்பித்தான். "எங்க அப்பா கிட்ட வியாபாரம் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கினீர்கள்.என் அப்பாவும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்,எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்காமல், உங்களது நட்பின் மீது கொண்ட நம்பிக்கையால்,உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.அதை வைத்து நீங்கள் வியாபாரம் செய்து முன்னேறி விட்டர்கள்.வசதியாக வாழ்கிறீர்கள்.எங்களது வியாபாரம் நொடித்ததால், சென்ற மாதம் என் தந்தை உங்களிடம் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் அவரை அவமானப் படுத்தி,அவரை கேவலமாக பேசி அனுப்பி விட்டர்கள்.செய்நன்றி மறந்த உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் உங்கள் குழந்தையைக் கடத்தினேன்.உங்களது தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்." என்றான்.தலை குனிந்த ராம்சரண்,என்னை மன்னித்து விடுப்பா....இந்த பணத்தைப் பெற்றுக் கொள்" என்று கூறி, பணப்பெட்டியை விதார்திடம் கொடுத்தார்.  
     அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர்.

http://www.eegarai.net/t75627p150-5#698899 

No comments:

Post a Comment