blank'/> muhilneel: May 2011

Tuesday, May 24, 2011

அறிவியல் தமிழ்

         

         அறிவியலின் கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வளர்ச்சியினால் நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறிக் கொண்டே போகிறோம்.
         "அறிவியல் தமிழ் " - இன்று அறிவியலின் புதிய பரிணாமத்தினை விளக்கும் தொடர்.அறிவியலின் சிந்தனைகளை தமிழ் மொழியின் மூலம் விளக்குவதே அறிவியல் தமிழ் ஆகும்.அறிவியல் வளர்ச்சியையும் அதனால் ஏற்படும் முன்னேற்றங்களையும்,நன்மைகளையும் அனைத்து  தமிழ் மக்களிடமும்  கொண்டு சேர்த்தல் வேண்டும்.இதற்கு அறிவியல் வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள்,  முன்னேற்றங்கள் அனைத்தையும் தமிழ் மொழியின் வாயிலாக மக்களிடம் சேர்ப்பித்து அவர்களிடையே அறிவியல் முன்னேற்றம் பற்றிய ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
         அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் இணையம் ஆகியவை அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும்.கலை மற்றும் அறிவியல் துறைகளில் முன்னேற்றம்  ஏற்பட அறிவியல் தமிழ் முன்னோடியாய் அமையும்.கலை சொற்களின் (Technical Terms) பயன்பாட்டினை அதிகரிக்கச் செயதால் அது அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும்.கலைச்சொற்களிற்கான அகராதிகள் உருவாக்கப்பட்டால் தமிழ் மொழியின் பயன்பாடு அறிவியலில் மென்மேலும் உயரும்.

சிரிக்க மறக்க கூடாது!


சிரிப்பதனால் நமது வாழும் காலம் நீடிக்கிறது. இது மருத்துவ ரீதியாக ஒ.கே செய்யப்பட்டுள்ளது. நன்கு சிரித்தால் உடலும், உள்ளமும் உற்சாகம் பெறுகின்றன என்று மருத்துவம் சொல்கிறது. உடலும், உள்ளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தால் அப்புறம் உலகமே உங்கள் வசம் அல்லவா!
உடல் உற்சாகமின்மை உடல் நோயிலும், உள்ளத்தின் உற்சாகமின்மை சோர்வு முயற்சியின்மை, வெறுப்பு என்று பற்பல நோயிலும் அல்லவா கொண்டு தள்ளி விடும். வயிறு குலுங்க குலுங்க சிரிப்பதும், ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாக மாறுகிறது. இதன்மூலம் வயிறு, நுரையீரல், இதயம் ஆகியவை நல்ல பயிற்சி பெறுகின்றன. இன்று உலகில் 150 கோடி பேருக்கு மேல் மகிழ்ச்சியின்றி மனச்சோர்வுடன் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் சிரிப்பதை மறந்துவிட்டனர். மனதை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்தால் நம் மூளையில் டோபாமைன், செரோடானின், என்டார்பின் ஆகிய ரசாயன பொருள்கள் உற்பத்தியாகின்றன. இவை மனச்சோர்வை நீக்கி மனதிற்கும் மூளைக்கும் புத்துணர்வு தரும். சோகங்களை தாங்கும்; தைரியத்தை தரும் என்கிறது அறிவியல். இதை நமது முன்னோர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை கருத்துகளாக கூறினார்.

Dinamalar Siruvarmalar May 20,2011