blank'/> muhilneel: Top Most Interesting Facts About Taj Mahal

Monday, November 7, 2011

Top Most Interesting Facts About Taj Mahal



1. Taj Mahal appears pink in the morning, white in the day and changes its color to golden in the moon light.
 2. The pillars surrounding Taj Mahal are slightly tilted outwards so that in the event of an earthquake they will fall away from the tomb.
 3. An identical Taj Mahal was supposed to be built in black marble instead of white. The base of it can still be seen across the river.
 4. Over 1,000 elephant were used to transport building materials during the construction.
 5. In all, 28 types of precious and semi-precious stones were inlaid into the white marble.
 6. The Taj Mahal in India is perfectly symmetrical, except for one thing. The two tombs inside are not equal in size. This is because the male tomb has to be larger than the female tomb.
 7. The Taj Mahal costs in today’s money about US $100 million.
 8. It took 22 years and 22,000 people to complete the Taj Mahal.
 9. Twenty thousand workers were employed for the construction work of the Taj Mahal.
 10. Emperor ordered to chop off the hands of the workers who had constructed the Taj Mahal so no one could make anything like it.

Source: http://lifestyle.iloveindia.com/lounge/facts-about-taj-mahal-3028.html

          தாஜ்மஹாலை எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று) ஒரே மாதிரியாகத்தான் காட்சித் தரும்.மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜமஹால் கட்டும் பணி தொடங்கியது.யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒருஇடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பணமாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது.கட்டடக்கலை-தோட்டக்கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கி உழைத்தனர்.வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ்தாத் இஸா அஃபாண்டி,லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்... இப்படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப் பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்-ஆனிலிருந்து வாசக ங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜகான்.அதற்காக,பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத்தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும்
ஒரே கையெழுத்து அவருடையதுதான்!


           தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக்கிறது.மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலையுயர்ந்த மணி வகைகளும்  பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.தொலைவிலிருந்து மட்டுமல்ல... வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்... உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக்  கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.

பேரரசன் ஷா ஜகானே தாஜ்மஹால் கட்டிடத்தைப் பற்றிப்
பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

“குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால்,
மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது
பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான்.

ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால்,
அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு
உண்டாகும்.

சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர்.
படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம்
எழுப்பப்பட்டுள்ளது”.

Source: eegarai.net

No comments:

Post a Comment