blank'/> muhilneel: பதினாறு செல்வங்கள்

Thursday, November 10, 2011

பதினாறு செல்வங்கள்



௧. கல்வி

௨. அறிவு

௩. ஆயுள்

௪. ஆற்றல்

௫. இளமை

௬. துணிவு

௭. பெருமை

௮. பொன்

௯. பொருள்

௧0. புகழ்

௧௧. நிலம்

௧௨. நன்மக்கள்

௧௩. நல்லொழுக்கம்

௧௪. நோயின்மை

௧௫. முயற்சி

௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர்  
           கபடு வாராத நட்பும்
குன்றாத வளமையுங், குன்றாத இளமையும்
          கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும்
         தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும்
        தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு
       துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும், உதவி பெரிய
      தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
     ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
   அருள்வாமி! அபிராமியே!

                                      - அபிராமி பட்டர்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

  • கலையாத கல்வி
  • கபடட்ற நட்பு
  • குறையாத வயது
  • குன்றாத வளமை
  • போகாத இளமை
  • பரவசமான பக்தி
  • பிணியற்ற உடல்
  • சலியாத மனம்
  • அன்பான துணை
  • தவறாத சந்தானம்
  • தாழாத கீர்த்தி
  • மாறாத வார்த்தை
  • தடையற்ற கொடை
  • தொலையாத நிதி
  • கோணாத கோல்
  • துன்பமில்லா வாழ்வு

No comments:

Post a Comment